வழி நடத்தும் தன்மை Covina, California, USA 65-1207 1நன்றி, சகோ. வில்லியம்ஸ். சகோ. ஸ்டைல் அவர்களுக்கும் அவர் மனைவி மற்றும் இந்த விருந்தில் இன்றிரவு கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இங்கு நான் உள்ளது உண்மையாகவே பெரிய சிலாக்கியம். நாம் இவ்வாறு தொடங்கின முதற்கொண்டு இந்நேரத்தை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த சீமாட்டிக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அவளுடைய பெயர் என் நினைவுக்கு வரவில்லை. சற்று முன்பு அவர்கள் ஒரு பெட்டி கிறிஸ்துமஸ் மிட்டாய்களை காரில் கொண்டு வைத்ததாக பில்லி என்னிடம் கூறினான். அந்த சகோதரியின் பெயர் எனக்கு ஞாபகமில்லை, அவள் இங்குள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்தவர்கள். இதுவே, எனக்குக் கிடைக்கப்பெற்ற முதல் கிறிஸ்துமஸ் பரிசு. அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். இன்றிரவு... சோனில் இப்பொழுது இரவு ஒன்பது மணி அடித்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இங்கு இப்பொழுது எட்டுமணி அடித்து பத்து நிமிடங்கள் கழிந்திருக்குமென்று நினைக்கிறேன். எனவே, நாம்... நீண்ட நேரம் பிரசங்கிக்க எனக்கு போதிய மூச்சு உள்ளது என்று ஜனங்களிடையே பொதுவான ஓர் எண்ணம் நிலவி வருகின்றது. எனவே, நான் நம்புகிறேன்... (சபையோர், கை தட்டுகின்றனர்- ஆசி) நன்றி... இங்கு சில நல்ல மனிதர்கள் இருக்கின்றனர். உங்களுக்கு என் நன்றி. 2அதிகமாக பிரசங்கம் செய்து வந்ததால் இன்றிரவு களைப்பாயுள்ளது. நான் வெகு நாட்களாக ஷ்ரீவ்போர்ட்டிலிருந்து தொடங்கி தேசம் முழுவதிலும் ஒவ்வொரு இரவும் பிரசங்கித்து, இப்பொழுது இவ்வழி வந்துள்ளேன். அதன் விளைவாக நான் பலவீனமடைந்து, ஜலதோஷமும் பிடித்து, தொண்டை கரகரப்பாயுள்ளது. நான் ஷ்ரீவ்போர்ட்டிலிருந்து தொடங்கினேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என் தலைமயிர் கொழிந்துவிட்டது. வடபாகத்தில் நான் பிரசங்கிக்கும் போது எனக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க, ஒரு டோப்பாவை அணிந்து கொள்வேன். ஆனால், ஷ்ரீவ்போர்ட்டுக்கு சென்றபோது, அதை மறந்து வைத்துவிட்டேன். அதனால், எனக்கு ஜலதோஷம் பிடித்துவிட்டது. குளிர்ந்த காற்று அடிக்கும் போது, என்ன நேரிடுகிறதென்று நமக்குத் தெரிவதேயில்லை. அது எதேச்சையாக தலையிலிருந்து எடுக்கப்பட்டது. தலையிலுள்ள தோல் இன்னமும் மிருதுவாயுள்ளதால், சிறிது வியர்த்த போது என் தொண்டையை பாதித்துவிட்டது. அதன் விளைவாக அநேக கூட்டங்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது. எனவே, இன்றிரவு என் தொண்டை சிறிது கரகரப்பாயுள்ளது. 3நாங்கள் மலையைக் கடந்து வந்தபோதும், நடைபெற்ற கூட்டங்களிலும் எங்களுக்கு அருமையான தருணம் உண்டாயிருந்தது. நேற்று இரவு, முழு சுவிசேஷ வர்த்தகரின் மற்ற சங்கத்திலுள்ள சகோதரர்களுடன் நாங்கள் அருமையான நேரத்தை செலவழித்தோம். அங்கு, அதிகம் பேர் வந்திருந்தனர். ஜனக்கூட்டம் திரளாயிருந்தது. ஜனங்கள் மிகவும் பயபக்தியுடன் இருந்தனர். அவர்கள் மிகவும் நல்லவர்கள். எனவே, முழு சுவிசேஷ வர்த்தகர்களின் ஒரு பாகமாக இருப்பது எனக்கு நல்லுணர்வைத் தருகின்றது. என்னிடம் ஒரு செய்தியுள்ளது. அது தேவனிடத்திலிருந்து வந்ததென்று உணருகின்றேன். சிலருக்கு வினோதமாயுள்ளது... என்னால் ஒன்றும் செய்ய முடியாது... நான் என்னவாயிருக்கிறேனோ, அவ்வாறே நான் இருக்க வேண்டும். நான்... நான் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்க நினைக்கவில்லை. காலம் மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 4நீங்கள் ஒரு சுவரை நேராகக்கட்டும் வரை, எந்த சிரமமும் இருக்காது. கொத்தனார்கள் ஒரு வரிசையில் கட்டிக் கொண்டே செல்லலாம். ஆனால், நீங்கள் மூலைகளில் திருப்பிக் கட்டும் போது, அப்பொழுதுதான்... நாம் ஒரு சுவற்றைக் கட்டவில்லை, நாம் ஒரு வீட்டை கட்டுகிறோம். எனவே, இந்த திருப்பங்கள் வந்தே தீரும். இவை மார்ட்டின் லூத்தர், ஜான் வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர் காலங்களில் வந்தன. அது மறுபடியுமாக இப்பொழுது வந்துள்ளது. எனவே நாம்... மூலைகளில் திருப்பிக் கட்டுதல் கடினமான செயல். ஆனால், நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஏனெனில், அது எவ்வளவு கரடு முரடாயிருந்த போதிலும் ஜனங்கள் நூறு சதவிகிதம் அதை ஏற்றுக் கொண்டனர். எனவே, நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி செலுத்துகிறேன். நாம் வேதாகமத்தைத் திறப்பதற்கு முன்பு, உங்களுக்கு விருப்பமானால், நமது தலைகளை வணங்கி அதன் ஆக்கியோனுடன் சிறிது நேரம் பேசுவோம். 5அன்புள்ள தேவனே, எங்கள் இரட்சகரும் உமது குமாரனுமாகிய இயேசுகிறிஸ்துவை நாங்கள் அறிந்துள்ள சிலாக்கியத்திற்காகவும், எங்கள் பாவங்கள் இலவசமாக மன்னிக்கப்பட்டதற்காகவும், அவருடைய இரத்தம் எங்கள் பாவங்கள், அக்கிரமங்கள் அனைத்தையும் மூடுவதற்கு போதுமானதாக இருப்பதற்காகவும் இன்றிரவு நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவை முழுவதும் அகற்றப்பட்டு, தேவனுடைய மறதி என்னும் கடலில் போடப்பட்டன. அவருடைய மணவாட்டி கலியாண விருந்தின் போது, தேவனுடைய குமாரனை மணக்க, தூய்மையாயும் கலப்படமற்றவளாயும் நிற்பாள். எல்லாவற்றிற்கும் போதுமான இதற்காக உம்மை நாங்கள் எவ்வளவாக துதிக்கிறோம்! எங்களுடைய தகுதியின் மேல் நாங்கள் சார்ந்திராமல், நீர் எங்களுக்காக செய்த அந்த தகுதியின் பேரில் சார்ந்திருக்கிறோம் என்னும் விசுவாசத்தை நாங்கள் பெற்றுள்ளோம். நாங்கள் மிகுந்த நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். வெளிநாடுகளிலும், தேவனுக்காக பசி தாகம் கொண்ட மக்கள் அடங்கிய நாடுகளிலும் இந்த சகோதரர்களுக்கு கிடைத்த வெற்றிக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவரே, இவர்கள் மறுபடியும் அவ்விடங்களுக்குச் செல்லும் போது, இவர்கள் தேவனுடைய ராஜ்யத்துக்குள் கொண்டு வந்த பிள்ளைகள், அவர்கள் அவ்வாறு கொண்டு வரும் பிள்ளைகளுக்கு முப்பாட்டிகளாகவும், முப்பாட்டனார்களாகவும் இருப்பார்களாக. பிதாவே, இதை அருளும். இன்றிரவு எங்களை ஒருமித்து ஆசீர்வதியும். பரிசுத்த ஆவி தாமே எங்களுக்குத் தேவையானவைகளை அருளுவாராக. நாங்கள் பேசத்தகாத காரியங்களுக்கு எங்கள் வாய்களை நீர் அடைத்து, நீர் எங்களுக்கு கூற போகிறவைகளை ஏற்றுக்கொள்ள எங்கள் இருதயங்களை திறந்தருளும். பிதாவே, இதை அருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். 6இன்றிரவு நான் சற்று நேரம் பேச விரும்பும் ஒரு சிறு பொருளுக்காக நாம் வேதாகமத்தை திருப்புவோம். அது, பரி.மாற்கு 10ம் அதிகாரத்தில் உள்ளது. எனக்கு... சில வருடங்களுக்கு முன்பு நான் பிரசங்கம் பண்ணும் போது, குறிப்பும் கூட எழுதிக் கொண்டு செல்லமாட்டேன். எல்லாமே என் ஞாபகத்தில் இருக்கும். அப்பொழுது வேதாகமத்தைப் படிக்க மூக்குக் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால், இப்பொழுது நான் இருபத்தைந்து வயதை இருமுறை கடந்துவிட்ட காரணத்தால், முன்பு நான் செய்திருந்தது போல் இப்பொழுது செய்வது எனக்கு சிறிது கடினமாயுள்ளது. இது தேய்ந்து போன காரைப்போன்றது. ஆயினும் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். உ, ஊ, மறுபடியும் வார்ப்பிக்கப்பட, உபயோகமற்ற இரும்புத் துண்டுகள் குவியலில் நான் செல்லும் வரைக்கும், நான் மெல்ல ஓடிக்கொண்டிருக்க விரும்புகிறேன். பரி.லூக்கா , 10ம் அதிகாரம்... நான், 21ம் வசனம் என்று கூறினேன் என்று நினைக்கிறேன். இது எங்கேயுள்ளது என்று கண்டு பிடித்தால். நான் தவறாகக் கூறிவிட்டேன். அது, பரி.மாற்கு. மன்னிக்கவும். 7பரி. மாற்கு, 10ம் அதிகாரம் 21ம் வசனத்திலிருந்து படிக்க விரும்புகிறேன். 17ம் வசனத்திலிருந்தே தொடங்கலாம். பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடி வந்து, அவருக்கு முன்பாக முழங்கால் படியிட்டு: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்து கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே? விபச்சாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அவனை பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்து: உன்னிடத்தில், ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்கு கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றி வா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். மாற்கு;10: 17-22 வாசித்த அவருடைய வசனங்களைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு நான், ''என்னைப் பின்பற்றி வா;'' என்னும் பொருளை தெரிந்து கொண்டு பேச விரும்புகிறேன். பேசப்போகும் விஷயம், ''வழி நடத்தும் தன்மை“ என்பதாம். 8இது வினோதமானது. இன்றைக்கு நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது, நான் நினைத்தேன். இவ்வளவு நாட்களாக ஒவ்வொரு இரவும், நான் கொண்டுள்ள செய்தியின் அடிப்படையில், தேவன் எனக்கு அளித்தவைகளை நான் பிரசங்கித்துக் கொண்டு வந்திருக்கிறேன். இன்றிரவு இந்த அதிகாரத்தில் உள்ள சம்பவத்தை, ஒரு வித்தியாசமான கருத்தின் அடிப்படையில் அணுகலாம் என்று எண்ணினேன். அநேகமுறை இதை நாம், ''ஐசுவரியமுள்ள வாலிப அரசன்'' என்று அழைத்து, இதைக் குறித்து பேசியிருக்கிறோம். இங்குள்ள என் அநேக போதகர் சகோதரர் இதை வெவ்வேறு கோணங்களில் அணுகியிருப்பார்கள் என் பதில் ஐயமில்லை. இன்றிரவு, “வழி நடத்தும் தன்மை” என்னும் பொருளை ஒரு வித்தியாசமான வழியில் அணுகலாம் என்று உத்தேசித்துள்ளேன். 9இதை நினைவில் கொள்ளுங்கள். நம் ஒவ்வொருவருக்கும் - வாலிபரானாலும், வயோதிபரானாலும் - நமது வாழ்க்கையில் நாம் எடுத்து வைத்த முதல் அடியில், யாரோ ஒருவர் நம்மை வழி நடத்த வேண்டியிருந்தது. அது உண்மை. நீங்கள் எடுத்து வைக்கப்போகும் கடைசி அடியிலும் கூட யாரோ ஒருவர் உங்களை வழி நடத்திச் செல்வார். யாரோ ஒருவர் உங்களை நடத்த வேண்டும். தேவன் நம்மை செம்மறியாடுகளுக்கு ஒப்பிடுகிறார். செம்மறியாடுகளை வளர்ப்பவர்கள் அவைகளின் தன்மையை அறிந்துள்ளனர். செம்மறியாடுக்கு தானாகவே தன் வழியில் செல்ல முடியாது. அது வழி நடத்தப்பட வேண்டும். அவை கொல்லப்படுவதற்காக கொண்டு செல்லப்படும் போது, ஒரு வெள்ளாடு அவைகளை வழி நடத்திச் செல்கின்றது என்று நாம் காண்கிறோம். அவைகளைக் கொல்வதற்காக கொண்டு செல்லும் குழாயை (chute) அவை அடைந்தவுடனே, வெள்ளாடு குதித்து ஓடி விடுகின்றது. செம்மறியாடுகளோ கொல்லப்படுகின்றன. எனவே அவை... ஒரு செம்மறியாடு தன் வழியை அறியாது என்று நாம் காண்கிறோம். 10நான் இந்தியானாவில் வேட்டை அதிகாரியாக இருந்த போது, ஒருமுறை அங்கு நடந்த சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. நான் வயலில் சென்று கொண்டிருந்த போது, மிகவும் பரிதாபமான அழுகைக் குரலைக் கேட்டேன். அது ஒரு சிறு ஆட்டுக்குட்டியின் அழுகைக் குரல். அது தாயைக் காணாமல் அழுது கொண்டிருந்தது. அதற்கு தாயிடம் செல்ல வழி தெரியவில்லை. தாய்க்கும் அதன் குட்டியிடம் செல்ல வழி தெரியவில்லை. அந்த ஆட்டுக்குட்டியை நான் தூக்கினேன். அது அமைதியாக என் மேல் படுத்து கொண்டது. என் கைகளில் அதை தூக்கிக் கொண்டு நடந்து சென்றேன். அதன் அழுகை குரலைக் கேட்டு நான் உதவி செய்தேன். அது எப்படி தன் தலையை என் மீது பாதுகாப்பாக வைத்துக் கொண்டது தெரியுமா! நான் உதவி செய்யப் போகிறேன் என்று அது அறிந்து கொண்டது. அப்பொழுது நான், எனக்காக பிளவுண்ட காலகாலங்களிலுள்ள கன்மலையே, கர்த்தராகிய இயேசுவின் கரங்கள் என்னை தூக்கி அணைத்துக் கொள்ளட்டும். என் அருமையானவர்களுடன் கூட இருக்க நான் வீடு செல்ல போகிறேன் என்பது எனக்கு திருப்தி அளிக்கட்டும்'' என்று எண்ணினேன். என் வாழ்க்கை பயணத்தின் முடிவில், ஆண்டவரே, உமது கரங்களில் என்னை அணைத்து கொள்ளும். அப்பொழுது நான் நதியின் வழியாக தூக்கிச் செல்லப்பட்டு மறுகரையை அடைவேன். அங்கு துயரமோ வியாதியோ எதுவுமில்லை. நான் நேசித்த என் அருமையானவர்களுடன் அங்கு நான் இருப்பேன்'' என்று நினைத்தேன். 11நீங்கள் இயற்கையை கவனிப்பீர்களானால், அதில் பெரிய காரியங்கள் அடங்கியுள்ளன. தேவன் படைத்த ஒவ்வொன்றையும் நான் காணும்போது, அவரே இயற்கையை படைத்தவர். இயற்கை தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. இயற்கை அனைத்துமே அவ்வாறு உள்ளது. நீங்கள் கவனிப்பீர்களானால், எல்லாமே... நான் சென்ற மாலை கூறினேன் என்று நினைக்கிறேன். ''இயற்கை தேவனைக் குறித்து சாட்சி பகருகின்றது. ''உங்களிடம் வேதாகமம் இல்லாமல் போனால், நீங்கள் இயற்கையின் போக்கை கவனித்து, வேதாகமம் உண்மையென்று அறிந்து கொள்வீர்கள். நான் உலகத்தை சுற்றி சுற்றிவரும் பெரும்பேறு எனக்கு இருந்தது. நான் அநேக கூட்டங்களைக் கண்டிருக்கிறேன். அநேக மதங்களைக் கண்டிருக்கிறேன் - முகம்மதிய மதம். நான் குரானைப் படித்திருக்கிறேன். நான் ஷியாக்கள், ஜைனர்கள், முகம்மதியர்கள், புத்த மதத்தினர், இன்னும் அநேக மதத்தினரை கண்டிருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தை கடைபிடித்து கோட்பாடுகளின் புத்தகத்தையும் பிரமாணங்களின் புத்தகங்களையும் கொண்டுள்ளன. ஆனால் நம்முடைய வேதாகமம் மாத்திரமே சத்தியம், நமது தேவன் ஒருவர் மாத்திரமே சரியானவராக இருக்கிறார். ஏனெனில், அந்த மதங்களை நிறுவன ஒவ்வொருவரும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, இப்பொழுதும் அங்கேயுள்ள கல்லறைகளை அவர்கள் சுட்டிக் காண்பிக்க வேண்டும். ஆனால், கிறிஸ்தவ மார்க்கம் ஒன்று மாத்திரமே திறந்த கல்லறையைச் சுட்டி காண்பித்து, அதில் அடக்கம் பண்ணப்பட்டிருந்தவருடைய பிரசன்னத்தில் வாழ முடியும். அவர் உயிரோடிருக்கிறார். அவர் முன்பிருந்த தேவன் அல்ல, இப்பொழுதும் இருக்கிற தேவன். ''நான் இருந்தேன்'' அல்லது, ''நான் இருக்கப் போகிறேன்'' என்றல்ல, ''நான் இருக்கிறேன்.'' 12சபை காலங்களைக் குறித்து நான் பேசின போது (அந்த புத்தகங்கள் வெளிவரவிருக்கின்றன. இயற்கை தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறினேன். நான் ஏன் அப்படி... சபை காலங்களைக் குறித்து நான் எழுதினவை. சபையும் இயற்கை போலவே வளர்ந்து முதிர்வடைந்துள்ளதை நாம் காண்கிறோம். அன்றொரு நாள் நாம் காலையில் எவ்வாறு சூரியன் உதயமாகின்றது என்பதைக் குறித்து பேசினோம். அப்பொழுது, அது பலவீனமான ஒரு சிறு குழந்தை. அதற்கு பலமேயில்லை. ஆனால் சிறிது நேரம் கழிந்தவுடன், அது பலமடைந்து கொண்டே வருகிறது. காலை எட்டு மணிக்கு அது பள்ளிக்கு செல்லும் வளர்ச்சியை அடைகின்றது. காலை பதினொன்று மணிக்கு, அது பள்ளியை விட்டு வெளியே வந்து வேலைக்கு செல்கின்றது. மாலை மூன்று மணிக்கு அது நடுத்தர வயதிலிருந்து வயோதிப வயதுக்கு மாறுகின்றது. பிறகு மாலை பொழுதில் அது மரிக்கிறது. அதுதான் சூரியனின் முடிவா? இல்லை, அது அடுத்த நாள் காலை மீண்டும் உதயமாகி ஜீவன், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் உண்டு என்பதற்கு சாட்சியாக விளங்குகின்றது. 13நாம் மரங்களை கவனிக்கிறோம். அவை எப்படி வளருகின்றன என்றும், என்ன செய்கின்றன என்றும் நாம் காண்கிறோம். சிலநாட்களுக்கு முன்பு நான் கென்டக்கியில் இருந்தேன். எனக்கு அணில் வேட்டையாடுவதில் பிரியம். இந்த ஆண்டின் இலையுதிர் காலத்தின் போது, என் நண்பனுடன் அங்கு நான் அணில் வேட்டைக்கு சென்றிருந்தேன். அங்கு மிகவும் உலர்ந்திருந்தது. சாம்பல் நிறமுள்ள அணில்களை வேட்டையாடின எவரும், இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கும் போது, அவைகளைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை அறிவர். அவை தப்பி ஓடுவதைக் காணும் போது, ஜாலவித்தையைக் கொண்டு அவைகளைக் காணாமற் போகச் செய்யும் ஹவுடினி (Houdini) என்பவன் கற்றுக் குட்டியாகிவிடுகிறான். அவைகளை ஐம்பது கெஜ தூரத்திலிருந்து சிறு குண்டுகளினால் சுட்டு வீழ்த்துவதென்பது, ஒரு சிறந்த வேட்டைக்காரனால் மாத்திரமே முடியும். 14என் நண்பரான திரு. உட் - அவர், ''யேகோவா சாட்சிகள்'' ஸ்தாபனத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர் - என்னுடன் இருந்தார். நாங்கள்... அவர் என்னிடம், ''பண்ணை ஒன்று வைத்துள்ள ஒரு மனிதனை அறிவேன். அங்கு நிறைய ஹாலர்கள் (hollars) உள்ளன'' என்றார். இந்த அணில்களை நாங்கள் ஹாலர்கள் என்று அழைப்பதுண்டு. உங்கள் எத்தனை பேருக்கு 'ஹாலர்' என்றால் என்னவென்று தெரியும்? சரி, அப்படியானால், நீங்கள் கென்டக்கியின் எந்த பாகத்தைச் சேர்ந்தவர்கள்? பாருங்கள்? நானும் அந்த இடத்தை தான் சேர்ந்தவன். அண்மையில் முழு சுவிசேஷ வர்த்தகர் சங்கங்களில் நான் கூறினது போல்... இதைக் குறித்து நான் சகோ. வில்லியம்ஸ் இன்னும் மற்றவர்களிடம் கூறியுள்ளேன். அவர்கள், ''இப்பொழுது, நாம் எழுந்து தேசிய பாடலைப் பாடுவோம்'' என்று கூறினபோது, நான், ''என் பழைய கென்டக்கி வீடு'' என்னும் பாடலை பாடினேன், யாருமே என்னுடன் சேர்ந்து அதை பாடவில்லை. அந்த பாடல் ஒன்று மாத்திரமே நான் அறிந்திருந்தேன். எனவே நாங்கள்... 15சரி, ஐயா. (சகோ. பிரான்ஹாமிடம் ஒரு சீட்டு கொடுக்கப்படுகின்றது - ஆசி). ''இங்குள்ள ஒரு ஸ்திரீக்கு மூக்கிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. அவளுக்காக ஜெபிக்கவும்.'' நாம் ஜெபம் செய்வோம், அன்புள்ள தேவனே, உம்மை வேண்டி கொள்கிறேன். கர்த்தாவே, நீர் மகத்தான பரிகாரி. உமது கிருபையும் இரக்கமும் இப்பொழுதே, இந்த அருமை ஸ்திரீயை தொட்டு, இரத்தம் வடிந்து கொண்டிருப்பதை நிறுத்த வேண்டுமென்று வேண்டி கொள்கிறேன். விசுவாசிக்கும் ஜனங்களாகிய நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். இந்த ஸ்திரி தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அனுபவிக்கவும், ஜனங்களுடன் ஐக்கியங்கொள்ளவும் இங்கு வந்திருக்கிறாள். கர்த்தாவே, இப்பொழுதே நீர் சத்துருவைக் கடிந்து கொண்டு, இரத்தம் வடிவதை நிறுத்துமாறு உம்மை வேண்டி கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். (நாம் அதை விசுவாசிக்கிறோம்...?) 16நான் எழுதி வைத்துள்ள சில குறிப்புகளையும் வேத வாக்கியங்களையும் ஆதாரமாகக் கொண்டு பிரசங்கிப்பதற்கு எனக்கு உணர்வு தோன்றுவதற்காக, இந்த சிறு கதையை தொடர்ந்து கூற விரும்புகிறேன். சகோ. உட் என்னிடம், ''நாம் சென்று, இந்த வயோதிபரைக் காண்போம். அவருடைய பண்ணையில் நிறைய ஹாலர்கள் இருக்கின்றன. ஆனால், அவர் ஒரு நாத்திகன்... நாம் அங்கு சென்றால், நம்மை திட்டுவார்'' என்றார். நான், ''நமக்கு இங்கு அணில்கள் கிடைக்கவில்லையே'' என்றேன். நாங்கள் இரண்டு வாரங்களாக அங்கு முகாமிட்டு தங்கியிருந்தோம். எங்கள் மேல் அழுக்கு படிந்திருந்தது, முகத்தில் தாடியும் வளர்ந்திருந்தது. அவர், ''சரி, போகலாம்'' என்றார். 17நாங்கள் இருபது மைல் பயணம் செய்து அங்கு அடைந்தோம். முன்பு ஒரு சமயம், அந்த இடத்திலுள்ள மெதோடிஸ்டு காம்ப் மைதானத்தில், நான் மூன்று இரவுகள் இருந்திருக்கிறேன். அப்பொழுது கர்த்தர், பெரிய காரியங்களை செய்தார். மெதோடிஸ்டு மக்களினிடையே மகத்தான சுகமளிக்கும் ஆராதனை நடந்தது. நாங்கள் சில குன்றுகளையும் முகடுகளையும் கடந்து செல்ல வேண்டியதாயிருந்தது. நீங்கள் கென்டக்கியின் கரடுமுரடான அமைப்பை அறிந்திருந்தால் எந்தவிதமான இடத்திற்கு நீங்கள் செல்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நாங்கள் பயணம் செய்து ஒரு வீட்டை அடைந்தோம். அங்கு ஒரு வயோதிபர் உட்கார்ந்து கொண்டிருந்தார் - இரு வயோதிபர்கள், தங்கள் தொப்பிகள் முகத்தை மூடினவாறு, உட்கார்ந்து கொண்டிருந்தனர். சகோ. உட், ''அதோ அவர். அவர் மிகவும் முரட்டுத்தனம் கொண்டவர், பிரசங்கி என்னும் சொல்லையே அவர் வெறுப்பவர்'' என்றார். ''அப்படியானால் நான் காரிலேயே உட்கார்ந்து கொள்வது நல்லது. நாம் வேட்டையாடாமல் இருந்துவிடலாம். எதற்கும் நீங்கள் சென்று, நாங்கள் வேட்டையாடலாமா என்று அவரை உத்தரவு கேளுங்கள்'' என்றேன். அவர் காரிலிருந்து இறங்கி, நடந்து சென்று, அவர்களுடன் பேசினார். கென்டக்கியில் எப்பொழுதுமே, ''உள்ளே வாருங்கள்'' என்று அழைக்கும் முறை உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். எனவே, அவர் அங்கு சென்று, ''உங்கள் இடத்தில் சிறிது நேரம் வேட்டையாடலாமா என்று நினைக்கிறேன்'' என்றார். 18அங்கு அந்த வயோதிபர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருக்கு ஏறக்குறைய எழுபத்தைந்து வயதிருக்கும். அவர் வாயில் புகையிலை மென்று கொண்டு, துப்பிக் கொண்டிருந்தார். அவர், ''உன் பெயர் என்ன?'' என்று கேட்டார். அவர், “என் பெயர் உட்'' என்று விடையளித்தார். அந்த வயோதிபர், முன்பு வாழ்ந்திருந்த வயோதிபர் ஜிம்முக்கு நீ சொந்தமா?'' என்று கேட்டார். அவர், “ஆம், நான் அவருடைய மகன். நான் பாங்க்ஸ் குடும்பத்தினன்'' என்றார். வயோதிபர், ஜிம் வயோதிபர் மிகவும் நேர்மையானவர்“ என்று சொல்லிவிட்டு, ''உன் விருப்பப்படி வேட்டையாடு'' என்றார். ''அவர், நீ தனியாகவா வந்திருக்கிறாய்?'' என்று கேட்டார். உட், ''இல்லை, என் போதகர் அங்கிருக்கிறார்'' என்றார். அவர், ''என்ன?'' என்று கேட்டார். உட், ''என் போதகர் காரில் அமர்ந்திருக்கிறார். அவர் என்னுடன் வேட்டையாட வந்திருக்கிறார்'' என்றார். வயோதிபர், ''உட், நீ எங்கு சென்றாலும், உன்னுடன் ஒரு போதகரைக் கூட்டிச் செல்வதற்கு நீ அவ்வளவு தாழ்வாகிவிட்டாயா என்ன?'' என்றார். 19அவர் முரட்டு சுபாவம் கொண்ட வயோதிபர், நான் காரை விட்டு இறங்கலாமென்று எண்ணி, காரிலிருந்து வெளி வந்து, சுற்றும் நடந்து கொண்டிருந்தேன். அந்த வயோதிபர் நீர் போதகரா?'' என்று கேட்டார். நான், ''ஆம், ஐயா'' என்று பதிலளித்தேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார் (என் மேலெல்லாம் அணில் இரத்தமும், அழுக்கும் படிந்திருந்தது). நான், ''என்னைக் கண்டால் அப்படி தோன்றவில்லை அல்லவா? என்றேன். அவர், ''ஆமாம். இப்படி எனக்கு பிரியம். உமக்குத் தெரியுமா? உம்மிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் நாத்திகன் என்று கருதப்படுபவன்'' என்றார். நான், ''ஆம், ஐயா, நான் கேள்விப்பட்டேன். அதைப் பற்றி பெருமையடித்து கொள்ள ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர், “எனக்குத் தெரியாது, உம்மைப் போன்றவர்களைக் குறித்து என் கருத்து என்னவென்பதை உம்மிடம் கூற விரும்புகிறேன்'' என்றார். நான், ''சரி கூறுங்கள்'' என்றேன். அவர், ''நீங்கள் தவறான மரத்தைப் பார்த்து குலைக்கிறீர்கள்'' என்றார். அதன் அர்த்தம் எத்தனை பேருக்குத்தெரியும்? அதாவது 'கூன்' (coon)னைப் பிடிக்க நாய் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், 'கூன்' அங்கு இல்லவே, இல்லை ('கூன்' என்பது அமெரிக்காவில் காணப்படும் ஒரு மாமிசபட்சிணி, அது சாம்பலும் பழுப்பு நிறமும் கலந்ததாயும், கூர்மையான மூக்கும், அடர்த்தியான வாலும் கொண்டதாய், இரவில் நடமாடும் ஒரு மிருகம் - தமிழாக்கியோன்.) அவர், ''நீங்கள் தவறான மரத்தைப் பார்த்து குலைக்கிறீர்கள்'' என்றார். நான், ''அது உங்கள் சொந்த கருத்து'' என்றேன். அவர், “அந்த பழைய புகைபோக்கி (Chimney) அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டீரா?'' என்றார். நான், “ஆம்” என்றேன். ''அங்கு தான் நான் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தேன். இத்தனை ஆண்டுகளாகவும் இந்த மலைபாகங்களில் தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் வானத்தை நிமிர்ந்து பார்த்திருக்கிறேன். நான் இங்கும் அங்கும் பார்த்திருக்கிறேன். ஆனால் நிச்சயமாக, இந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் தேவனைப் போல் காணப்படும் எதையாகிலும் நான் பார்த்திருக்க வேண்டும் அல்லவா? நீரும் அப்படித் தானே நினைக்கிறீர்''? என்றார். நான், ''நீர் எதைப் பார்க்கத் தேடிக் கொண்டிருக்கிறீர் என்பதை அது பொறுத்தது. பாருங்கள், எதைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்தீர்கள்'' என்றேன். 20அவர், ''அப்படி ஒருவர் இருப்பதாக நான் நிச்சயம் நம்புவதில்லை. உங்களைப் போன்றவர்கள் கடவுளின் பெயரை சொல்லி ஜனங்களின் பணத்தை அபகரிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்'' என்றார். நான், ''நீர் அமெரிக்க குடிமகன். உமது சொந்த கருத்தைக் கொண்டிருக்க உமக்கு உரிமையுண்டு'' என்றேன். அவர், ''ஒருமுறை, ஒரு ஆளை குறித்து கேள்விப்பட்டேன். அவரிடம் பேச எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்'' என்றார். நான், “அப்படியா, ஐயா'' என்றேன். அவர், ''அவர் ஒரு போதகர், அவரை உமக்குத் தெரிந்திருக்கலாம். அண்மையில் அவர் காம்ப்பெல்ஸ்வில் (Campbellsville) என்னுமிடத்தில், ஆலயத்தின் முற்றத்திலுள்ள 'காம்ப்' மைதானம் ஒன்றில் கூட்டம் நடத்தினார். அவருடைய பெயர் எனக்கு மறந்துவிட்டது. அவர் இந்தியானாவைச் சேர்ந்தவர்'' என்றார். நான், “ஓ, ஆம், ஐயா'' என்றேன். சகோ. உட் அவரிடம் அது யாரென்று கூற வாயெடுத்தார். நான், ''கூற வேண்டாம்'' என்று தடுத்து நிறுத்தினேன். நான், “அவரைப் பற்றி என்ன?'' என்று கேட்டேன். 21அவர், ''நல்லது, ஒரு கிழவி இந்த மலையின் மேல் வசித்து வந்தாள்'' (யாரோ ஒருத்தி). “அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தாள். நானும் என் மனைவியும் காலையில் அங்கு சென்று அவளுடைய படுக்கையை மாற்றித் தருவதுண்டு. அவளை தூக்கி, மலஜலப் பாத்திரத்தின் மேல் (bed-pan)அவர்களால் உட்கார வைக்க முடியாமலிருந்தது. எனவே, அவள் படுக்கையிலே மலஜலம் கழித்த பின்பு, அந்த துப்பட்டியை இழுத்துவிடுவார்கள். அவள் மரித்துக் கொண்டிருந்தாள். அவள் லூயிவில்லுக்கு சென்றிருந்தாள். அங்கு மருத்துவர்கள் அவளைக் கைவிட்டு, அவள் மரித்துவிடுவாள் என்று கூறினர்.'' “அவளுடைய சகோதரி அந்த கூட்டத்துக்கு சென்றிருந்தாள். அந்த பிரசங்கி அங்கு மேடையின் மேல் நின்று கொண்டு, தமது முதுகை சபையோர் பக்கம் திருப்பி, இந்த ஸ்திரீயை பெயர் சொல்லி அழைத்து அவள் கூட்டத்திற்கு வந்திருந்த காரணம் என்னவென்று கூறினாராம். அவள் கூட்டத்திலிருந்து வந்தபோது ஒரு கைக்குட்டையை எடுத்து தன் கைப்பையில் போட்டு கொண்டாள். அவர், வியாதியுள்ள ஸ்திரீயின் பெயர் என்னவென்று கூறி - அது இருபது மைல் தள்ளி இருந்தது - அவள் புற்று நோயால் அவதியுறுகிறாள் என்றும், அவள் பெயர் என்னவென்றும், அவள் பட்ட கஷ்டங்களையெல்லாம் எடுத்துக் கூறி, ''இந்த கைக்குட்டையை கொண்டு போய் அந்த ஸ்திரீயின் மேல் வை. அப்பொழுது அவள் புற்று நோயிலிருந்து சுகமடைவாள், என்றாராம்.'' 22''அன்றிரவு அவர்கள் வந்தனர். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் மிகவும் பயங்கரமான கூச்சலைக் கேட்டேன். ''இரட்சிப்பின் சேனை'' தான் அந்த மலையுச்சியில் அவ்வாறு கூச்சலிடுகிறது என்று நினைத்தேன். ஒருக்கால் அந்த வயோதிப சகோதரி மரித்துவிட்டிருப்பாள் என்று எண்ணி, ''சரி, நாளை அங்கு பெரிய மோட்டார் வாகனத்தைக் கொண்டு செல்லலாம். சவத்தை எப்படி தெருவுக்கு கொண்டு வருவது...'' என்றெல்லாம் எண்ணத் தொடங்கினேன். ''சரி, இந்த இரவில் மலையின் மேல் ஒரு மைல் செல்ல வேண்டுமே, இப்பொழுது வேண்டாம்'' என்று நினைத்து நாங்கள் போகவில்லை. அடுத்த நாள் காலை நாங்கள் அங்கு சென்ற போது, என்ன நடந்தது தெரியுமா? என்றார். “இல்லை, ஐயா'' என்றேன். ''அவள், கணவனுடன் உட்கார்ந்து கொண்டு, ஆப்பிள் நிறைத்த வறுத்த பண்டத்தை தின்று, காப்பி குடித்துக் கொண்டிருந்தாள்“ என்றார். நான் “உண்மையாகவா சொல்கிறீர்கள்?'' என்றேன். அவர், “ஆம், ஐயா'' என்றார். நான், ''ஓ, மிஸ்டர், நீங்கள் உண்மையைக் கூறவில்லை'' என்றேன். அவர், ''எனக்கு என்ன விளங்கவில்லை என்றால்... இந்த இடத்தை சேராத அந்த மனிதனுக்கு அவளுடைய பெயர் எப்படி தெரிந்தது?'' என்றார் பாருங்கள். நான், ''நீங்கள் அதை நம்புகிறீர்களா என்ன?'' என்றேன். அவர், ''அது உண்மை'' என்றார். நான், ''நீங்கள் நம்புகிறீர்களா?'' என்றேன். பாருங்கள். 23அவர் வேண்டுமானால் நாம் மலையின் மேல் செல்லலாம். அது, உண்மையென்று உமக்கு நான் நிரூபிக்க முடியும்'' என்றார். அவர் எனக்கு பிரசங்கம் பண்ணத் தொடங்கிவிட்டார். பார்த்தீர்களா? நான், ''அப்படியா?'' என்றேன். நான் கீழே விழுந்திருந்த ஆப்பிள் பழம் ஒன்றைப் பொறுக்கி, ''நான் எடுத்துக் கொள்ளலாமா?'' என்று கேட்டு, அதை என் உடுப்பில் துடைத்தேன். அவர், ''மஞ்சள் புழுக்கள் இந்த பழங்களை அரித்து விடுகின்றன. நீர் எடுத்துக் கொள்ளலாம்“ என்றார். நான் சரியென்று கூறி அதைக் கடித்தேன். ”இந்த ஆப்பிள் பழம் மிகவும் இனிப்பாயுள்ளது'' என்றேன். அவர், ''ஓ, ஆமாம், உமக்கு தெரியுமா? இந்த மரத்தை நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நட்டேன்'' என்றார். “அப்படியா?'' என்றேன். ''ஆம், ஐயா'' என்றார். நான், ''சரி, ஒவ்வொரு ஆண்டும்...'' என்றேன். ''ஆகஸ்டு மாதம் தொடங்கியும் இன்னும் உறைபனி பெய்யவில்லை. மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன'' என்றேன். அவர், “ஆம், ஐயா. அது உண்மை. இப்பொழுது இலையுதிர் காலம். விரைவில் உறைபனி பெய்யும் என்று நம்புகிறேன்'' என்றார். 24நான், ''ஆம், ஐயா'' என்று கூறிவிட்டு, விஷயத்தை மாற்றினேன், பாருங்கள். நான் ''சத்து மரத்தை விட்டு போவது, வினோதமானது அல்லவா? இலைகள் உதிர்ந்துவிடுகின்றன. இலைகளை பட்டுப் போக செய்ய, உறைபனி எதுவுமில்லை“ என்றேன். அவர், ''ஆம்'' என்று கூறிவிட்டு, “நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?'' என்றார். நான், ''எனக்கு வியப்பாயுள்ளது'' என்றேன். (ஒரு பசுவுக்கு போதிய அளவு கயிறு கொடுத்தால், அது தன்னை தூக்கிலிட்டு கொள்ளும் என்று என் தாயார் கூறுவது வழக்கம். எனவே, நான் அவருக்கு நிறைய கயிறு கொடுத்தேன்.) அவர், “ஆம், இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?'' என்றார். நான், ''தேவன் இந்த ஆப்பிள் பழங்களை வளரச் செய்கிறார். நாம், ஆப்பிள் பழங்களை தின்று அனுபவிக்கிறோம், மரத்தின் நிழலில் இளைப்பாறுகிறோம். அந்த மரத்தின் சத்து இலையுதிர் காலத்தின் போது, கீழே இறங்கி, மறுபடியும் மேலே வந்து ஆப்பிள் பழங்களையும், இலைகளையும் தருகிறது'' என்றேன். அவர், “ஓ, அது இயற்கை, பாருங்கள், அது இயற்கையின் செயல்'' என்றார். 25நான், ''அது இயற்கையின் செயல் என்பது உண்மைதான். ஆனால், யாரோ ஒருவர் இயற்கையை தம் கட்டுக்குள் கொண்டிருக்க வேண்டும்'' என்றேன். ''அதை செய்வது எதுவென்று உங்களால் சொல்ல முடியுமா?'' என்றேன். “அது இயற்கையாக சம்பவிப்பது'' என்றார். நான், ''யார் அந்த சிறு இலையிடம்... சத்து வேர்களில் சென்றுவிடுவதால் இலைகள் உதிர்கின்றன. குளிர்காலத்தின் போது அந்த சத்து அங்கேயே தங்கிவிட்டால் என்னவாகும்? என்ன நடக்கும்?'' என்று கேட்டேன். அவர், “அது மரத்தைக் கொன்றுவிடும்'' என்றார். “சரி, அப்படியானால் எந்த ஞானம், ''இது இலையுதிர் காலம். வேர்களுக்குள் சென்று ஒளிந்து கொள்'' என்று கட்டளையிட்டு, அந்த சத்து வேர்களுக்குள் செல்லும்படி செய்கிறது? அது கல்லறைக்குள் இருப்பது போல் அங்கு தங்கியிருந்து, அடுத்த வசந்த காலத்தின் போது, மேலே வந்து அதிக ஆப்பிள்களையும் இலைகளையும் தருகிறது'' என்றேன். அவர், ''அது இயற்கையின் செயல். இயற்கை தானாகவே அதை செய்யும். வான் நிலை மாறி, இலையுதிர் காலம் வருகின்றது'' என்றார். நான், “அப்படியானால் ஒருவாளி தண்ணீரை அந்த கம்பத்தின் மேல் வைத்து பாருங்கள். இயற்கை தண்ணீரை கம்பத்தின் கீழே இறக்கி, மறுபடியும் மேலே கொண்டு வருகின்றதா என்று பார்க்கலாம்'' என்றேன். பாருங்கள்? பாருங்கள்? அவர், ''நீர் கூறுவதில் ஏதோ உள்ளது'' என்றார். ''நாங்கள் வேட்டைக்குச் செல்லும் போது, அதைக் குறித்து சிந்தனை செய்யுங்கள்'' என்றேன். அவர், ''எங்கு வேண்டுமானாலும் சென்று வேட்டையாடுங்கள்'' என்றார். ''நான் திரும்பி வரும்போது, எந்த ஞானம் அந்த சத்தை மரத்திலிருந்து கீழே வேர்களுக்குள் இறக்கி, குளிர்காலம் முழுவதும் அங்கு தங்கும்படி செய்து, அடுத்த வசந்த காலத்தின் போது மறுபடியும் மேலே கொண்டு வருகிறது என்று என்னிடம் கூறுவீரானால், அதே ஞானம்தான் அங்கிருக்கும் ஸ்திரீயைக் குறித்த எல்லா விஷயத்தையும் என்னிடம் கூறினது என்று நான் உம்மிடம் கூறுவேன்'' என்றேன். ''உம்மிடம் கூறினதா?'' ''ஆம், ஐயா“ என்றேன். அவர், “நீங்கள் அந்த போதகர் அல்ல!” என்றார். ''அவருடைய பெயர் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டேன். ''ஆம்'' என்றார். “பிரான்ஹாமா?'' என்று கேட்டேன். ''அதுதான் அவர் பெயர்'' என்றார். “அதுதான் நான்'' என்றேன். பாருங்கள்? என்ன நடந்தது தெரியுமா? அந்த வயோதிபரை நான் அவருடைய சாட்சியைக் கொண்டே, கிறிஸ்துவினிடம் வழி நடத்தினேன். 26ஒரு ஆண்டு கழித்து, அங்கு சென்று காரை முற்றத்தில் நிறுத்தினேன். (அதன் மேல் இந்தியானாவின் லைசென்ஸ் இருந்தது. அவர்கள் அங்கிருந்து மாறிவிட்டனர், வயோதிபர் மரித்துவிட்டார். நான் வேட்டையாடி திரும்பி வந்த போது, அவருடைய மனைவி அங்கு நின்று கொண்டிருந்து, என்னை மிகவும் கடிந்து கொண்டாள். எனக்கு வேட்டையாட அனுமதி இருந்ததென்று நினைத்தேன். அவள் வெளியே வந்து, “உங்களுக்குப் படிக்கத் தெரியாதா?'' என்று கேட்டாள். நான், “தெரியும் அம்மணி'' என்றேன். அவள், “வேட்டையாடக் கூடாது என்று எழுதியுள்ள பலகையை பார்த்தீர்களா?'' என்று கேட்டாள். நான், ''ஆம், அம்மணி. ஆனால், நான் அனுமதி பெற்றுள்ளேன்'' என்றேன். ''உங்களுக்கு அனுமதி கிடையாது. அநேக ஆண்டுகளாக இந்த இடம் எங்களுக்குச் சொந்தமானது'' என்றாள். ''சரி, சகோதரியே, அப்படியானால் நான் தவறு செய்துவிட்டேன். நான் வருந்துகிறேன்'' என்றேன். அவள், ''என்ன வருந்துவது! இந்தியானா லைசென்ஸை அதன் மேல் ஒட்டி, அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்களே, நீங்கள் மிகவும் தைரியமுள்ளவர்கள்!'' என்றாள். நான், ''அதை நான் விளக்கி கூறலாமா?'' என்று கேட்டேன். ''சரி, யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது?'' நான், ''அவருடைய பெயர் எனக்கு தெரியாது. நான் சென்ற ஆண்டு இங்கு வந்திருந்த போது, வயோதிபர் ஒருவர் முன் தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். நாங்கள் தேவனைக் குறித்து பேசி கொண்டிருந்தோம்“ என்றேன். பாருங்கள்? அவள் என்னைப் பார்த்து, ''நீங்கள் தான் சகோ. பிரான்ஹாமா?'' என்று கேட்டாள். நாம், ''ஆம், அம்மணி'' என்றேன். அவள், ''என்னை மன்னியுங்கள். நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. அவருடைய சாட்சியை உங்களிடம் கூற விரும்புகிறேன். அவர் மரணத்தருவாயிலிருந்த கடைசி மணி நேரத்தில், தமது கரங்களையுயர்த்தி தேவனைத் துதித்தார். அவர் கிறிஸ்தவ விசுவாசமுடையவராய் மரித்து, தேவனிடம் கொண்டு செல்லப்பட்டார்'' என்றாள். பாருங்கள்? “இவர்கள் பேசாமலிருந்தால், கல்லுகளே கூப்பிடும்'' (லூக். 19:40) இயற்கையில் ஏதோ ஒன்றுண்டு. 27பறவைகளை கவனியுங்கள், மிருகங்களைக் கவனியுங்கள், எல்லாவற்றையும் கவனியுங்கள். அப்பொழுது, நீங்கள் இயற்கையை கவனிக்கிறவர்களாயிருப்பீர்கள். சிறு புறா எப்படி பறக்கிறதென்று கவனியுங்கள். அது என்ன ஒரு வித்தியாசமான பறவை, பாருங்கள். அதற்கு பித்த நீர் கிடையாது. அது காகத்தின் ஆகாரத்தை உண்ண முடியாது. பாருங்கள்? அதற்குள் பித்த நீர் கிடையாது. அது, தண்ணீரில் குளிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அதற்குள் ஏதோ ஒன்றுண்டு, அது உள்ளேயிருந்து வெளியே அதை சுத்தப்படுத்துகின்றது, பார்த்தீர்களா? கிறிஸ்தவனும் அவ்வாறே இருக்கிறான். தேவனும் தம்மை ஒரு புறாவின் வடிவில் வெளிப்படுத்தினார். பாருங்கள், ஏனெனில் இயேசு ஆட்டுக்குட்டியாக சித்தரிக்கப்பட்டார். நீங்கள் இயற்கையில் எப்பொழுதுமே தேவனை காணலாம். தேவன், நம்மை வழி நடத்தப்பட வேண்டிய ஆடுகளுக்கு ஒப்பிடுகிறார். அதைக் குறித்து சில நாட்களுக்கு முன்பு நான் செய்த பிரசங்கம் உங்களுக்கு கவனம் உள்ளதா? புறா பறந்து வந்து ஆட்டுக்குட்டியின் மேல் உட்கார்ந்து ஆட்டுக்குட்டியை அடிக்க படும்படிக்கு நடத்தியது என்று. அந்த புறா! அந்த ஆட்டுக்குட்டிக்கு வேறெதனாகிமிலும்... அந்தப் புறா! வேறெந்த மிருகத்தின் மேலும் இறங்கியிருக்க முடியாது. ஏனெனில், இவ்விரண்டிற்கும் ஒரே போன்ற தன்மை இருக்க வேண்டும். பாருங்கள்? புறா ஒரு ஓநாயின் மேல் உட்கார்ந்திருந்தால், அது சீறி உறுமியிருக்கும். அப்பொழுது, புறா பறந்து சென்றிருக்கும். இப்பொழுதும், அவ்வாறே உள்ளது. நமது தீயவழிகளின் காரணமாக பரிசுத்த ஆவியானவர் பறந்து சென்றுவிடுகிறார். அது ஒரே சுபாவத்தைப் பெற்றிருக்க வேண்டும். வானத்தில் பறக்கும் புறாவும், பூமியிலே மிகவும் சாதுவான மிருகமாகிய ஆட்டுக்குட்டியும் ஒன்றாக ஒத்துப்போக முடியும். பரிசுத்த ஆவி நம்மேல் வந்து நம்மை புது சிருஷ்டிகளாக மாற்றின பிறகு, அவர் நம்மை வழிநடத்த முடியும். நாம் நமது பழைய வாழ்க்கையே வாழமுயன்றால், அது கிரியை செய்யாது! அது ஒருக்காலும் கிரியை செய்யாது. 28வழி நடத்துதலைக் குறித்து பேசும் போது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைத்த முதல் அடி, ஒரு பட்சமுள்ளதாயின் கரங்களை பிடித்து ஒருக்கால் இருக்கலாம். அந்த கரங்கள் இன்றிரவு எங்காவது ஒரு கல்லறையில் இருக்கக்கூடும். அந்த கரம்தான் உங்களை பிடித்து நீங்கள் முதலாம் அடியை எடுத்து வைக்க செய்தது. உங்களுக்கு நடக்க தாய் கற்றுக் கொடுத்த பின்பு, நீங்கள் சில அடிகள் எடுத்து வைத்திருப்பீர்கள், பின்பு விழுந்திருப்பீர்கள், பின்பு எழுந்திருப்பீர்கள். நீங்கள் ஒரு பெரிய காரியத்தை சாதித்துவிட்டதாக மனதில் எண்ணியிருப்பீர்கள். அதன்பிறகு உங்கள் தாய் உங்களை பள்ளி உபாத்தியாயினியிடம் ஒப்படைத்திருப்பாள். அவள் உங்களை கல்விக்குள் வழி நடத்தி, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றும், எப்படி கற்க வேண்டும் போன்றவைகளை புகட்டியிருப்பாள். பள்ளி உபாத்தியாயினிடம் உங்கள் வேலை முடிந்தவுடனே, நீங்கள் திரும்பி வந்தீர்கள். அப்பொழுது, உங்கள் தந்தையின் பராமரிப்பின் கீழ் நீங்கள் வந்தீர்கள். அவர் ஒருக்கால் உங்களுக்கு வியாபாரம் கற்று கொடுத்து, வெற்றியுள்ள வியாபாரியாகத் திகழ்வது எப்படி என்றும், காரியங்களை எவ்வாறு சரியாக செய்ய வேண்டுமென்றும் கற்பித்திருப்பார். உங்கள் தாய், நீங்கள் வீட்டு எஜமானியாக (house wife) எப்படி இருக்க வேண்டுமென்றும், எப்படி சமைக்க வேண்டுமென்றும் பெண்களாகிய உங்களுக்கு கற்றுக் கொடுத்திருப்பாள். அவர்களுடைய வேலை முடிந்தவுடன், உங்கள் போதகர் அல்லது குருவானவர் பராமரிப்பின் கீழ் நீங்கள் வந்தீர்கள். 29இப்பொழுது உங்களை நடத்துவது யார்? அதுதான் இப்போதைய கேள்வி. நாம் அனைவருமே இன்றிரவு யாரோ ஒருவரால் வழி நடத்தப்படுகிறோம். நாம் வழி நடத்தப்பட வேண்டும். நாம் வழி நடத்தப்படுகிறோம். கவனியுங்கள்! இந்த வாலிபனை நாம் பார்ப்போம்... அவனை வசீகரித்தது எதுவென்று. இந்த வாலிப வர்த்தகனை நாம் பார்ப்போம். அவனை நாம் அவ்வாறு அழைப்போம். ஏனெனில், அவன் ஒரு வர்த்தகனாயிருந்தான். அவன் அபார வெற்றியடைந்தவன். அவனை வழி நடத்தினவர்கள் யாரென்பதை பார்ப்போம். ஒருக்கால், அவன் சிறுவனாயிருந்த போது, அவன் என்ன செய்ய வேண்டுமென்று அவனுடைய தாய் கற்று கொடுத்திருப்பாள். அவனுடைய தந்தை அவனை அபார வெற்றி கண்டவனாக்கி ஒருக்கால் அவனுக்கு நிறைய சொத்தை வைத்துவிட்டு போயிருக்கலாம். ஏனெனில், அவனுடைய தந்தையும் ஒரு அரசனே. அவனுடைய தந்தை ஒருக்கால் இறந்திருக்கலாம். அவன் ஒரு வர்த்தகன். இன்றைக்கு நாம் அழைப்பது போல், அவனை நாம் கிறிஸ்தவ வர்த்தகன் என்று அழைக்கலாம், அல்லது பக்தியுள்ள வர்த்தகன் என்னும் பெயர் மிக பொருத்தமானது என்று எண்ணுகிறேன். 30இவன் பக்தியுள்ளவன், அவன் எந்த வகையிலும் நாத்திகன் அல்ல. சரியானதை செய்ய வேண்டுமென்றும், எப்படி நடக்க வேண்டும், எப்படி உடுக்க வேண்டும் என்றெல்லாம் அவனுடைய தாய் அவனுக்கு கற்றுக் கொடுத்திருந்தாள். அவனுடைய தந்தை, வெற்றியுள்ள வர்த்தகனாக ஆவது எப்படி என்பதைக் கற்று கொடுத்திருந்தார், அவனுடைய வர்த்தகம் தழைத்தோங்கியது. பெற்றோர் இருவருமே சபையில் வளர்ந்தனர். எனவே மகனை குருவானவரிடம் ஒப்படைத்தனர், குருவானவர் அவனை மிகவும் பக்தியுள்ள ஒருவனாகச் செய்தார். எனவே, அவன் அருமையான நாகரிகமுள்ள வாலிபனாயிருந்தான். அவன் நற்பண்பு கொண்டவனாயிருந்தான். இயேசுகிறிஸ்து, அவனைக் கண்டு அவனிடத்தில் அன்பு கூர்ந்தார் என்றால், அந்த வாலிபனில் உண்மையான ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும். அது உண்மை. ஏனெனில் வேதாகமம், ''இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்தார்'' என்று மாற்கு சுவிசேஷத்தில் உரைக்கிறது. (மாற்கு10:21) ஆம், “இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்தார். எனவே, இந்த வாலிபனில் ஏதோ ஒன்று தலை சிறந்து விளங்கியிருக்க வேண்டும். அவனுக்கு நற்பண்பு இருந்தது... அவன் நற்பண்பு கொண்டவனாக மதிப்பிடப்பட்டிருந்தான். அவன் சரியான விதத்தில் வளர்க்கப்பட்டான்; அறிவாளி, சாமர்த்தியமுள்ளவன், புத்தி கூர்மையுள்ளவன், வர்த்தகத்தில் வெற்றியடைந்தவன், பக்தியுள்ளவன். அவனில் அநேக நற்பண்புகள் சிறந்து விளங்கின காரணத்தால், அது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் கவனத்தைக் கவர்ந்தது. இவையெல்லாவற்றிலும் அவன் வெற்றி அடைந்திருந்த போதிலும், அவன் எதிர்க்கப்பட்ட போது... 31அவனில் எந்த தவறுமே காணப்படவில்லை. அவன் எல்லா வகையிலும் பிழையின்றி சரியாக இருந்தான். அவன் சரியானவன் என்று மதிப்பிடப்பட்டிருந்தான், அறிவாளி, சரியான கல்வி, அவன் அடைந்த வெற்றி, அவன் சாமர்த்தியமுள்ளவன், சிறந்த வர்த்தகன்; அவன் பாலஸ்தீனாவிலிருந்த வர்த்தகர் குழு ஒன்றில் ஒருக்கால் அங்கத்தினனாய் இருந்திருப்பான். இன்றிரவு நமக்குள்ள வர்த்தகர் ஐக்கியம் போன்ற ஒன்றில் அவன் சேர்ந்திருப்பான். அவன் சந்தேகமின்றி அவ்வாறு செய்திருப்பான். ஏனெனில், வர்த்தகர் எப்பொழுதுமே ஒருவரோடொருவர் ஐக்கியங்கொள்வர். ஏனெனில் அவர்கள், “ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகள்.'' அவர்கள் பேசுவதற்கு விஷயங்கள் உண்டு. பக்தியுள்ள ஒருவன் மதுக்கடை நடத்தும் ஒருவனுடன் பேச விரும்புவதில்லை. ஏனெனில், அவர்களிடையே பொதுவான எதுவும் கிடையாது. நாம் பொதுவானவைகளைப் பெற்றிருக்க வேண்டும். எனவே, கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களுடன் பொதுவானவைகளைப் பெற்றுள்ளனர்; அவ்வாறே பாவிகளும், பாவிகளுடன் பொதுவானவைகளைப் பெற்று சங்கம் போன்ற ஒன்றை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த வாலிபன் ஒருக்கால் வர்த்தகர் ஐக்கியம் ஒன்றில் உறுப்பினனாக இருந்திருப்பான். 32அவன் தன்னால் இயன்றவரை பக்தியுள்ளவனாக இருந்தான். இயேசுவும் அவனைக் கேள்வி கேட்டபோது, ''என் சிறு வயது முதல் இந்த கற்பனைகளைக் கைக்கொண்டு வந்திருக்கிறேன்'' என்றான். அது உண்மை. அவன் சரியான வழியில் வளர்க்கப்பட்டான், சரியாக போதிக்கப்பட்டான், மற்றெல்லாமே. ஆனால், நித்திய ஜீவனைப் பெற வேண்டுமெனும் எண்ணம் அவனை வாட்டிய போது... இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அவன் நற்பண்புகளை பெற்றிருந்த போதிலும், அவன் நித்திய ஜீவனை பெற்று கொள்ளவில்லை என்பதை உணர்ந்திருந்தான். 33நமது சங்கங்கள், நமது சபைகள், அவைகளில் அங்கத்தினராதல், நாம் அருமையாகக் கருதுபவை. நமது அமெரிக்க சங்கங்கள் எல்லாமே நல்லதுதான். அதற்கு விரோதமாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. இங்குள்ள நமது கிறிஸ்தவ வர்த்தகர் சங்கம், ஒரு பெரிய காரியம். அது, எனக்குத் திறக்கப்பட்ட வாசலாக அமைந்துள்ளது. நமது ஸ்தாபனங்களுக்கிடையே வித்தியாச பேதங்கள் இருப்பினும், “நாம் கிறிஸ்தவர்கள்'' என்னும் கருத்தினை வலியுறுத்த, அது எனக்கு பெரிதும் உதவுகிறது. எந்த ஒரு ஸ்தாபனமும் நம்மை, உண்மையான கிறிஸ்தவனை, உரிமை கோரமுடியாது. ஏனெனில், நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். ஸ்தாபனங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை, கிறிஸ்தவ மார்க்கமோ பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒன்று. ஆனால் நாம் பெற்றுள்ள இவையனைத்திலும், அது எவ்வளவு நல்லதாகக் காணப்பட்டாலும், நாம் ஒன்று கூடி, நல்ல கூட்டங்களைப் பெற்றுள்ளது எவ்வளவு அருமையாக காணப்பட்டாலும், நாம் சமுதாயத்தில் மன ஒற்றுமை கொண்டிருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் நித்திய ஜீவன் என்னும் விஷயத்தைக் குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் வியாபாரத்தில் எவ்வளவு வெற்றி அடைந்திருந்தாலும், நாம் பிரபல சபை அங்கத்தினராக விளங்கினாலும், இன்னும் மற்ற துறைகளில் நாம் வெற்றி கண்டிருந்தாலும், நாம் எவ்வளவு நன்றாக நமது பணியைச் செய்ய முயன்றாலும், அது சரியான வழியில் செய்யப்படவில்லையென்றால், அது தேவனுக்கு வீணாய் ஆராதனை செய்வதாயிருக்கும். இயேசு அதை அந்த வகுப்பில் தான் சேர்க்கிறார். இதை பற்றி கூற, நான் சற்று நேரம் நிறுத்தி கொள்கிறேன். அவர், மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாக போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றார் (மாற்கு;7:7). இப்பொழுது யோசித்துப் பாருங்கள். தேவனுக்கு உத்தமமாக ஆராதனை செய்யப்பட்டும் (உத்தம இருதயத்துடன்), அது வீணாய் உள்ளது! அது ஏதேன் தோட்டத்தில், காயீனிலிருந்து அவ்வாறு தொடங்கினது. உத்தமமான ஆராதனை, ஆனால் புறக்கணிக்கப்பட்டது. அது மிகவும் பயபக்தியான ஆராதனையாயிருந்த போதிலும், அது புறக்கணிக்கப்பட்டது. 34சென்ற வாரம், இல்லை அதற்கும் முந்தின வாரம், ஷ்ரீவ்போர்ட்டில் வர்த்தகர் சங்கம் நடத்திய காலை உணவு கூட்டத்தின் போது, நூற்றுக் கணக்கானவர் கூடியிருந்தனர். அப்பொழுது நான், “தேவனுடைய சித்தத்துக்குப் புறம்பாக அவருக்கொரு சேவை செய்தல்” என்னும் பொருளின் பேரில் இரண்டரை மணி நேரம் பேசினேன். அது வினோதமாய் தென்படுகின்றது. ஆனால் தேவன் அளித்துள்ள வாய்க்காலில், தேவன் அதை செய்யும் முறையில், நம்மை நாம் செலுத்தி கொள்ள வேண்டும். அது சரியென்று நமக்கு எவ்வளவுதான் தென்பட்ட போதிலும், அது தேவனுடைய வார்த்தையின்படி அமைந்திருக்க வேண்டும், இல்லையேல் அது வீணாயிருக்கும். காயீன் தேவனை ஆராதித்தான். ஆனால், அது கர்த்தருடைய வார்த்தையின்படி இருக்கவில்லை, பரிசேயர்கள் ஆராதித்தனர், ஆனால் கர்த்தருடைய வார்த்தையின்படி அல்ல. நான் வர்த்தகருக்கு அளித்த இந்த குறிப்பிட்ட செய்தியில், இதை போதித்தேன். 35தாவீது கர்த்தருக்கு ஒரு சேவை செய்ய விரும்பினான். அவன் கூறினது சரியே. அவன், ''கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி அங்கிருப்பது நல்லதல்ல. அதை நாம் இங்கு கொண்டு வருவோம்“ என்றான். அவனுக்கு முன்பிருந்த ராஜாவின் நாட்களில், அவனுக்கு பின்பு இவன் ராஜாவானான். அவன், ''அது சரியல்ல. அவர்கள் உடன்படிக்கை பெட்டியின் மூலம் தேவனுடைய ஆலோசனையைக் கேட்கவில்லை, ஆனால் நாம் ஆலோசனை கேட்க வேண்டும்'' என்றான். அது சரியே. அதை தான் அவர்கள் செய்ய வேண்டும். அவன், ''நாம் சென்று உடன்படிக்கை பெட்டியை கொண்டு வந்து, கர்த்தரிடம் ஆலோசனை கேட்போம்'' என்றான். அது மிகவும் சரியே. அது மற்றொரு நாட்டில் இருந்தது. அவன், ''அதை நாம் கொண்டு வந்து, இங்குள்ள வீட்டில் வைத்து, தேவனை ஆராதிப்போம்” என்றான். ஆனால் அதை செய்ய, அவன் தவறான வாய்க்காலில் சென்றான் என்பதை கவனிக்கவும். அவன் ஐம்பது பேருக்கு தலைவரும், நூறு பேருக்கு தலைவரும், ஆயிரம் பேருக்குத் தலைவர்களுமான சேனாதிபதிகளிடம் ஆலோசனை கேட்டான். அவர்கள் எல்லோருமே கலந்து ஆலோசிக்கப்பட்டனர், ஒவ்வொருவரும். அது தேவனுடைய சித்தம் என்று அறிந்து - அது கர்த்தருடைய வார்த்தையை போல் காணப்பட்டது. 36நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை அதற்குரிய சரியான இடத்தில் பொருத்த வேண்டும். இல்லாவிடில் அது கர்த்தருடைய சித்தம் அல்ல. பாருங்கள்? அது உங்களில் ஆழமாக பதியட்டும். அப்பொழுது, நான் என்ன கூற முயல்கிறேன் என்பதன் பொதுவான கருத்தை நீங்கள் கிரகித்துக் கொள்வீர்கள். நீங்கள் காணும் இங்கிலாந்து சென்றுள்ள வழியில் சபை செல்வதை நான் விரும்பவில்லை; நீண்ட தலைமயிர் வளர்த்து, முகத்தில் வர்ணம் பூசின ஆண்கள், தாறுமாறான நிலையில் உள்ளவர்கள். அது நமக்கு வேண்டாம்! அது எவ்வளவு பக்தியாய் தென்பட்டாலும், எல்விஸ் பிரஸ்லி எவ்வளவுதான் பக்தி பாடல்களைப் பாடினாலும், அவன் பிசாசுதான். நான் நியாயாதிபதி அல்ல, ஆனால் அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்.'' பாருங்கள்? அவன் ஒரு பெந்தெகொஸ்தேயினன், அதனால் எந்த வித்தியாசமும் இல்லை. பாருங்கள், நீங்கள் யாரென்று உங்கள் கனிகள் சாட்சி பகரும். அவன் மேல் ஆவி இறங்கி, அவன் அந்நிய பாஷை பேசி, கூக்குரலிட்டு, வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினாலும் அதனால் ஒன்றுமில்லை. இயேசு, “அந்த நாளில் அநேகர் என்னிடம் வந்து, ''கர்த்தாவே! நான் இதை செய்யவில்லையா, அதை செய்யவில்லையா?'' என்பார்கள். அப்பொழுது நான், ''அக்கிரம செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள். நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை என்பேன்'' என்பார். (மத்.7:22-23). பாருங்கள்? நாம் உண்மையான கிறிஸ்தவர்களாயிருக்க வேண்டும். அதற்கான ஒரே வழி, ''நித்திய ஜீவனைக்'' குறித்த கேள்வியை நம்மையே கேட்டு கொள்வதாகும். 37ஒரே ஒரு நித்திய ஜீவன் மாத்திரமேயுண்டு, அது தேவனிடத்திலிருந்து வருகிறது. அதை பெற வேண்டிய ஒவ்வொருவரையும் அவர் முன்கூட்டி நியமித்திருக்கிறார். உங்கள் தந்தைக்குள் நீங்கள் ஒரு அணுவாயிருந்தது போல் (gene) தேவனுக்குள்ளும் நீங்கள் அணுவாயிருந்தீர்கள். தொடக்கத்திலேயே அவருடைய தன்மைகளில் (attributes) ஒன்றாக இருந்தீர்கள். இல்லையென்றால் நீங்கள் அங்கே இருக்கவே முடியாது. நீங்கள் உங்கள் தாயின் விதைக்கும் நிலத்திலிருந்து (கர்ப்பத்திலிருந்து வெளியே வந்தீர்கள். உங்கள் தந்தை உங்களை அறியவில்லை. நீங்கள் அவருடைய அரையில் (loins) இருந்தீர்கள். நீங்கள் தாயின் விதைக்கும் நிலத்திலிருந்து வெளி வந்தபோது, நீங்கள் மனித உருவம் கொண்டு, உங்கள் பிதாவின் சாயலில் உண்டாக்கப்படுகின்றீர்கள். அப்பொழுது, உங்கள் தந்தையுடன் உங்களுக்கு ஐக்கியங்கொள்ள முடிகிறது. அதுபோன்று, நீங்கள் நித்திய ஜீவனைப்பெற்று கொண்டால், தேவனுடைய ஐக்கியங்கொள்ள முடிகிறது. நீங்கள் பெற்றுள்ள இயற்கை ஜீவன் - சரீரப்பிரகாரமான ஜீவன் உங்கள் தந்தை மூலம் வந்தது. அவ்வாறே நீங்கள் மறுபடியும் பிறக்க ஒரே வழி, பரலோகப் பிதாவின் மூலம் அது வரவேண்டும், அவருடைய தன்மைகள். ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.'' (யோவான்.6:37) பாருங்கள்? உலகத் தோற்றுத்துக்கு முன்பே உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்ட காரணத்தால் நீங்கள் இங்கிருக்கிறீர்கள். அது முற்றிலும் உண்மை. நீங்கள் ஆவிக்குரிய அணுவாக, உங்கள் பரலோகப் பிதாவிலிருந்து வெளிவந்தீர்கள் - தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகமாக. அப்படியானால், நான் உங்களுக்கு ஏற்கனவே கூறினது போல, இயேசு இவ்வுலகில் இருந்த போது, நீங்களும் அவருடன் கூட இருந்தீர்கள். ஏனெனில், அவர் வார்த்தையாய் இருந்தார். அவருடன் நீங்கள் துன்பப்பட்டு, அவருடன் நீங்கள் மரித்து, அவருடன் நீங்கள் அடக்கம் பண்ணப்பட்டு, அவருடன் நீங்கள் உயிர்த்தெழுந்து, இப்பொழுது அவருடன் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். 38கவனியுங்கள், எல்லாமே நன்றாயுள்ளது என்று தாவீது எண்ணினான். அவன் இந்த ஜனங்களை கலந்தாலோசித்தான். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவரும் நடனமாடி, சத்தமிட்டு, கூக்குரலிடத் தொடங்கினார்கள். பக்திமயமான அசைவுகள் அனைத்தும் அங்கு காணப்பட்டன. இருப்பினும், அவர்கள் சென்று தேவனுடைய வார்த்தையை தேவனுடைய வீட்டுக்குக் கொண்டு வருவது, தேவனுடைய சித்தமாயிருக்கவில்லை. பாருங்கள், தேவன் எப்பொழுதுமே (எல்லா காலங்களிலும்) ஒரே வழியில் கிரியை செய்கிறார். அவருடைய முதல் தீர்மானம் ஒரே தீர்மானம். ஏனெனில், அவருடைய தீர்மானம் பரிபூரணமாயுள்ளது. அவர் தமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு முதலில் வெளிப்படுத்தாமல் எதையும் செய்வதில்லை. அது முற்றிலும் உண்மை. எனவேதான், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சபை காலத்தில், எந்த ஒரு சபையும் - மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தே எதுவானாலும் - இந்த சபையை மணவாட்டிக்குள் நடத்திச் செல்ல முடியாது. அது, மல்கியா;4ம் அதிகாரத்துக்கு ஒரு பதிலாக, இதை வெளிப்படுத்த தேவன் ஒருதீர்க்கதரிசியை அனுப்ப வேண்டும். அதுதான் ஒரே வழி. நமது சபைகள் ஸ்தாபனங்களாகி, அவர்கள் எப்பொழுதும் செய்து வருவது போல், இவற்றை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. தேவன் எப்பொழுதும் தீர்க்கதரிசியை அனுப்புகிறார். 39தாவீதின் காலத்தில், தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாகிய நாத்தான் அந்த தேசத்தில் இருந்தான். ஆனால், அவனை யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அவர்கள் அங்கு சென்று, ஒரு உத்தமமான மனிதன் சாகக் காரணமாயிருந்தனர். அவர்கள் லேவியர்களின் தோள்களின் மேல் உடன்படிக்கை பெட்டியைத் தூக்கிக் கொண்டு வருவதற்கு பதிலாக, ஒரு வண்டியில் வைத்துகொண்டு வந்தனர். அவர்கள் எல்லாவற்றையுமே குழப்பமாக்கிவிட்டனர். பாருங்கள், நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படியும் நாம் செல்வதற்கு தேவன் நமக்கு அளித்துள்ள வழியிலும் செல்லாவிட்டால், அவர்கள் அதை குழப்பி, அதை ஏதோ ஒரு ஸ்தாபனத்தில் ஒரு செய்தியாக செய்துவிடுகின்றனர். அதுதான் உங்கள் நிலை. பாருங்கள்? அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. 40இந்த வாலிபனுக்கும் அதே போன்ற போராட்டம் இருந்தது. அவன் இயேசுவிடம் வருகிறான். அவன் ஒருக்கால் பரிசேயர் அல்லது சதுசேயர் குழுவில், அல்லது அக்காலத்தில் சிறந்து விளங்கிய ஒரு ஸ்தாபன ஒழுங்கில் அங்கத்தினனாக இருந்திருப்பான். அவனால் இயன்றவரை, அவன் பக்தியுள்ளவனாக இருந்தான். அவன், இந்த கற்பனைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கை கொண்டிருக்கிறேன். இவைகள் எனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன'' என்றான் (மாற்கு 10:20). பாருங்கள்? அவன் அவ்வாறு செய்து வந்ததனால், இயேசு அவனிடத்தில் அன்பு கூர்ந்தார். ஆனால், அவன் வழி நடத்தப்பட மறுத்தான். அவனுக்கு நித்திய ஜீவனையளிக்க, இயேசு கிறிஸ்துவின் உண்மையான வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள அவன் மறுத்தான். கவனியுங்கள், அவன் பெற்றிருந்ததைக் காட்டிலும், வித்தியாசமான ஏதோ ஒன்று இருந்தது என்று அவன் நம்பினான். இல்லையென்றால் அவன், ''நல்ல போதகரே, நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டிருக்க மாட்டான். பாருங்கள், அவன் ஏதோ ஒன்றை தானாகவே செய்ய விரும்பினான். நாமும் அப்படித்தான் செய்கிறோம். நாமும் நாமாகவே ஒன்றை செய்ய விரும்புகிறோம். தேவனுடைய ஈவு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. தேவன் அதை கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக்கொள்ள நாம் எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதை உங்களுக்கென்று அவர் நியமித்திருக்கிறார், அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். பாருங்கள்? 41கவனியுங்கள், அது அங்கிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அதை விசுவாசித்து அதைப் பெற்றுக்கொள்ள விரும்பினான். ஆனால், அதை அவன் எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிவிக்கப்பட்ட போது, அது அவனுடைய சடங்காச்சாரங்களைக் காட்டிலும் வித்தியாசமாயிருந்தது. அவன் தன் ஆஸ்தியை வைத்துக் கொண்டே, அவன் சேர்ந்திருந்த சபையில் அங்கத்தினனாக இருக்க முடியும், இயேசு அதை அறிந்தார். அவன் பணத்தை அதிகமாக சேர்த்து வைத்திருந்தான் என்பதை அவர் அறிந்தார். அவர், ''உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு. பின்பு சிலுவையை எடுத்து கொண்டு என்னைப் பின்பற்றி வா. அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்'' என்றார் (மாற்கு 10:21). அவனால் அப்படி செய்ய முடியவில்லை. அவனுடைய வாலிப நாட்களில் அவனுக்கிருந்த மற்ற தலைவர்கள் அவன் மேல் அதிக செல்வாக்கு கொண்டிருந்தபடியால், தேவன் அவனுக்கு அளித்திருந்த வழியாகிய இயேசு கிறிஸ்துவை அவன் ஏற்றுக்கொள்ள மறுத்தான். இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே நித்திய ஜீவனை கொண்டிருக்கிறார். அவர் ஒருவர் மாத்திரமே அதை உங்களுக்கு அளிக்க முடியும். ஸ்தாபன சபை உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க முடியாது. உங்கள் அண்டை வீட்டார், உங்கள் போதகர், உங்கள் குருவானவர், உங்கள் கோட்பாடுகள் யாருமே அதை கொடுக்க முடியாது. இயேசுகிறிஸ்து ஒருவர் மாத்திரமே உங்களுக்கு நித்திய ஜீவனையளிக்க முடியும். நீங்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும், நீங்கள் சில காரியங்கள் செய்வதை விட்டுவிட்டாலும், சில காரியங்களை செய்ய தொடங்கினாலும், அதனால் ஒன்றுமில்லை. நீங்கள் இயேசுகிறிஸ்து என்னும் நபரை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் செய்யும் போது, அவர் வார்த்தையாயிருப்பதால், உங்கள் வாழ்க்கை வார்த்தையுடன் சரியாகப் பொருந்தி, நீங்கள் வாழும் இந்த காலத்திற்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. 42நோவா, தன் காலத்தில் வார்த்தை வெளிப்படுவதற்காக அவ்வாறு செய்ய வேண்டியதாயிருந்தது. மோசே வந்து, ''நோவா என்ன செய்தான் என்று நமக்குத் தெரியும். நாம் நோவாவின் வார்த்தையை ஏற்றுக் கொள்வோம். நோவா செய்ததைப் போன்றே நாமும் செய்வோம். நாம் ஒரு பேழையைச் செய்து நீல நதியில் மிதக்கவிட்டு, அதிலேறி எகிப்தை விட்டு வெளிவருவோம்'' என்று கூறியிருந்தால் என்னவாயிருக்கும்? அது கிரியை செய்திருக்காது. பாருங்கள், அது வேறொரு காலத்திற்கு. இயேசு மோசேயின் செய்தியுடன் வந்திருக்க முடியாது; லூத்தர் கத்தோலிக்க செய்தியுடன் வந்திருக்க முடியாது; வெஸ்லி லூத்தரின் செய்தியுடன் வந்திருக்க முடியாது; பெந்தெகொஸ்தேயினர் வெஸ்லி காலத்து செய்தியுடன் வந்திருக்க முடியாது. மணவாட்டி பெந்தெ கொஸ்தே ஸ்தாபனத்தில் உருவாகமுடியாது, முடியவே முடியாது. அது முற்றிலும் உண்மை. அவள் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டு, விலகிச் சென்று, மற்றவர்களைப் போலவே இருக்கிறாள். அது பதர், ஜீவன் எவ்வாறு தண்டின் மூலம் பாருங்கள்? 43அன்றிரவு நான் கூறினது போன்று, அந்த புத்தகத்தை எழுதினவர்... என்னை பயங்கரமாக குற்றப்படுத்தி எழுதியுள்ளார் என்பதற்காக அல்ல. அவர், ''ஒரு பிசாசு, அப்படி ஒன்று இருந்தால்'' என்று கூறியுள்ளார். அவருக்கு தேவன் மேல் நம்பிக்கையில்லை. அவர், ''ஆதி காலங்களில் இரத்த சாட்சிகள் மரித்தபோது கைகட்டி பார்த்துக் கொண்டிருந்த தேவன், சிவந்த சமுத்திரத்தைப் பிளக்க தமக்கு வல்லமை இருந்ததாக கூறிக் கொள்கிறார். பெண்களும் ஆண்களும் சிங்கங்களால் பீறுண்டு சாவதை அனுமதித்துவிட்டு, அவர் அன்புள்ள தேவன் என்று கூறிக் கொள்கிறார். தேவன் என்று ஒருவர் கிடையவே, கிடையாது'' என்று எழுதியுள்ளார். பாருங்கள், அந்த ஆளுக்கு வார்த்தையைக் குறித்த வெளிப்பாடு இல்லாத காரணத்தால் அதைக் காண தவறிவிட்டார். 44முதலாம் கோதுமை மணியாகிய மணவாளன் பூமியில் விழுந்து மறுபடியும் உயிரோடெழ வேண்டியிருந்தது. அவ்வாறே பெந்தெகொஸ்தே நாளில் பிறந்த முதலாம் மணவாட்டியும், மற்ற வித்துக்களைப் போலவே, இருளின் காலங்களின் வழியாக கடந்து, புதைக்கப்பட வேண்டியிருந்தது. அவர்கள் மரிக்க வேண்டியிருந்தது. ஆனால், அது முதலாம் சீர்திருத்தத்தின் போது முளைக்கத் தொடங்கினது. அப்பொழுது அது காண்பதற்கு நிலத்தினடியில் சென்ற வித்தைப் போல் இருக்கவில்லை. ஆனால், அது அக்காலத்து வெளிச்சமாகத் திகழ்ந்தது. அந்த தண்டிலிருந்த ஜீவன் வெஸ்லியின் காலத்தில் மகரந்தப் பொடிக்குள் சென்றது. அது மகரந்தப் பொடியிலிருந்து பெந்தெகொஸ்தேயினரின் காலத்தின் போது பதருக்குள் சென்றது. நீங்கள் கோதுமை கதிரை அப்பொழுது காணும் போது - இது கோதுமை பயிரிடுகிறவர்களுக்கு நன்றாக தெரியும் - காண்பதற்கு அது கோதுமை மணியைப் போலவே இருக்கும். ஆனால், நீங்கள் ஒரு சாமணத்தை எடுத்து அதை திறந்து பார்த்தால், அதற்குள் கோதுமை மணி இருக்கவே இருக்காது. அது வெறும் பதர் மாத்திரமே. பிறகு என்ன? கோதுமை மணியைப் பிடித்துக் கொள்வதற்காக பதர் உருவாகியுள்ளது. பாருங்கள்? முதலாவதாக நீங்கள் அறிய வேண்டியது, ஜீவன் தண்டைவிட்டு மகரந்தப் பொடிக்குள் சென்றது; அது மகரந்தப் பொடியை விட்டு பதருக்குள் சென்றது; அது பதரை விட்டு கோதுமை மணிக்குள் செல்கின்றது. அதன் மூன்று கட்டங்கள், பாருங்கள். இந்த மூன்று கட்டங்களுக்கு வெளியே கோதுமை உண்டாகின்றது. (அதாவது லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர்). அது முற்றிலும் உண்மை. பாருங்கள், சந்தேகமேயில்லை. நீங்கள் இயற்கையை ஒருக்காலும் தடை செய்ய முடியாது. 45இப்பொழுது கவனியுங்கள், தேவனால் அனுப்பப்பட்ட செய்தி புறப்பட்டு சென்று மூன்று ஆண்டுகள் கழிந்தவுடனே, அவர்கள் ஒவ்வொரு முறையும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். ஆனால், இந்த செய்தி நமக்களிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் ஆயின. இருப்பினும், ஸ்தாபனம் எதுவும் ஏற்படவில்லை. ஸ்தாபனம் ஏற்படாது. பாருங்கள்? இப்பொழுது பதர் விலகிச் சென்று, கோதுமை மணி சூரியனான குமாரனுக்கு முன்னால் கிடத்தப்பட்டு, செய்தியினால் முதிர்வடைய அதற்கு தருணம் அளிக்க வேண்டும். அது மீண்டும் சபைக்கு வந்து, பூமிக்கடியில் சென்ற மூல கோதுமை மணியைப் போலவே காணப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் சரீரமாக உருவாகும் நித்திய ஜீவன். 46தண்டு முன்பு ஜீவனை சுமந்திருந்தது. நிச்சயமாக அது அப்படி செய்தது. ஆனால் பாருங்கள், தண்டு முடிந்து ஸ்தாபனமாக ஆனவுடனே, ஜீவன் வெஸ்லிக்குள் பிரவேசித்தது; அங்கிருந்தும் வெளி வந்தது. ஏன்... அவை ஒவ்வொன்றையும் கவனியுங்கள். ஒரு பெரிய கதிர். முதலில் அது கோதுமை மணியைப்போல் காணப்படவில்லை. ஆனால் சிறு மகரந்தப் பொடிகள் தண்டில் தோன்றினவுடனே, அது கோதுமை மணியைப் போல் காணத் தொடங்குகின்றது. ஆனால் பதர் உண்டாகும் கட்டத்தை அது அடையும் போது, கோதுமை மணி ஏறக்குறைய அங்குள்ளது போலவே தோற்றமளிக்கிறது. ''கடைசி நாட்களில் இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருந்து, கூடுமானால் அணுக்களாகிய தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்'' என்று இயேசு கூறினார் அல்லவா? (மத்.24:24). ஏறக்குறைய உண்மையானது போலவே தோற்றமளிக்கிறது, பாருங்கள். எனவே கடைசி நாட்களில். இப்பொழுது பாருங்கள், இது கோதுமை மணி உண்டாகும் காலம். அறுவடை காலம் வரவிருக்கிறது. இது லூத்தரின் காலம் அல்ல, இது பெந்தெகொஸ்தேயினரின் காலம் அல்ல. இது மணவாட்டியின் காலம். மோசே ஒரு தேசத்திற்குள் இருந்த வேறொரு தேசத்தை வெளியே அழைத்தது போல, இன்று கிறிஸ்து ஒரு சபைக்குள் இருக்கும் வேறொரு சபையை வெளியே அழைக்கிறார். பார்த்தீர்களா? அதே காரியம். மோசே செய்தது முன்னடையாளமாய் உள்ளது - அவர்களை மகிமையுள்ள, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய தேசத்திற்கு கொண்டு செல்லுதல். 47இவ்வாறு அழைக்கும் நபராகிய கிறிஸ்துவை ஏற்க மறுத்தல்; நீங்கள் பெந்தெகொஸ்தேயினர், மெதோடிஸ்டு, லூத்தரன் யாராயிருந்தாலும், நீங்கள் ஏற்க வேண்டும். இந்த காலம்! அவர்களுக்கு விரோதமாக ஒன்றுமில்லை, இல்லவே இல்லை. ஆனால் இந்த காலத்தில் - இப்பொழுது கிறிஸ்து என்னும் நபரை ஏற்றுக்கொள்ள வேண்டும். (அவர்கள் அந்த காலத்தில் செய்தது போல்). அவர் வார்த்தையாயிருக்கிறார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார். யோவான் 1:1,14. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எபி.13:8 பாருங்கள், நீங்கள் நித்திய ஜீவனாகிய அந்த நபரை ஏற்றுக்கொள்ள வேண்டும். 48லூத்தர் பெற்றிருந்த ஜீவன், நீதிமானாக்கப்படுதல். வெஸ்லி அதனுடன் கூட பரிசுத்தமாக்கப்படுதல் என்பதை பெற்றிருந்தார். பெந்தெகொஸ்தேயினருக்கு வரங்கள் புதுப்பிக்கப்பட்டு, அவை மீண்டும் அளிக்கப்பட்டு, மற்றவைகளுடன் கூட சேர்க்கப்பட்டது. இப்பொழுது அது சரீரத்தில் முடிவடைகிறது. பார்த்தீர்களா? மூன்று கட்டங்கள். அதிலிருந்து... உயிர்த்தெழுதல் நிகழும் போது, லூத்தர் காலத்தில் இருந்த லூத்தரன்களில் தங்கி வெளியே சென்ற ஜீவன், வெஸ்லியின் காலத்தில் இருந்த மெதோடிஸ்டுகளில் தங்கி வெளியே சென்ற ஜீவன். பெந்தெகோஸ்தேயினருக்குள் சென்ற ஜீவன் - இவர்கள் அனைவரும் உயிர்த்தெழுந்து, மணவாட்டியின் சரீரத்தில் இணைந்து, இயேசுகிறிஸ்துவின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். தேவனுக்கு மகிமை! ஓ, அது உணர்ச்சியூட்டுகிறது! இதுவே சத்தியம். 49நாம் மூலையிலிருந்து திரும்பிவிட்டோம். நாம் வானத்தை நோக்கினவர்களாய் - நாம் கூறுவது போல், கூர்நுனிக் கோபுரத்தின் தலைக்கல்லின் வருகையை - அவருடைய வருகையை எதிர்நோக்கியிருக்கிறோம். சபை விரைவில் உயிர்த்தெழ வேண்டும். நாம் ஆயத்தமாக வேண்டும். ஆயத்தமாக ஒரே வழி, ''நான்'' அசெம்பிளிஸ் ஆஃப் காட்டைச் சேர்ந்தவன், நான் ஒருத்துவக்காரர், இருத்துவக்காரரைச் சேர்ந்தன், நான் ''சர்ச் ஆஃப் காட்'டை சேர்ந்தவன்'' என்று கூறுவதனால் அல்ல. அதனால் ஒரு அர்த்தமுமில்லை. ''எங்கள் முன்னோர்கள் கூச்சலிட்டு நடனமாடினார்கள். ''அது மிகவும் சரியே.'' அது, அவர்களுடைய காலம். ஆனால், இன்றைக்கோ அவர்கள் ஏற்படுத்தின ஸ்தாபனத்தில் நீ சேர்ந்திருப்பதனால் அல்ல, தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் ஜீவனாகிய இயேசு கிறிஸ்துவுடன் நீ செல்வதே முக்கியம் வாய்ந்தது. 50இந்த வாலிபனும் ஸ்தாபனத்தில் நிலைத்திருக்கும் செயலையே புரிந்தான். பாருங்கள், தமது தீர்க்கதரிசியின் மூலம் கற்பனைகளை எழுதின அதே தேவன், அந்த தீர்க்கதரிசியின் மூலம், உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவிகொடாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்'' என்று தீர்க்கதரிசனம் உரைத்தார் (உபா.18:15). ஸ்தாபன மகரந்தப் பொடியிலிருந்தும் பதரிலிருந்தும் அவர்கள் ஜீவனுக்கு செல்ல வேண்டும். இன்றைக்கு, ''நான் பெந்தெகொஸ்தேயினன். நான் இதை சேர்ந்தவன், அதை சேர்ந்தவன்,'' என்று சொல்லாதீர்கள். அதற்கு ஒரு அர்த்தமுமில்லை. நீங்கள் நித்திய ஜீவனாகிய கிறிஸ்து என்னும் நபரை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை நாம் ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டியவர் களாயிருக்கிறோம். அதை மறந்துவிடாதீர்கள். அந்த வாலிபன் பேரில் தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தினபடியால், ''நாங்கள் இதை சேர்ந்தவர்கள் அதை சேர்ந்தவர்கள்'' என்று அக்காலத்து ஜனங்கள் கூறினர். அப்படிப்பட்ட ஒரு ஆதிக்கத்தை அவன் மேல் செலுத்தினர். ஆனால், நித்திய ஜீவனின் வழி நடத்துதலை உதறித்தள்ளுவதென்பது எத்தகைய மரணத்து கேதுவான செயலாயுள்ளது. 51இன்றிரவு அந்த ஜீவன் இங்கு பிரசன்னமாயுள்ளது. அது உண்மை. பரிசுத்த ஆவியானவர் இங்குள்ளார். அவர் ஆவியின் வடிவில் கிறிஸ்து, அவருடைய ஆவி, அபிஷேகம் இங்குள்ளது. ''இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள்... நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பேன்... யோவான்;14:19. இயேசு மாத்திரமே உங்களை அந்த நித்திய ஜீவனுக்கு வழி நடத்த முடியும். எந்த ஸ்தாபனமும், எந்த போதகரும், எந்த குருவானவரும், வேறு யாருமே உங்களை அங்கு வழிநடத்த முடியாது. நீங்கள் அவரால் வழிநடத்தப்பட வேண்டும். அவர் ஒருவர் மாத்திரமே உங்களை வழிநடத்த முடியும். 52அவர் வார்த்தையிலிருந்து, அதாவது அவரிலிருந்து உங்களை புறம்பே வழி நடத்துவார் என்று நினைத்துப் பார்க்க முடிகிறதா? அவர் வார்த்தையாயிருந்து, நீங்கள் அவருடைய பாகமாயிருப்பீர்கள் என்றால், நீங்கள் வார்த்தையின் ஒரு பாகமாக இருப்பீர்கள் அல்லவா? தேவன் இரட்சிப்பின் தண்ணீர்களாகிய வார்த்தையை, அவரை அடையாளங் கண்டு கொள்ளுவதற்கென, இன்று உங்கள் மேல் ஊற்றுகிறார். அப்போஸ்தலர் அவ்வாறே அவரை அடையாளங் கண்டு கொண்டனர். லூத்தரும், வெஸ்லியும், அவர்கள் காலத்திலிருந்தவர்களும் அவ்வாறே அவரை அடையாளங் கண்டு கொண்டனர். இது வேறொரு காலம். அது வார்த்தை. வார்த்தை இவைகளைக் கூறினது, அவை நிறைவேறுவதை நாம் காண்கிறோம். இந்த மணி நேரத்தில் அவை நிறைவேறுமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. எனவே, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்குள் வழி நடத்தட்டும். நித்திய ஜீவன். 53இந்த வாலிபன் அடைந்திருந்த போதிலும்... அவன் எல்லா நல்ல காரியங்களையும் அடைந்திருந்தான். அவன் பள்ளிக்கூடத்தில் ஒரு நல்ல பையனாக இருந்தான் என்பதில் சந்தேகமில்லை. தந்தைக்கு உண்மையாக... அவன் வியாபாரத்தில் தந்தைக்குக் கீழ்ப்படிந்தான். அவன் நல்லவன். அவனுடைய பெற்றோர்களுக்கு அவன் நல்லவனாயிருந்தான். அவனுடைய குருவானவருக்கு அவன் விசுவாசமுள்ளவனாயிருந்தான். அவனுடைய சபைக்கு அவன் உத்தமமாயிருந்தான். தேவனுடைய கற்பனைகளை அவன் உத்தமமாய் கைக்கொண்டான். ஆனால், அவன் மிகப்பெரிய ஒன்றை இழந்துபோனான். அவன் நித்திய ஜீவனாகிய இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலை நிராகரித்த போது, மற்றவை அனைத்தும் அவனுக்கு அர்த்தமற்றதாகிவிட்டன. கவனியுங்கள்! இந்த வழிநடத்துதலைக் குறித்த பிரச்சினை நம் ஒவ்வொருவரையும் சந்திக்கின்றது, அந்த வாலிபனைச் சந்தித்தது போல... நாம் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருந்தாலும். நீங்கள் கத்தோலிக்கர், பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, பெந்தெகொஸ்தேயினர், அல்லது யாராவது இருக்கலாம். ஆனால், இன்றிரவு இந்த பிரச்சினை உங்களை சந்திக்கிறது. நித்திய ஜீவன், அதாவது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதல். நமக்கு இந்த தருணம் அளிக்கப்படுகின்றது. 54நமது வாழ்க்கையில் எப்பொழுதாவது இதை நாம் சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில், நீங்கள் மரிக்க வேண்டிய மானிடர்கள், தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு ஒரு தருணம் அளிக்கப்படுகின்றது. நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்வதற்கென்றே தேவன் அதை வைத்திருக்கிறார். அவர் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தெரிந்துக்கொள்ளும் சுதந்தரத்தை அளித்தார். அவர்களோ தவறானதை தெரிந்து கொண்டனர். பாருங்கள், அவர் அவர்களுக்கு செய்ததைவிட உங்களுக்கு அதிகம் செய்ய முடியாது. நீங்கள் தெரிந்துக்கொள்ள அல்லது நிராகரிக்க தேவன் உங்களை அதே நிலையில் வைக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்துக்கொள்ள ஒரு தருணம் அளிக்கப்படுகின்றது. அவைகளில் சிலவற்றை நாம் பார்ப்போம். ஒரு வாலிபனாக, நீங்கள் கல்விகற்கப் போகின்றீர்களா, இல்லையா என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த தருணம் உங்களுக்குண்டு. ''எனக்கு வேண்டாம்“ என்று சொல்லி, அதை மறுத்துவிடலாம். உங்களுடைய நடத்தையை குறித்தும் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். இங்கு உங்களை சற்று புண்படுத்த போகின்றேன். பாருங்கள்? நீங்கள் உங்கள் தலைமயிரை வளர்த்து ''பீட்டில்''லைப் (beatle) போன்றோ அல்லது இம்மூடர்களில் ஒருவரைப் போன்று இருக்கலாம். பெண்களாகிய நீங்கள், நாணயமுள்ளவர்களாக இருக்கலாம், அல்லது நாம் தெருக்களில் காணும் நீலக்கண்கள் கொண்ட பயங்கரத் தோற்றமுள்ள பிறவிகளைப் போல் இருக்கலாம். ''வாட்டர் ஹெட்'' சிகை அலங்காரம் போன்றவை. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் விரோதமாய் இருக்கின்றனர், அது முற்றிலும் முரணானது... அவர்களுடைய ஜெபங்கள் கூட ஏற்றுக்கொள்ளப்படாது. அது உண்மை. முற்றிலும் உண்மை. அப்படித்தான் வேதம் கூறுகின்றது. ஆனால் சபையே, உனக்கு என்ன நேர்ந்தது? நீ தொலைகாட்சி நிகழ்ச்சிகளை அதிகமாகக் கண்டு, உலகத்தின் காரியங்களை அதிகமாகக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய பழைய ஆதாமின் சுபாவம் மிதந்து சென்று அதற்குள் நுழைந்து, மற்றவர்களைப் போல் நடந்து கொள்வதென்பது மிகவும் எளிது. 55இதை நான் மறுபடியும் கூறட்டுமா? அப்பத்தில் மோசேயின் காலத்தில் பலி செலுத்தப்பட்டபோது, அவன் இஸ்ரவேல் புத்திரரை வெளியே கொண்டு வந்தபோது, ஜனங்களிடையே ஏழு நாட்கள் புளித்த மா இருக்கக்கூடாது. அது எவருக்கும் தெரியும். யாத்திராகமத்தில், ''ஏழு நாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது“ என்று கூறப்பட்டுள்ளது (யாத்.12:19). அந்த ஏழுநாட்கள் ஏழு சபை காலங்கள் முழுவதையும் குறிக்கின்றன. பாருங்கள்? புளித்த மா கூடாது. அது என்ன? கோட்பாடுகள் கூடாது. ''நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால், உங்களிடத்தில் பிதாவின் அன்பில்லை'' என்று இயேசு கூறியுள்ளார் (1.யோவான் 2:15). பாருங்கள்? நாம் அதைக் கலக்கப் பார்க்கிறோம். நீங்கள் அப்படி செய்யக்கூடாது. நீங்கள் விசுவாசிக்கும் விஷயத்தில் ஏதாகிலும் ஒரு காரியத்திற்கு வர வேண்டும், அல்லது உங்கள் ஸ்தாபன சபையை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் ஸ்தாபன சபையை விசுவாசிக்கும் போது உலகத்தை விசுவாசிக்கின்றீர்கள். இவ்விரண்டையும் நீங்கள் கலக்க முடியாது. உங்களுக்கு முன் இருந்த ஸ்தாபன சபை செய்ததை நீங்கள் பின்பற்ற முடியாது. நீங்கள் இந்த மணி நேரத்தையும் அதன் செய்தியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 56அவர் மீதமுள்ளதை அடுத்த நாள் காலை வரைக்கும் வைத்திருக்க வேண்டாம் (அடுத்த காலத்திற்கு அதை கொண்டு செல்ல வேண்டாம்) அதை நெருப்பினால் சுட்டெரியுங்கள்; அதை அழித்துப் போடுங்கள்'' என்றார். அந்த காலத்தில் தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இக்காலத்தின் செய்தியானது வேதத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டு, தேவனால் உறுதிப்படுத்தப்பட்டு, அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது புறக்கணிக்க வேண்டும். அதுவே நித்திய ஜீவன், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல். அவர் தமது சபையை வழி நடத்துகிறார். இதிலே நாம் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியும். ஆனால், நாம் கடந்து செல்வோம். 57உங்கள் நடத்தையை தெரிந்து கொள்ளுதல். நீங்கள்... நீங்கள் அதை கலக்க முடியாது. நீங்கள் தேவனுடைய சார்பில் இருக்க வேண்டும். அல்லது அவருக்கு விரோதமாக இருக்க வேண்டும். உங்கள் வெளிப்புறத்தோற்றம், உள்ளே என்ன உள்ளதென்பதை தெளிவாக காண்பிக்கின்றது. பாருங்கள்? களையானது, ''எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கிடைத்துவிட்டது. நான் பரலோகத்துக்கு செல்வேன்'' என்று நாம் நினைக்கிறோம். அதன் காரணமாக நீங்கள் பரலோகத்துக்கு செல்வீர்கள் என்று அர்த்தமில்லை. இல்லை, ஐயா. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒவ்வொரு மணி நேரமும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்து, அதே சமயத்தில் இழக்கப்பட்டவர்களாய் நரகத்துக்கு செல்ல முடியும். வேதம் அவ்வாறு கூறுகின்றது. உ,ஊ, அது முற்றிலும் உண்மை. 58இங்கே பாருங்கள். உங்கள் வெளிப்புற ஆள். உங்களுக்கு ஐம்புலன்கள் உள்ளன. அது உங்கள் வெளிப்புற சரீரத்துடன் தொடர்பு கொள்கின்றது. தேவன் உங்களுக்கு ஐம்புலன்களைக் கொடுத்திருக்கிறார். அவருடன் தொடர்புக்கொள்ள அல்ல, பூமிக்குரிய வீடுடன் தொடர்பு கொள்ள: பார்த்தல், ருசிபார்த்தல், உணர்தல், முகர்தல், கேட்டல். அதற்குள் நீங்கள் ஒரு ஆவியைக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு ஐந்து வடிகால்கள் உள்ளன: மனசாட்சி, அன்பு போன்றவை. இந்த ஐந்து வடிகால்களின் மூலம் நீங்கள் ஆவி உலகத்துடன் தொடர்புக் கொள்ளுகிறீர்கள். உங்கள் சரீரம், சரீரத்துக்குரியவைகளுடன் தொடர்பு கொள்கின்றது. உங்கள் ஆவி, ஆவிக்குரியவைகளுடன் தொடர்பு கொள்கின்றது. ஆனால், அதற்கும் உள்ளில் உங்கள் ஆத்துமா உள்ளது. அந்த ஆத்துமா தேவனிடத்திலிருந்து வந்த அணுவாகும் (gene). 59ஒரு குழந்தை அதன் தாயின் கர்ப்பத்தில் உருவாவது போல். ஒரு சிறு கிருமி முட்டைக்குள் ஊர்ந்து சென்று, குழந்தை கர்ப்பத்தில் உருவாகின்றது. அது ஒரு மானிட உயிரணு (cell), அதற்கடுத்ததாக ஒரு நாயின் உயிரணு, அதற்கும் அடுத்ததாக ஒரு பூனையின் உயிரணு, பின்பு குதிரையின் உயிரணு அடுக்கப்பட்டு உருவாவதில்லை. அவையனைத்துமே மானிட உயிரணுவாக உள்ளன. ஏனெனில், அந்த குழந்தை மூல மானிட உயிரணுக்கள் ஒன்று சேர்க்கப்பட்டே உருவாக வேண்டும். நித்திய ஜீவனுக்கென்று தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையில் மறுபடியும் பிறக்கும் போது, அது தேவனுடைய வார்த்தை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டதாக இருக்கும். அது ஸ்தாபனக் கோட்பாடு, அதன் மேல் வார்த்தை, அதன் மேல் கோட்பாடு இவ்வாறு அடுக்கப்பட்டதாக இருக்காது. அது கிரியை செய்யாது. அதில் நீங்கள் புளித்த மாவைச் சேர்க்கக்கூடாது. ஒரே ஒரு நித்திய ஜீவன் உண்டு, வார்த்தையாகிய இயேசுகிறிஸ்து. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார். 60நண்பர்களே, நீங்கள் என் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கின்றீர்கள். இச்செய்தியை அளிக்க, என்னை உலகின் பல்வேறு பாகங்களுக்கு சுவிசேஷ ஊழியங்களுக்காக அனுப்புகிறீர்கள். நான் உங்களிடம் உத்தமமாய் இருக்க வேண்டும். நான் காண்பதை ஒருக்கால் நீங்கள் காணாமல் இருக்கலாம். ஆகவே, தான் உங்களுக்கு விளக்கி காண்பிக்க நான் இங்கிருக்கிறேன். நான் ஜனங்களை நேசிக்காததனால் அல்ல, நான் ஜனங்களை நேசிப்பதனால் தான் அவர்களை திருத்த முயல்கிறேன். சபைகள் நழுவி அகன்று சென்று, ''நான் இதை செய்தேன், அதை செய்தேன்“ என்று கூறுவதை நான் காணும் போது, சபையை சுற்றும் முற்றும் பார்த்து அவர்கள் செய்வதைக் காணும் போது... அது ஒருக்காலும் நடக்காது. வேதத்தைப் பார்க்கும் போது, கடைசியில் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதை காண்கிறோம். வெதுவெதுப்பான லவோதிக்கேயா சபை இயேசுவை (வார்த்தையை வெளியே தள்ளி விடும். அவர் ஒரு சபையை அழைக்கப் போவதில்லை. அவர், ''நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்'' என்று கூறினார் (வெளி.3:19). அவர் வார்த்தையை எடுத்துக் கொண்டு, அதைக் கொண்டு உங்களை அடித்து, இதில் நீங்கள் தவறு செய்கின்றீர்கள்'' என்று கூறுகிறார். அதன்மூலம் நான் உங்களை நேசிக்கிறேன் என்பது புலனாகும். ''கதவைத் திறந்து என்னை அனுமதித்தால், நான் உள்ளே பிரவேசித்து உன்னோடே போஜனம் பண்ணுவேன். ''ஒரு சபையல்ல, அதிலிருந்து அவர் வெளியே தள்ளப்பட்டார். 61அது உலக சபைகள் ஆலோசனை சங்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அங்குதான் அது சென்றுவிட்டது. அது வெளிவந்த அதே ரோமாபுரிக்குள் மீண்டும் சென்றுவிட்டது. அது முற்றிலும் உண்மை. இதை இருபத்தைந்து, அல்லது முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தேன். இதோ அது நிறைவேறிவிட்டது. அது மாத்திரமல்ல, அது வேதத்திலும் தரிசனங்களாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் சென்றுவிட்டது. அதைக் காப்பாற்ற வழியேயில்லை, அது சென்றுவிட்டது. அது அப்படித்தான் நடக்க வேண்டும். தேவன் தனிப்பட்ட நபர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார். ''இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். ஒருவன்... ''(வெளி.3:20). ஆயிரத்தில் ஒரு நபர், அது பத்து லட்சத்தில் ஒரு நபராகவும் இருக்கலாம். சில இரவுகளுக்கு முன்பு நான் கூறின வண்ணமாக இஸ்ரவேலர் எகிப்தை விட்டு புறப்பட்ட போது, அவர்களின் தொகை இருபது லட்சமாயிருந்தது இருபது லட்சம். ஆனால், இரண்டு பேர் மாத்திரமே உள்ளே சென்றனர். பத்து லட்சத்தில் ஒருவர், உங்களுக்குத் தெரியுமா? காலேபும், யோசுவாவும். இயேசு இவ்வுலகிலிருந்த போது, அவர்கள், ''எங்கள் பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைப் புசித்தார்கள். நாங்கள் பாரம்பரியங்களைக் கைக்கொள்கிறோம். நாங்கள் இதை செய்கிறோம். எங்கள் நிலையை நாங்கள் அறிந்திருக்கிறோம்'' என்றனர். அவர், ''உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவை புசித்தார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் நித்தியமாக பிரிக்கப்பட்டார்கள். அவர்கள் மரித்தார்கள்'' என்றார். 62ஆணிலிருந்து இலட்சக்கணக்கான கிருமிகளும், பெண்ணிலிருந்து இலட்சக்கணக்கான முட்டைகளும் தோன்றுகின்றன. ஆனால், அவைகளில் ஒன்று மாத்திரமே ஜீவனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. அதை சந்திக்க ஒரு செழிப்பான முட்டை காத்துக் கொண்டிருக்கிறது. அது உண்மை. அது ஒரு முட்டையை மாத்திரமே சந்திக்கின்றது. இந்த சரீரம் இங்கு உட்கார்ந்து கொண்டு, கிருமி தேவனிடமிருந்து வந்தது போல. பாருங்கள்? அத்தனை கிருமிகளின் மத்தியிலும் அந்த சிறு கிருமி வேகமாக அசைந்து அவைகளைக் கடந்து வந்து, அந்த செழிப்பான முட்டையைக் கண்டுபிடித்து அதற்குள் ஊர்ந்து செல்வதை கவனியுங்கள். மற்றவை சாகின்றன. இன்றைய சபையும் அவ்வாறே பத்து லட்சத்தில் ஒன்று என்று இருக்க வழியுண்டு அல்லவா? அப்படியானால் அது எங்கிருக்கும்?ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.'' (மத். 7:14,13) சகோ. பிரான்ஹாமே, அது உண்மையா? எனக்குத் தெரியாது. நான் வேதவாக்கியத்தை அப்படியே எடுத்துரைக்கிறேன். பாருங்கள்? 63நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதை காண நீங்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அதைக் காண்பீர்கள். அதை காண நீங்கள் நியமிக்கப்படாவிட்டால், அதைக் காண மாட்டீர்கள். அவர்கள் கண்களிருந்தும் காணாமலும், காதுகளிருந்தும் கேளாமலும் இருக்கிறார்கள்'' என்று வேதம் கூறுகின்றது. சபையே, நீங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இந்த காரியங்களிலிருந்து உங்களை எவ்வளவாய் சரிபடுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் தேவனுக்காக எவ்வளவு அனலுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் காண வேண்டியதை உங்கள் கண்கள் காண்கின்றன. நீங்கள் கேட்க வேண்டியதை உங்கள் காதுகள் கேட்கின்றன. வழிநடத்துதல்! இப்படிப்பட்ட ஒரு செய்தியைக் கேட்க இன்றிரவு இங்கு ஏன் வந்திருக்கிறீர்கள்? நான் உலகம் முழுவதும் சபைகளால் மூடபக்தி வைராக்கியம் கொண்டவன்'' என்று அழைக்கப்படுகிறேன். நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? இதைக் கேட்க பரிசுத்த ஆவியானவர் உங்களை இங்கு வழி நடத்தினார் (பாருங்கள்? பாருங்கள்?) உங்களை விருத்தசேதனம் செய்து கொள்ளுங்கள். உலக காரியங்களை உங்களை விட்டகற்றி, இயேசு கிறிஸ்துவின் வழி நடத்துதலை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், உலகம் அழிவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக நீங்கள் அழிந்து போவீர்கள். 64நடத்தையைக் குறித்த விஷயத்தில் தெரிந்து கொள்ள உங்களுக்கு உரிமையுண்டு. நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது. மனைவியைத் தெரிந்துக்கொள்ளும் விஷயத்திலும் உங்களுக்கு உரிமையுண்டு. நீங்கள் வெளியே சென்று உங்கள் மனைவியை தெரிந்து கொள்கிறீர்கள். உங்களுக்கு விருப்பமான ஒருத்தியை, உங்கள் எதிர்கால குடும்பத்தை நன்றாக திட்டமிட்டு செயல்படக் கூடிய ஒருத்தியை நீங்கள் தெரிந்து கொள்கின்றீர்கள். கிறிஸ்தவ மனிதன் ஒருவன் நவீன ரிக்கெட்டாக்களில் ஒருத்தியை மனைவியாகத் தெரிந்துக்கொள்வான் என்று நினைக்கிறீர்களா? பாருங்கள்? அப்படி நினைக்க முடிகிறதா? அந்த மனிதனின் எண்ணம் என்ன? அரை நிர்வாணமுள்ள ஒருத்தியை, அல்லது பரிகாசமாக தோற்றமளிக்கும் ஒருத்தியை, தெருவிலுள்ள விலை மாதுவை அவன் மனைவியாகத் தெரிந்து கொண்டால், அவனுக்கு எப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கை இருக்கும்? ''ஓ'' என்று நீங்கள் கூறலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். அவள் எப்படி தன்னை உடுத்திக்கொள்கிறாள்? பாருங்கள்? பாருங்கள்? அவள் குட்டை கால்சட்டை போன்றவைகளை அணிந்துகொள்கிறாள். அவள் தெருவிலுள்ள விலைமாது. ''ஓ, சகோதரன் பிரான்ஹாமே'' என்று நீங்கள் கூறலாம். அதனுள் வார்ப்பிக்கப்பட்டது போல் இறுக்கமான பாவாடைகள், தெருவிலுள்ள விலைமாது. 65''ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று'' என்று இயேசு கூறினார் (மத்.5:28). அதற்கு அவன் பதில் சொல்லியாக வேண்டும். அவள் என்ன செய்தாள்? அவனுக்கு இச்சை உண்டாகும்படி தன்னைக் காண்பித்தாள். யார் குற்றவாளி? யோசித்து பாருங்கள். ''அவர்கள் வேறு உடைகளை தைப்பதில்லை'' என்று நீங்கள் கூறலாம். ஆனால், துணிகளும் தையல் மெஷின்களும் கடைகளில் விற்கப்படுகின்றன. பாருங்கள், சாக்குபோக்கு எதுவும் கிடையாது. உ,ஊ. அது முற்றிலும் உண்மை. உங்களை நான் புண்படுத்த விரும்பவில்லை. இது பரிகாசம் அல்ல. இது வேதத்திலிருந்து கர்த்தர் உரைக்கிறதாவது. நண்பனே, இது முற்றிலும் உண்மை. நான் வயோதிபன், இன்னும் நீண்டகாலம் நான் வாழப்போவதில்லை. நான் சத்தியத்தை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். இது என் கடைசி செய்தியாயிருக்குமானால், இது சத்தியம். பாருங்கள்? சகோதரியே, சகோதரனே, செய்யாதே. 66தேவனுடைய வார்த்தை உங்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தப்படுகின்றது என்று அறிந்தும், கோட்பாடுகளில் நிலைத்திருக்கும் மனிதரே, இன்று பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் அற்புதங்களும் நம்மிடையே தத்ரூபமாக உள்ளபோது, உங்கள் கோட்பாடுகளின் நிமித்தம் அவைகளின்று அகன்று சென்றுவிடுகிறீர்கள். நீங்கள் தேவனுடைய குமாரனாயிருந்தால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கடைசி நாட்களுக்கென முன்னுரைக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையை நீங்கள் எப்படி மறுதலிக்க முடியும்? நீங்கள் எப்படி செய்ய முடியும். சென்ற இரவு, ஒரு சமயம் தென்பகுதியிலிருந்த ஒரு ராஜாவைக் குறித்து கூறினேன். அவன் கறுப்பு நிறத்தவன். அவன் அடிமையாக விற்கப்பட்டான். உபயோகப்படுத்தின கார்களை விற்கும் சந்தை போன்று அவர்கள் விற்கப்பட்டனர். அதற்காக கொடுக்கப்பட்ட தொகைக்கு ரசீது கிடைக்கும். அதைக் கேட்டு நான் திடுக்கிட்டேன். ஓரிடத்தில்... ஒரு முறை இதை படித்தேன். கறுப்பு நிறத்தவரை வாங்குவதற்கு ஒரு தரகன் வந்திருந்தான். அவர்களைக் காண விரும்புகிறேன்'' என்றான் அவன். அவர்கள் விசனமாயிருந்தனர். அவர்களை சவுக்கால் அடித்து, வேலை வாங்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெகு தூரம் இருந்தனர். அவர்கள் அயல்நாட்டில் இருந்தபடியால், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் மறுபடியும் வீடு திரும்பமுடியாது. ஆகவே, அவர்கள் வருத்தமுற்றிருந்தனர். இந்த தரகன் ஒரு குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட தோட்டத்துக்கு சென்றிருந்தான். 67அங்கு மார்பை முன்னால் தள்ளிக்கொண்டு, முகவாய்க் கட்டையை உயர்த்தின வாலிபன் இருந்தான். அவனை சவுக்கால் அடிக்க வேண்டிய அவசியமில்லை. அவன் தன் வேலையை ஒழுங்காக செய்தான். அவன் மற்றவர்களுக்கும் மனவுறுதி அளித்து வந்தான். தரகன், ''இவனை வாங்கிக்கொள்கிறேன்'' என்றான். தோட்ட முதலாளி, ''இவன் விற்பனைக்கு அல்ல. இவனை நான் விற்கப்போவதில்லை. இவனை நீ வாங்க முடியாது. ஏனெனில், இவன் விற்பனைக்கு அல்ல'' என்றான். தரகன், ''இவன் மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாயிருக்கும் காரணம் என்ன? இவன் அவர்களுக்கெல்லாம் தலைவனா?'' என்று கேட்டான். முதலாளி, ''இல்லை'' என்றான். தரகன், ''அவனுக்கு வேறு உணவு தருகின்றீர்களா? என்று கேட்டான். முதலாளி, ''இல்லை, இவனும் ஒரு அடிமை. மற்றவர்கள் சாப்பிடுவதையே இவனும் சாப்பிடுகிறான். தரகன், ''இவன் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாயிருக்கக் காரணம் என்ன?'' என்றான். முதலாளி, ''நானும் அதைக்குறித்து வியந்தேன். ஆனால், இப்பொழுது கண்டு கொண்டேன். அவர்களுடைய சொந்த நாடான ஆப்பிரிக்காவிலே (அங்குதான் போயர்கள் இவர்களை வாங்கி இங்கு கொண்டு வந்து அடிமைகளாகவிற்றனர்), அவனுடைய தந்தை, பழங்குடியினரின் அரசனாம். அவன் அந்நிய நாட்டிலே ஒரு அந்நியனாக இருந்த போதிலும், அவன் ராஜாவின் புத்திரன் என்பதை அறிந்திருக்கிறான். அதற்கேற்ப அவன் நடந்து கொள்கிறான்'' என்றான். 68கிறிஸ்தவ மார்க்கத்துக்கு இது எத்தகைய கடிந்து கொள்ளுதலாக அமைந்துள்ளது. நாம் தேவனுக்கும் நித்திய ஜீவனுக்கும் பிரதிநிதிகளாக கருதப்படுகின்றோம். ஒரே வகையான நித்திய ஜீவன் மாத்திரமே உள்ளது. அது தான் தேவன். அவர் மாத்திரமே நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறார். நாம் அவருடையவர்களாக இருக்கிறோம். ஏனெனில், நாம் அவருடைய ஆவியின் அணுக்கள். அப்படியானால் நாம் - ஆண்களும் பெண்களும் - வேதம் நடந்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். தெருக்களிலுள்ள யேசபேல்களைப் போலவோ, ஸ்தாபனத்திலுள்ள ரிக்கிகளைப் போலவோ அல்ல; ஆனால், பண்புள்ள கிறிஸ்தவர்களாக தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக, தேவனுடைய ஆவியினால் பிறந்தவர்களாய், நம்முடைய நாட்களின் வெளிச்சத்தை வெளிப்படுத்தி, அதை சிதறச் செய்ய வேண்டும். அது முற்றிலும் உண்மை. 69ஆனால், நாம் எவ்வளவாக அதனின்று அகன்று சென்று விட்டோம். இந்த வாலிபன் செய்த விதமாகவே. அவன் நித்திய ஜீவனை ஏற்றுக்கொள்ள மறுத்து, அதை புறக்கணித்தான். ஏனெனில், சமுதாயத்தில் அவன் கொண்டிருந்த உயர்நிலையை அவன் இழக்க நேரிடும். அவனுடைய ஆஸ்தியினால் அவனுக்குக் கிடைக்கும் டாம்பீகத்தை அவன் இழக்க நேரிடும். சபையில் அவன் கொண்டிருந்த ஐக்கியத்தை அவன் இழக்க நேரிடும். அது, அநேக காரியங்களை அவன் இழக்கும்படி செய்யும். அவனுடைய இழப்பு எவ்வளவாயிருக்கும் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் புத்திசாலி. அவைகளை இழக்க அவன் விரும்பவில்லை. ''என் மார்க்கத்தை நான் நம்பி சொல்லப் போகின்றேன்'' என்று அவன் தீர்மானித்தான். இருப்பினும் அவனுடைய இருதயத்தின் ஆழத்தில், அக்காலத்து ஆசாரியர்களைக் காட்டிலும் இயேசு வித்தியாசமானவர்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். 70தேவனிடமிருந்து வரும் எந்த உண்மையான செய்தியும், பழைய போக்கினின்று வித்தியாசமுள்ளதாயிருக்கும். அண்மையில் தெய்வீக சுகமளித்தல் புறப்பட்டு சென்ற போது, போலியாட்கள் அதற்கு பின் எழும்பினதை கவனித்தீர்களா? அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய ஸ்தாபனங்களுக்கு சென்று அங்கேயே தங்கிவிட்டனர். அதை ஒரு செய்தி பின் தொடர வேண்டுமென்று யாருக்காகிலும் தெரியுமா?தேவன் நம்மை மகிழ்விப்பதில்லை (entertain) அவர் ஒன்றைக்கொண்டு நமது கவனத்தைக் கவர்கிறார். அப்படி அவர் நமது கவனத்தைக் கவர்ந்த பின்பு, அவருடைய செய்தியை அனுப்புகிறார். கவனியுங்கள், அவர் இவ்வுலகில் வந்து தமது ஊழியத்தை தொடங்கின போது, ''ஓ, வாலிப ரபீ, எங்கள் சபைக்கு நீங்கள் வர வேண்டும்'' என்றனர். அவரை வாலிப தீர்க்கதரிசி என்றனர். ''ஓ, எங்களிடம் வர வேண்டும், இங்கு வாரும்'' என்றனர். ஆனால், ஒரு நாள் அவர் நின்று, ''நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' என்றார் (யோவான் 10:30). ''ஓ, என்னே! அவன் தன்னை தேவனாக் கிக்கொள்கிறான்'' என்றனர். ''என் மாம்சத்தைப் புசியாமலும், என் இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை'' (யோவான் 6:53) என்று அவர் கூறினார். “இவன் இரத்தத்தை உறிஞ்சும் பிசாசு (Vampire) இவனுடன் எவ்வித சம்பந்தமும் வேண்டாம்'' என்றனர். ஆனால், அப்போஸ்தலர்களோ அவருடன் இருந்தனர். ஆயிரக் கணக்கானவர் அவரை விட்டுப்போயினர். ஆனால் அந்த அப்போஸ்தலர்களோ நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டிருந்தனர். இயேசு அவ்வாறு கூறினார். அவர்களால் அதற்கு விளக்கம் தர முடியவில்லை; அவர்கள் அதை விசுவாசித்தனர். அவர்கள் அதில் நிலை நின்றனர். ஏனெனில், ''இப்படிப்பட்ட அற்புதங்களை எந்த மனிதனும் செய்ய முடியாது.'' 71ஆசாரியர்களும் அதை அறிந்திருந்தனர். நிக்கொதேமு, “நாங்கள் அறிந்திருக்கிறோம்'' என்றான் (சனகரீம் சங்கம்). ''ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால், இப்படிப்பட்ட அற்புதங்களை செய்யமாட்டான்.'' (யோவான்; 3:2) பாருங்கள்? பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு நேசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து தம்மை வெளிப்படுத்தினார். தேவன் அவரோடுகூட இருந்தார்'' என்றான். வேத வசனங்களைப் பாருங்கள். அதை செய்ய வேண்டுமென்று வேதம் போதிக்கின்றது. இயேசு, ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. நீங்கள் மோசேயை அறிந்தீர்களானால், என்னையும் அறிவீர்கள். நான் எந்த உருவில் வருவேனென்று அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே'' (யோவான்; 5:39,46) என்றார். அவர் மனுஷ குமாரனாக வந்தார். 72அவர் மூன்று பெயர்களில் தேவனாக வருகிறார். மூன்று (பிதா குமாரன், பரிசுத்த ஆவி போல) அதே தேவன், அது மூன்று தன்மைகள். பிறகு நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாகுதல்... லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர்; அதே காரியம். மூன்று தன்மைகள், மூன்று கட்டங்கள், மூன்று சபை காலங்கள். அதே காரியம்; தண்ணீர், இரத்தம், ஆவி. எப்பொழுதுமே. நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, இந்த மூன்று பொருட்களும் உங்களை சரீரத்துக்கு கொண்டு செல்கின்றன. உங்கள் இயற்கை பிறப்பில் நிகழ்வது போலவே, அது ஆவிக்குரிய பிறப்புக்கு உதாரணமாயுள்ளது. ஒரு குழந்தை பிறக்கும் போது, முதலில் வருவது தண்ணீர், பிறகு இரத்தம், பிறகு ஜீவன். அந்த வழியில்தான் நீங்கள் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியும். அதே வழி. பாருங்கள்? சபையும் அதே வழியில் தான் வரவேண்டும். அதே காரியம். இந்த மூன்று காரியங்களை கவனியுங்கள். தேவன் தமது சரீரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். 73நீங்கள் தெரிந்துக்கொள்ள உங்களுக்குரிமையுண்டு என்று இங்கு நாம் காண்கிறோம். நீங்கள் மணம் புரிந்துக்கொள்ள விரும்பும் பெண்ணை நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள். அவள் உங்களை ஏற்றுக்கொள்கிறாள். வேறொரு காரியம். நீங்கள் வாழ வேண்டும், வாழ வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஜீவன், மரணம் இவைகளில் ஒன்றை தெரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் வாழ முடியும். அந்த வாலிபனுக்கும் தெரிந்துக்கொள்ளும் உரிமை இருந்தது. அவன் எல்லாவற்றிலும் வெற்றி கண்டவன், பக்தியுள்ளவன். அவன் அறிந்திருந்தான். அவன் தன்னைக் குறித்து, “இந்த கற்பனைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்'' என்றான். ஆயினும் அவனுக்கு நித்திய ஜீவன் இல்லை என்பதை அறிந்திருந்தான். பாருங்கள்? அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது புறக்கணிக்கவோ அவனுக்கு உரிமையிருந்தது. அவன் அதை புறக்கணித்தான். அதுதான் அவன் செய்த மரணத்துக்கேற்ற தவறு. மற்ற தவறுகள் ஒன்றுமில்லை. இதை நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால், மற்ற தவறுகள் கணக்கேயில்லை. 74அவனுடைய தெரிந்து கொள்ளுதலை நாம் தொடர்ந்து கவனித்து, அது அவனை எங்கு வழி நடத்தினதென்று பார்ப்போம். அவன் எதை தெரிந்து கொண்டானென்று பார்ப்போம். அவன் எதை தெரிந்து கொண்டானென்று பாருங்கள். கவனியுங்கள், அவன் ஐசுவரியவான், வர்த்தகன், அரசாளுபவன், பக்தியுள்ளவன், அவையெல்லாம் அவன்! இன்றைக்கு நாம், “ஓ, அவன் ஒரு உண்மையானவன், நல்லவன், அருமையானவன்'' என்போம். அவனைக் குறித்து தீதாக எதையுமே கூற முடியாது. சிநேகமுள்ளவன், நல்லவன், சமுகத்தில் நன்கு பழகுபவன், எல்லாமே, அவனிடம் கெட்ட நடத்தை எதுவுமே இல்லை, அவன் ஒருக்கால் புகை பிடிக்காதவன், மது அருந்தாதவன், நடனமாடுவதற்கு செல்லாதவன். இன்றைய கிறிஸ்தவனிடம் நாம் எதிர்பார்க்கும் உயரிய பண்புகள் அனைத்துமே அவனிடம் காணப்பட்டது. ஆனால், அது நித்திய ஜீவன் அல்ல. நாம் பேசிக் கொண்டிருப்பது அப்பண்புகளைக் குறித்தல்ல. அவன் அங்கத்தினனாயிருந்த சபைக்கு அவன் விசுவாசமுள்ளவனாய் இருந்திருப்பான். ஆனால், பாருங்கள், அது அவனை எங்கு வழி நடத்தினதென்று புகழுக்கு, அவன் போதகனாயிருந்தான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு சிறந்த சபை கிடைத்திருக்கும். அவன் மாகாண போதகராகவோ, அல்லது பேராயராகவோ ஆகியிருக்கக்கூடும். பாருங்கள்? அது உங்களை புகழுக்கு வழி நடத்துகின்றது. அது அவனை ஐசுவரியத்துக்கும் கீர்த்திக்கும் வழிநடத்தினது. 75இன்றைக்கு அது அதைத்தான் செய்யும், உங்களுக்கு நன்றாக பாடும் திறன் இருக்குமானால். சற்று முன்பு அந்த பாடலைப் பாடிய அந்த வாலிபனைக் குறித்து சிந்தித்தேன். அவனுடைய தாலந்தை அவன் பிசாசுக்கு கொடுத்திருந்தான், அதை திரும்பவும் பெற்று கொண்டான். அவனுக்கும், எல்விஸ் பிரஸ்லிக்கும் இன்னும் மற்றவர்களுக்கும் பாட்பூன், எர்னி ஃபோர்ட் போன்ற சிறந்த பாடகர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! இவர்கள் தேவனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தாலந்தை பிசாசின் கிரியைகளை ஊக்குவிக்க பயன்படுத்தகின்றனர். அது உண்மை. சிறந்த பாடகர்கள் தேவனால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தாலந்தை உலகப் புகழுக்காக விற்றுப்போட்டு பிரபலமடைகிறார்கள். நீங்கள் தேவனுடைய குமாரனாக ஆகாமல், அதற்கு பதிலாக உலகில் பிரபலம் வாய்ந்த ஒருவராக எப்படி ஆகலாம்? உங்களுக்கு பட்டினம் முழுவதுமே, அல்லது உலகம் முழுவதுமே சொந்தமாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் நித்திய ஜீவனின் வழி நடத்துதலை பரிசுத்த ஆவியின் (கிறிஸ்துவின்) மூலமாய் ஏற்றுக்கொள்ளாமற் போனால், நீங்கள் எப்படி... நீங்கள் யார் என்று கேட்கிறேன். நீங்கள் மரித்த மானிடர், பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்தவர்கள். உங்களால் இயன்றவரை நீங்கள் பக்தியுள்ளவர்களாகவும், நீங்கள் போதகராயிருந்தால் உங்கள் சபைக்கு விசுவாசமுள்ளவர்களாயும் இருக்கலாம். ஆனால், நித்திய ஜீவனை நீங்கள் புறக்கணித்தால், நீங்கள் மரித்துவிடுவீர்கள். 76இந்த வாலிபன் பெரிய வெற்றி கண்டவன். இந்த வாழ்க்கையில் அவன் பெரிய வெற்றி அடைந்திருந்தான். நிச்சயமாக. அவனைப் பின்தொடர்ந்து நாம் வேதத்தின் வாயிலாக பார்ப்போமானால், அவன் ஐசுவரியவானாகி, பெரிய இடங்களை சொந்தமாக்கிக் கொண்டான். நீதிபதிக்கும், நகரத் தலைவருக்கும், மற்ற பிரமுகர்களுக்கும் அவன் விருந்து பண்ணி, அவர்களை உபசரித்தான். அவன் உச்சநிலையையடைந்தான். அவன் பெரிய விருந்துகளை ஒழுங்கு செய்தான். அங்கு உணவு பரிமாற அநேக பெண்கள் அவனைச் சுற்றிலும் இருந்தனர். அப்பொழுது வாசலில் லாசரு என்னும் பெயர் கொண்ட தரித்திரன் ஒருவன் இருந்தான். இவன் துணிக்கைகளை அடித்துக் கூட்டி லாசருவுக்குக் கொடுப்பான். அந்த வரலாறு நமக்குத் தெரியும். இன்றை சபைகளைப் போலவே அவன் வெற்றி கண்டு கொண்டேயிருந்தான். இங்கு அமர்ந்துள்ள ஒரு வர்த்தகர் என்னிடம், ''இதே கலிபோர்னியாவில், தொழிலாளர் சங்கம் என்ன செய்ய வேண்டுமென்று சபை கட்டளையிடும் நிலைமை வந்துள்ளது'' என்றார். பாருங்கள், மறுபடியும் சபையும் அரசாங்கமும் ஒன்றாக இணைகின்றன. அது இப்பொழுது உங்கள் மேல் உள்ளது. நீங்கள் அதன் மத்தியில் இருக்கின்றீர்கள். உங்களை அறியாமலே நீங்கள் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்கின்றீர்கள். 77“சர்ப்பத்தின் அடிச்சுவடு'' (The Trial of the Serpent) என்னும் செய்தியை நான் வீடு திரும்பும்போது ஒலிப்பதிவு செய்ய எத்தனித்துள்ளேன். அந்த ஒலி நாடாவை நீங்கள் வாங்கிக் கேட்பீர்களானால், அது எங்குள்ளதென்றும், அது எங்கு முடிவடைகிறது என்றும் நீங்கள் அறியலாம். கர்த்தருக்கு சித்தமானால், அதை பிரசங்கிக்க நான் விரும்புகிறேன். அது நான்கு மணி நேரம் பிடிக்கும். எனவே இப்படிப்பட்ட கூட்டங்களில் ஒன்றில் அதை நான் பிரசங்கிக்க முடியாது. அதற்காக நான், என்னுடன் இவ்வளவு காலம் பொறுமையாக துன்பம் அனுபவிக்கும் அந்த சபைக்குச் செல்ல வேண்டும். கவனியுங்கள், இப்பொழுது... நீங்கள் எப்பொழுதாவது அந்த ஒலி நாடாவை உங்கள் வீட்டில் கேட்கலாம். 78இதை கவனியுங்கள், அவன் பெருத்த வெற்றியடைந்தான் என்று நாம் காண்கிறோம். அவன் வெற்றி மேல் வெற்றியடைந்து, முடிவில் ''எனக்கு இவ்வளவு இருக்கிறது'' என்றான். அவன் அந்நாளில் உண்மையான வாலிபனாகத் திகழ்ந்தான். இல்லையா? ''என் களஞ்சியங்கள் நிறைந்து வெடிக்கின்றன. எனக்கு இவ்வளவு சேர்ந்துவிட்டது. ''ஓ, ஆத்துமாவே, இளைப்பாறு, என்பேன்“ என்றான். ஆனால், அவன் தொடக்கத்தில் என்ன செய்தான்? இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலைப் புறக்கணித்தான். அவனுடைய சபை, அவனுடைய அறிவு, அவனுடைய கல்வி இவையனைத்துமே அவனை வெற்றிக்கு வழி நடத்தியது. யூதர்கள் அனைவரும் அவனை நேசித்தனர். அவன் அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தான், அவர்களுக்குதவி செய்தான். அவன் இதை, அதை மற்றதை செய்திருக்கலாம். ஆனால் பாருங்கள், அவன் நித்திய ஜீவனாகிய இயேசு கிறிஸ்துவின் வழி நடத்துதலைப் புறக்கணித்தான். வேதம் இவ்வாறு கூறுகிறது: ''தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும்'' என்றார். (லூக்.12:20) பிறகு அவனை நாம் நரகத்தில் காண்கிறோம் (அடுத்த இடம்). அவன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, அவன் தெருவில் விரட்டியடித்த தரித்திரனாகிய லாசருவை ஆபிரகாமின் மடியில் காண்கிறான். அது எத்தகைய மரணத்துக்கேதுவான தவறு! சபைகள், தாங்கள் போகும் வழியில் சரியாகப் போய்க் கொண்டிருந்தன. ஆயினும் அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கவில்லை. 79சில நாட்களுக்கு முன்பு இங்கு நான் செய்த ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனின் வடிக்கட்டி (A Thinking Man's Filter) என்னும் பிரசங்கத்தை அது நினைவூட்டுகிறது. ஒருக்கால் உங்களிடம் அந்த ஒலிநாடா இருக்கலாம். நான் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இந்த இலையுதிர் காலத்தின் போது நான் அந்த அணில் வேட்டைக்கு சென்றிருந்தேன். நான் கீழே பார்த்தேன். அந்த சிகரெட்டு கம்பெனியின் பெயரை நான் சொல்லக் கூடாது. உங்களுக்கு அது தெரியும். அங்கு ஒரு சிகரெட்டு பாக்கெட் கிடந்தது. அதை கடந்து சென்று, காட்டில் அணிலுக்காக தேடிக் கொண்டிருந்தேன். நான் திரும்பி அதைப் பார்த்தேன். அதில் ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, புகைப்பவனின் ருசி“ என்று எழுதப்பட்டிருந்தது. நான் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், “திரும்பிச் சென்று அதை கையிலெடு'' என்றார். நான் போய் அதை கையிலெடுத்தேன். ''ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, புகைப்பவனின் ருசி,'' ''அமெரிக்க நிர்வாகம் ஒன்று, தங்கள் சொந்த அமெரிக்க குடிமக்களுக்கு மரணத்தை மறைத்து விற்கிறது'' என்று எண்ணினேன். ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியா? நீங்கள்... புகைப்பவனின் ருசியா? 80நான் உலக சந்தைக்கு சென்றிருந்த போது, யூல் பிரன்னர் (அவர் புகழ்பெற்ற ஒரு ஹாலிவுட் நடிகர் - தமிழாக்கியோன்) அங்கு எல்லா பரிசோதனைகளையும் செய்து காண்பித்தார். அவர் சிகரெட் புகையை சலவைக் கல் ஒன்றின் மேல் ஊதி, அதில் படிந்த நிக்கோடினை துடைத்து ஒரு வெள்ளை எலியின் முதுகில் தடவினார். ஏழு நாட்களில் அது முழுவதும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு, அதனால் நடக்கவும் முடியவில்லை. அவர்கள், “வடிகட்டி என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அதெல்லாம் தந்திரம். அதனால் அவர்களுக்கு சிகரெட்டுகள் கூடுதலாக விற்பனையாகின்றது'' என்றனர். பிசாசை திருப்திபடுத்துவதற்கு அதிக நிக்கோடின் தேவைப்படுகிறது. அது உண்மை. நீங்கள் வடிகட்டி பொருத்தின சிகரெட்டை புகைக்கும் போது, ஒரு சாதாரண சிகரெட்டுக்குப் பதிலாக நீங்கள் நான்கு வடிகட்டி சிகரெட்டுகளைப் புகைக்கிறீர்கள். அதிக சிகரெட்டுகளை உங்களுக்கு விற்க கையாளப்படும் தந்திரம் இது. புகையின் காரணமாக தார் (tor) உண்டாகிறது. இந்த தார்தான் புற்று நோய் உண்டாகக் காரணமாயுள்ளது. அது எப்படி பாருங்கள். இந்த குருட்டு அமெரிக்கர்கள், ஒரு தொப்பியிலிருந்து முயல் வெளிவரும் என்று எதிர்பார்த்து, இந்த வலையில் விழுந்து போகின்றனர். நீங்கள் சிகரெட்டு புகைக்கக் கூடாது; அது மரணம். நீங்கள் எந்த பக்கம் சென்றாலும், அது மரணமே. ”ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி....,'' ஆழ்ந்து சிந்திக்கும் மனிதன் முதலாவதாக சிகரெட்டு புகைக்கவே மாட்டான், அவனுக்கு சிந்தனை என்று ஒன்று இருக்குமானால். 81அதை சபைகளுடன் ஒப்பிடலாம் என்று எண்ணினேன். பாருங்கள்? தேவனுக்கு ஒரு வடிகட்டி உள்ளதா? ஆம். ஒவ்வொரு சபைக்கும் ஒரு வடிகட்டி உள்ளது. அது உண்மை, உள்ளே வருபவைகளை அவர்கள் வடிகட்டி, அதிக மரணத்தை உள்ளே அனுமதித்து விடுகின்றனர். தேவனுடைய வடிகட்டியின் வழியாக நீங்கள் எவ்வாறு ஒரு ஸ்தாபனத்தை உள்ளே செலுத்த முடியும்? நீங்கள் எப்படி செய்ய முடியும்? தலை மயிர் கத்தரித்துள்ள ஒரு பெண்ணை நீங்கள் எவ்வாறு அந்த வடிகட்டியின் வழியாக செலுத்தக்கூடும்? எனக்கு சொல்லுங்கள். “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது அருவருப்பான செயல்'' என்று வேதம் கூறியிருக்க (உபா.22:5), ஆணின் உடையை அணிந்துள்ள ஒருத்தியை நீங்கள் எவ்வாறு அதன் வழியாக செலுத்த முடியும்? பாருங்கள். தேவனுடைய வடிகட்டி அதை வடிகட்டிவிடும். அவளை அதன் வழியாக உள்ளே வர அனுமதிக்காது. (ஆனால் சபைகளுக்கோ தங்கள் சொந்த வடிகட்டிகள் உண்டு). எனவே, ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனுக்கு ஒரு வடிகட்டி உண்டு என்று நான் கூறுகிறேன். அது தான் தேவனுடைய வார்த்தை. அது பரிசுத்த மனிதனின் ருசிக்கு ஒத்துப்போகின்றது. அது உண்மை. பரிசுத்த மனிதன், ஸ்தாபன மனிதன் அல்ல. பரிசுத்த மனிதனின் ருசி. ஏனெனில் அது சுத்தமும், பரிசுத்தமும், கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையாயுள்ளது! ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி ஒன்று உண்டு. ஸ்தாபன சபையின் அங்கத்தினனே, அதை உபயோகிக்கும்படி உனக்கு ஆலோசனை கூறுகிறேன். அது உலகத்தை உள்ளே செலுத்துமானால், அதன் ஒரு சிறு துண்டு கூட மரணமாயிருக்கும். சிறு புளித்த மா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்கும். ''எவனாகிலும் இதிலிருந்து ஒரு வார்த்தை எடுத்துப்போட்டால் அல்லது இதனுடன் ஒரு வார்த்தை கூட்டினால், அவனுடைய பங்கு ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும்.'' 82ஏதேன் தோட்டத்தில் மரணத்துக்கு காரணமாயிருந்தது எது? துயரத்துக்கும் மனவேதனைக்கும், ஒவ்வொரு குழந்தையின் மரணத்துக்கும், தொண்டை வேதனைக்கும், நோயாளி வாகனங்கள் இரைந்து செல்வதற்கும், மருத்துவமனைகளுக்கும், கல்லறைகளுக்கும் காரணம் என்ன? ஏனெனில் ஏவாள் ஒரே வார்த்தையை மாத்திரம் சந்தேகித்தாள். (எல்லாவற்றையும் அல்ல, அது தாறுமாறாக்கினது. மனிதன் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் கைக்கொள்ள வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். அதுதான் வேதத்தின் தொடக்கம். வேதத்தின் நடுபாகத்தில் இயேசு, ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' என்றார் (மத்;4:4). அதன் ஒரு பாகம் மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையும். வேதத்தின் முடிவில், வெளிப்படுத்தல், 22ம் அதிகாரத்தில் இயேசுவே தமது சாட்சியைக் கூறுகின்றார். வேதத்தின் வெளிப்பாடே இயேசு கிறிஸ்துவாகும். அவர், “எவனாகிலும் இதிலிருந்து ஒரு வார்த்தை எடுத்துப் போட்டால், அல்லது இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும்'' என்றார். உங்களை அந்த ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியின் வழியாக செலுத்திக் கொள்வீர்களானால், நீங்கள் அதினின்று வெளியே வரும்போது பரிசுத்த மனிதனின் ருசியை உடையவர்களாயிருப்பீர்கள், உண்மை. உங்களுக்கு பரிசுத்தவானின் ருசி இருக்கும். 83இப்படிப்பட்ட உடைகளை உடுக்கும் சகோதரியே, சிந்தித்துப் பார். நீ, “என் கணவனுக்கு நான் பண்புள்ளவளாக இருக்கிறேன். ''என் பையன் நண்பனுக்கு (boy friend) நான் பண்புள்ளவளாக இருக்கிறேன்.'' ''நான் பண்புள்ளவள்'' எனலாம். ஆனால் உன்னைப் பார்த்த பாவியைக் குறித்தென்ன? அவன் விபச்சாரக் குற்றத்துக்காக பதில் கூறும்போது, யார் அதற்கு காரணம்? பார், நீ குற்றவாளியாயிருப்பாய், அது வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே அது... பார்? ஓ, ஆழ்ந்து சிந்திக்கும் பெண்ணாயிரு. நீ, ''ஒருக்கால் அது...'' எனலாம். சரி அது அவ்விதமாகவே இருக்குமானால் என்னவாகும்? அவர் அப்படி கூறியிருக்கிறார். ஒரு வார்த்தையும் கூட தவறி போகாது. பார்? 84சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய மனிதன் அவருடைய அறைக்கு என்னை அழைத்துச் சென்று என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே, உங்கள் மேல் கைகளை வைத்து ஜெபிக்கப் போகின்றேன். இப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் பிரசங்கித்து, உங்கள் ஊழியத்தை பாழாக்கிக் கொள்கிறீர்கள்'' என்றார். நான், ''தேவனுடைய வார்த்தை பாழாக்கும் எந்த ஊழியமும் பாழாக்கப்பட வேண்டியதுதான்'' என்றேன். அவர், ''உங்கள் மேல் கைகளை வைக்க போகிறேன். வியாதி யஸ்தர்களுக்கு ஜெபிக்கவே நீர் அனுப்பப்பட்டீர்'' என்றார். நான், ''சகோதரனே, இவைகளை நீங்கள் நம்புகின்றீர்களா?'' என்றேன். அவர், ''இல்லை, ஆனால் அது நம்முடைய வேலையல்ல,'' என்றார். “அப்படியானால் அது யாருடைய வேலை?'' என்று கேட்டேன் பாருங்கள். ''அது போதகரின் வேலை'' என்றார். நான், ''சபையோர் இன்றுள்ள நிலையைப் பாருங்கள். அதைப் பாருங்கள்'' என்றேன். பார்த்தீர்களா? ஒவ்வொரு ஆண்டும் இவைகளை நான் பிரசங்கித்துக் கொண்டே சென்று, ''நிச்சயமாக அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்'' என்று நினைப்பதுண்டு. ஆனால், அடுத்த ஆண்டு நான் வரும்போது, அது முன்னைக் காட்டிலும் அதிகமாயுள்ளது, ''அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்'' (மத்;22:14) என்பதை அது காண்பிக்கிறது. 85பரிசுத்த ஆவியானவரே நம்மை வழிநடத்துகிறவர். நண்பர். பரிசுத்த ஆவியானவர் வரும்போது உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். அதை சற்று யோசித்து பாருங்கள். ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியாகிய வேதாகமத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; உங்கள் கோட்பாடுகளை அல்ல, உங்கள் சபையையல்ல. நீங்கள் இழக்கப்படுவீர்கள். ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அங்குதான் அந்த வாலிபன் சிந்திக்காமல் விட்டுவிட்டான். அவன் சபையின் வடிக்கட்டியை எடுத்துக் கொண்டான். அவன் பிரபலமடைந்தான், பெரியவனானான். ஆனால், பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிற போது, தன் கண்களை ஏறெடுத்தான்.'' (லூக்.16:23) நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியை, வார்த்தையாகிய இயேசுவை, எடுத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது, நீங்கள் பரிசுத்த மனிதனின் ருசியை விரும்புவீர்கள். அது உங்களை திருப்திப்படுத்தும். உங்களுக்குள் பரிசுத்த ஆவி இருக்குமானால், அது திருப்தியளிக்கும். பரிசுத்த ஆவி அங்கு இல்லாமற்போனால், நீங்கள், “ஓ, அதனால் வித்தியாசம் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை'' என்பீர்கள். அங்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பாருங்கள்! ஏவாள் செய்ததையே. அந்த இடத்திற்கு நீங்கள் சென்றுவீட்டீர்கள். 86நாம் இன்னும் தொடர்ந்து செல்வோம்... ஆழ்ந்து சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியை எடுத்துக் கொள்ளாத மனிதனை இங்கு விட்டுவிடுவோம். அவன், இயேசு கிறிஸ்துவின் வழி நடத்துதலை ஏற்றுக்கொள்ள மறுத்து, நித்திய ஜீவனை புறக்கணித்தான். இப்பொழுது வேறொரு ஐசுவரியமுள்ள வாலிப வர்த்தகனை, ஆளுபவனை எடுத்துக் கொள்வோம். அந்த மனிதனுக்கு அளிக்கப்பட்ட அதே தருணம் இவனுக்கும் அளிக்கப்பட்டது. இவன் கிறிஸ்துவின் வழிநடத்துதலை ஏற்றுக் கொண்டான். வேதத்தில் காணப்படும் இருவரைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதில் நாம் பார்த்த ஒருவன் அதைப் புறக்கணித்தான். இந்த மனிதனை நாம் எடுத்துக் கொள்வோம். இவன் மற்றொரு ஐசுவரியமுள்ள, வாலிப வர்த்தகன், ஆளுபவன். இவன் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டான். 87வேதம் இந்த மனிதனைக் குறித்து எபிரேயர் (11:23-29ல்) கூறுகின்றது. நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் விசுவாசத்தினாலே மோசே... பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து... தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொண்டு.... எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிகபாக்கியமென்று எண்ணினான். எபி;11:24-26 பாருங்கள், அவன் நித்திய ஜீவனை ஏற்றுக் கொண்டான். மோசே உலகிலுள்ள அனைத்து பொக்கிஷங்களிலும், கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். மோசே அதை மிகப்பெரிதாக மதிப்பிட்டான். ஆனால், மற்ற ஐசுவரியவானோ அவ்வாறு செய்யவில்லை. 88மோசே ஐசுவரியமுள்ள வாலிப ராஜகுமாரன். அவன் அடுத்த பார்வோனாக வேண்டியவன். அவன் பார்வோனின் குமாரன், அடுத்தபடியாக சிங்காசனத்துக்கு வாரிசு. அவன் கூடாத ஒன்றை நோக்கிப் பார்த்தான். மண் பிசைகிறவர்களையும், அடிமை கூட்டத்தினரையும். ஆனால், விசுவாசத்தினால் அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தை தேவனுடைய வார்த்தையின் மூலம் கண்டான். அதாவது, அவனுடைய ஜனங்கள் அந்நிய தேசத்திலே நானூறு வருடங்கள் சஞ்சரிப்பார்கள் என்றும், பிறகு பலத்த கரத்தினால் அவர்கள் வெளியே கொண்டு வரப்படுவார்கள் என்றும், இதை அவன் எகிப்திலுள்ள பொக்கிஷங்களைக் காட்டிலும் மிகப்பெரிய ஐசுவரியமாக மதித்தான். (அல்லேலூயா!) அவன் எகிப்தை புறக்கணித்து, அவன் எங்கே செல்கிறான் என்பதை அறியாமலிருந்தான். அவன் கிறிஸ்துவினால் வழி நடத்தப்பட்டான். மற்றவன் புறக்கணித்தான். சிங்காசனத்தின் மேல் அவனுடைய பாதம் இருந்தது. அவன் எகிப்தின் அடுத்த பார்வோனாக ஆகியிருக்கலாம். ஆனால், அவன் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை மதித்தான். நிந்தை! ''வினோதமானவன்'' என்றும் மூடபக்தி வைராக்கியம் கொண்டவன்'' என்றும் அழைக்கப்பட்டு, மண் பிசைகிறவர்களுடன் சேர்ந்து கொண்டான். ஏனெனில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த வேதவாக்கியம் நிறைவேற வேண்டிய நேரம் அதுவே, என்பதை அவன் கண்டு கொண்டான். ஓ, சபையே, விழித்தெழு! அதே காரியத்தை உன்னால் இன்றிரவு காணமுடியவில்லையா? வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள அந்த நேரம் நம்மிடையேயுள்ளது. மற்ற ஐக்கியம் அனைத்தை காட்டிலும் இயேசு கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணுங்கள் - அது தந்தையோ, தாயோ, சபையோ யாராயிருந்தாலும். ஆவியின் வழி நடத்துதலை பின்பற்றுங்கள். 89இந்த கிறிஸ்துவை... இந்த மோசேயை சற்று நேரம் நாம் தொடர்ந்து பார்ப்போம். மற்றவனைக் குறித்து நான் அவ்வாறு செய்தேன். இவனுடைய வாழ்க்கையை நாம் கவனிப்போம். முதலாவதாக, அவன் தன் கல்வி, ஞானம் அனைத்தும் புறக்கணித்து, கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை ஏற்றுக்கொள்ள சம்மதித்தான்... அவன் எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களையும் கற்றான். அவனுடைய புகழ், அவனுடைய சிங்காசனம், அவனுடைய செங்கோல், அவனுடைய ராஜரீகம், அவனுடைய கிரீடம் அனைத்தையும் அவன் உதறித்தள்ளினான். ஆனால், மற்ற வாலிபனோ அதை பெறவிரும்பி, கிறிஸ்துவை ஏற்க மறுத்தான். இவனோ இதை ஏற்க மறுத்து, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டான். என்ன நேர்ந்தது? அவன் தன்னை பிரித்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. அல்லேலூயா! அந்த சொல், ''நமது தேவனைத் துதியுங்கள்“ என்று பொருள்படும். அதை மறந்து விட்டோம். அது நல்லதல்ல. 90மோசே சிங்காசனத்தையும் புகழையும் புறக்கணித்தான். அவன் விரும்பியிருந்தால், நூற்றுக்கணக்கான வாலிபப்பெண்களை தன் மனைவிகளாக்கிக் கொண்டிருக்கலாம். அவன் செங்கோலைக் கையில் பிடித்து எகிப்தின் அரசனாக உலகத்தை ஆண்டிருக்கலாம். உலகம் அவனுடைய காலடியில் இருந்தது. அவன் அவை அனைத்திற்கும் வாரிசாக இருந்தான். ஆனால், வேத வசனங்களை அவன் ஆராய்ந்து பார்த்து, அவன் வாழ்ந்து கொண்டிருந்த நாளை கண்டு கொண்டான். அப்பொழுது அவனுக்குள் இருந்த ஒன்று - அந்த தேவனுடைய முன் குறிக்கப்பட்ட வித்து - கிரியை செய்ய தொடங்கினது. நீங்கள் எவ்வளவு புகழ்பெற்றவராக இருந்தாலும், நீங்கள் எவ்வளவு இதுவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் போதகராக இருக்கலாம், நீங்கள் இது, அது, மற்றதாக இருக்கலாம். ஆனால், தேவனுடைய வார்த்தையின் மூலமாக நித்திய ஜீவனுக்கு நீங்கள் முன் குறிக்கப்பட்டு அது உங்களுக்குள் இருக்குமானால், இப்பொழுது நடந்து கொண்டிருப்பவைகளை நீங்கள் காண்பீர்கள். அது நகர்ந்து சென்று கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. வெளியே வரத் தொடங்குங்கள்! அதை பெற்றுக்கொள்ள தொடங்குங்கள். அவன் பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்தான். ஏனெனில், எகிப்திலுள்ள அல்லது உலகிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தைக் காட்டிலும், கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அவன் பெரிய பொக்கிஷமாக மதித்தான். அவன் அப்படி மதித்தான். அவன் என்ன செய்தானென்று கவனியுங்கள். அவன் அதை பின் தொடர்ந்தான். உடனே அவன், முன்பு தன்னை நேசித்திருந்த ஜனங்களால் தள்ளப்பட்டான். 91உங்களுக்குள்ள எல்லாவற்றையும் நீங்கள் விடவேண்டியதாயிருக்கும். உங்கள் நண்பர்களை, தைக்கும் விருந்துகளை, பாடல் குழுவில் நீங்கள் வகிக்கும் ஸ்தானத்தை நீங்கள் விட வேண்டியதாயிருக்கலாம். அப்படி இருக்கலாம். நீங்கள் எவைகளையெல்லாம் விட வேண்டுமென்று எனக்கு தெரியாது. ஆனால் உலகப் பிரகாரமான, உலகத்துடன் சம்பந்தம் கொண்டுள்ள எல்லாவற்றையும் நீங்கள் விட வேண்டியதாயிருக்கும். உலகப் பிரகாரமான அனைத்தினின்றும் உங்களை நீங்கள் பிரித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அதை செய்ய வேண்டும். மோசே எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு, கையில் ஒரு கோலுடன் வனாந்தரத்துக்கு சென்றான், ஆமென். நாட்கள் கடந்து சென்றன. அவன் தவறு செய்து விட்டான் என்று எண்ணியிருப்பானா? இல்லை. அநேக சமயங்களில் ஜனங்கள் புறப்பட்டு, ''ஓ, நான் இதை செய்வேன், தேவனுக்கு மகிமை. அதை நான் காண்கிறேன்'' என்று கூறுகின்றனர். ஆனால், யாராகிலும் உங்களைப் பார்த்து சிரித்து கேலி செய்தால், ''நான் தவறு செய்து விட்டேன் என்று நினைக்கிறேன்'' என்று எண்ணி விடுகிறீர்கள். ''சிட்சையை சகிக்காதவர்கள் வேசியின் பிள்ளைகள், அவர்கள் தேவனுடைய புத்திரர் அல்ல'' என்று அவர் கூறியுள்ளார் (எபி; 12:8) பாருங்கள், அவர்கள் உணர்ச்சியை தங்களுக்குள் உண்டாக்கிக் கொள்கின்றனர். சிறிது முன்பு நான் பேசின வித்து; தொடக்கத்திலேயே ஆத்துமா அங்கில்லை. அவன், ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு எல்லாவிதமாக காரியங்களையும் செய்கின்றான். ஓ, நீங்களும் அவர்களும்... உங்களை ஆவி அபிஷேகம் பண்ணும் போது, நீங்கள் இவைகளை செய்ய முடியும். அது உண்மையான பரிசுத்த ஆவிதான். ஆயினும் நீங்கள் பிசாசாக இருக்க முடியும். 92நீங்கள், “ஓ, என்ன சகோ. பிரான்ஹாமே'' எனலாம். கள்ளத் தீர்க்கதரிசிகள்! கடைசி நாட்களில் கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள் என்று வேதம் உரைக்கிறது. கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்புவார்களென்று இயேசு கூறியுள்ளார். ''கள்ள இயேசுகள்'' அல்ல, அதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; ஆனால், “கள்ளக் கிறிஸ்துக்கள். ''கிறிஸ்து'' என்றால் ''அபிஷேகம் பண்ணப்பட்டவன்'' என்று பொருள். தவறாக அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், ஆனால் உள்ளிலே தவறானவர்கள். அவர்கள் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள், அந்நியபாஷைகள் பேசுவார்கள், ஆவியில் நடனமாடுவார்கள். சுவி சேஷத்தைப் பிரசங்கிப்பார்கள். யூதாஸ்காரியோத்து அப்படி செய்தான். சிமியோன்... இல்லை, மன்னிக்கவும். காய்பா தீர்க்கதரிசனம் உரைத்தான்!மாய்மாலக்காரனாகிய பிலேயாம்! நிச்சயமாக. எல்லா அடையாளங்களையும் அவன் செய்தான். மத சம்பந்தமான எல்லா ஒழுங்குகளையும் அனுசரித்தான். 93ஆனால் பாருங்கள், நீங்கள் நிலத்தில் களை விதையும், கோதுமை மணி விதையும் விதைத்து அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகியுங்கள். இவையிரண்டுமே களிகூரும். இரண்டுமே அதே தண்ணீரை உட்கொண்டு வளரும். “சூரியன் நல்லோர் மேலும் தீயோர் மேலும் பிரகாசிக்கிறது. மழை நல்லோர் மேலும் தீயோர் மேலும் பெய்கிறது. ஆனால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். ''நீங்கள் வார்த்தையுடன் உங்களை வரிசைப்படுத்திக் கொள்ளாமல் எப்படி முடியும்? ஆமென்! நான் கூறுகிறது புரிகின்றதா? ''தண்ணீர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் விழுகிறது. அவர்களை அபிஷேகிக்கிறது. இயேசு, “அந்நாளில் அவர்கள் என்னிடம் வந்து, ''கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே பெரிய காரியங்களைச் செய்தோம் அல்லவா?'' என்பார்கள் என்றார். (மத்.7:22). அவர், ''அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள், நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. பிசாசுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நரகத்துக்குள் செல்லுங்கள்'' என்பார். பார்த்தீர்களா? என்ன ஒரு வார்த்தை! தவறானவர்கள். வீணாக ஆராதனை செய்கிறார்கள், வீணாக பாடுபடுகிறார்கள். நீங்கள், அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருக்கும் போது, ஏன் அதை செய்கிறீர்கள்? பரலோகம் உத்தமமானதால் நிறைந்திருக்கும் போது, அதற்கு பதிலாக நீங்கள் ஏன் வேறொன்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்? பாருங்கள்? நீங்கள் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. 94மோசே அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான் என்று நாம் பார்க்கிறோம். எதுவுமே அவன் மனதை மாற்றமுடியவில்லை. அவனுடைய சொந்த சகோதரர்கள் அவனைப் புறக்கணித்தனர். ஆனால், அது அவனை தடுத்து நிறுத்த முடியவில்லை. அவன் வனாந்தரத்துக்கு சென்றான். அங்கு ஒரு நாள் அவன் தேவனை முகமுகமாய் சந்தித்தான். அக்கினி ஸ்தம்பம் ஒரு முட்செடியில் தொங்கினது. அவர், “உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி. என் ஜனத்தின் கூக்குரலைக் கேட்டேன். அவர்கள் படுகிற வேதனையைக் கண்டேன். நான் வாக்குத்தத்தம் பண்ணின வார்த்தையை நினைவு கூர்ந்து, நான் இறங்கினேன். அவர்களை விடுவிக்க உன்னை அங்கு அனுப்புகிறேன்'' என்றார். நிச்சயமாக. அவன் தேவனை முகமுகமாய் சந்தித்தான். அவன் அவரோடு பேசினான். அவன் தேவனிடமிருந்து கட்டளை பெற்றான். 95''தேவன் மறுபடியும் வந்து - அதே அக்கினி ஸ்தம்பம் மலையில் இறங்கி வந்து - மோசே செய்த எல்லா அற்புதங்களையும் நிரூபித்து அவன் தீர்க்கதரிசி என்பதை உறுதிப்படுத்தினார். ஓ, அவர்கள் போலியாட்களை பெற்றிருந்தனர். அங்கு யந்நேயும், யம்பிரேயும் நின்று, அவன் செய்த அதே அற்புதத்தை செய்தனர். ஆனால், யார் முதலில் செய்தது? பாருங்கள்? அது எங்கிருந்து தொடங்கினது? அது, தேவனுடைய வார்த்தையிலிருந்து வந்ததா? அதுதான் அந்த நேரமா? கடைசி நாட்களில் அதே காரியம் மறுபடியுமாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா? “யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல, துர்புத்தியுள்ள மனுஷர்களாகிய இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்பார்கள்.'' (2 தீமோ;3:8). பாருங்கள், கடைசி நாட்களில் அதே காரியத்தை செய்வார்கள் (எல்லாவற்றையும் பாவனை செய்வார்கள்), அதே இடத்தில், ”பன்றி சேற்றிலே புரளவும், நாய் தான் கக்கினதை தின்னவும் திரும்பினது போல“ (2.பேதுரு; 2:22). 96பெந்தெகொஸ்தேராகிய நீங்கள், உங்கள் தந்தைமார்களும் தாய்மார்களும் அநேக வருடங்களுக்கு முன்பு ஸ்தாபனங்களிலிருந்து வெளி வந்து அவைகளைத் திட்டினர். ஆனால், நீங்களோ திரும்பவும் அதே சேற்றிற்கும் கக்கினதற்கும் திரும்பி அவர்கள் செய்து வருபவைகளையே செய்கிறீர்கள். பாருங்கள்? ஆதி பெந்தெகொஸ்தே காலத்தில் சபை அதைக் கக்கிப் போடும்படி செய்திருந்தால், இன்றைக்கும் அவ்வாறே சபை அதை கக்கிப் போடும்படி செய்ய வேண்டும். பாருங்கள்? அது பதராயிருந்த போதிலும், அது அவ்வாறே இருக்க வேண்டும். பதர் தோன்ற வேண்டும். அது மகரந்தப் பொடியுடன் நின்றுவிட முடியாது. பதர் வந்தே ஆக வேண்டும். பாருங்கள், கோதுமை மணியைச் சுமக்கும் ஒன்று. நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மணி நேரத்துக்காக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை கவனித்து வாருங்கள். 97இதை கவனியுங்கள், மோசே உறுதிப்படுத்தப்பட்டான். பாருங்கள்! அவன் எகிப்தை விட்டு புறப்பட்டு சென்ற பிறகு, அவனுடைய சொந்த சகோதரர்களே அவனுக்கு விரோதமாக எழும்பி, ஒரு ஸ்தாபனம் உண்டாக்க நினைத்தார்கள். அவர்கள், ''நீ ஒருவன் மாத்திரம் பரிசுத்தவான் என்பதைப் போல் நடந்து கொள்கிறாயே, சபை முழுவதுமே பரிசுத்தமாயுள்ளது'' என்றனர். கோராகும், தாத்தானும் இவ்வாறு கூறினர். ''நாம் ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டு ஏதாவது செய்வோம், மோசே... அவனுக்காக நான் வருந்துகிறேன். அவன் சென்று, ''கர்த்தாவே...'' என்றான். பலிபீடத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து, ''கர்த்தாவே...'' என்றான். கர்த்தர், ''அவர்களிடமிருந்து பிரிந்து வா. எனக்கு போதுமென்று ஆகிவிட்டது'' என்றார். பூமி பிளந்து அவர்களை விழுங்கிப் போட்டது. பாருங்கள், அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த கட்டளையை அவன் அறிந்திருந்தான். 98தேவன் ஸ்தாபனங்களுடன் தொடர்பு கொள்வதில்லை. அவர் குழுக்களுடன் தொடர்பு கொள்வதில்லை. அவர் தனிப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்கிறார். அது உண்மை. எப்பொழுதுமே. குழுக்களாக அல்ல; தனிப்பட்ட நபர்கள். ஒரு ஆள். கடைசி நாட்களில், ''இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். ஒருவன்...'' என்று அவர் கூறியுள்ளார். ''ஒரு குழு'' அல்ல. ''ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவை திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன்.'' பாருங்கள்? ''ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு.'' இந்த ஒலிபெருக்கி, சத்தத்தை பெருக்குவதற்காக உண்டாக்கப்படாவிட்டால், என் சத்தத்தை எப்படி பெருக்க முடியும்? நான் என் முழு பெலத்துடன் அதற்கு முன்னால் நின்று கொண்டு சத்தமிட்டாலும் அதனால் பயனில்லை. இது ஒலிபெருக்கியாக இருக்க வேண்டுமென்று முன்குறிக்கப்பட்டு, ஒலிபெருக்கியாக உண்டாக்கப்பட்டு, சிருஷ்டிக்கப்பட்டதால், அது ஒலியைப் பெருக்குகின்றது. அவ்வாறே, தேவனுடைய வார்த்தை உங்களுக்குள் இருக்க வேண்டுமென்று தேவன் முன் குறித்திருந்தால் ''என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது. அவைகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன. அவைகள் அந்நியனுக்குப் பின்செல்வதில்லை.'' (யோவான்;10:27,5) பாருங்கள்? முதலாவதாக அது அப்படி இருக்க வேண்டும். ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.'' (யோவான்;6:37) அவர்கள் ஒவ்வொருவரும், பாருங்கள். 99அவன் தொடர்ந்து சென்று வாழ்க்கையின் முடிவை அடைகிறான்... கவனியுங்கள், அவன் வாழ்க்கை பாதையின் முடிவை அடைந்த போது. இப்பொழுது, நாம் முடிக்க வேண்டும். ஏனெனில், தாமதமாகிக் கொண்டே போகின்றது. இப்பொழுது, பத்து மணிக்கு இன்னும் இரு பத்தைந்து நிமிடங்கள் உள்ளன. கவனியுங்கள். எங்கள் சபையில் இது சீக்கிரம் என்று கருதப்படும். சுமார் இரண்டு அல்லது மூன்று மணியாகும் போது, நாங்கள் சற்று தாமதமாகிவிட்டது'' என்று கூறத் தொடங்குவோம். பாருங்கள்? பாருங்கள்? பலமுறை நான் முழுஇரவும் அங்கு பிரசங்கம் செய்திருக்கிறேன். பவுல் தன் காலத்தில் இதே சுவிசேஷத்தை பிரசங்கம் செய்தான். ஒரு வாலிபன் சுவற்றின் மேலிருந்து கீழே விழுந்து மரித்து போனான். பவுல், இதே அபிஷேகத்தையும் இதே சுவிசேஷத்தையும் கொண்டவனாய், அவனுடைய சரீரத்தை அந்த வாலிபனின் சரீரத்தின் மேல் கிடத்தினான். அப்பொழுது, அவனுக்கு உயிர் திரும்ப வந்தது. அவர்களுக்கு சிரத்தை இருந்தது. அப்பொழுது, சபை உருவாகிக் கொண்டிருந்தது. ஏதோ, ஒன்று நடந்து கொண்டிருந்தது, இங்கு என்ன நடந்ததென்று பாருங்கள். மோசே புறப்பட்டு வந்த போது... 100அந்த ஐசுவரியவான் வந்தபோது, நாம் பேசிக் கொண்டிருந்த அந்த வாலிப அரசன் - அவன் பக்தியுள்ளவன், சபையை சார்ந்தவன், எல்லாமே நன்றாயிருந்தது, படித்தவன், சிறந்த வர்த்தகன். எல்லாமே அவன் பாதையின் முடிவை அடைந்த போது, ''காலடி வைக்க வேறு இடமில்லை'' என்று கதற தொடங்கினான். அவனை வழி நடத்தியவர் எங்கே? அவன் ஸ்தாபன சபையால் வழி நடத்தப்பட்டான். அது மரித்திருந்தது. அவன் மரித்து போயிருந்த உலகத்தினால் வழி நடத்தப்பட்டான். அவனுக்கு காலடி எடுத்து வைக்க, உலகம் அவனுக்காக ஆயத்தம் பண்ணியிருந்த நரகமேயன்றி வேறு இடம் இருக்கவில்லை. ஆனால், மோசே இங்கே வருகிறான். அவன் உத்தமமுள்ள ஊழியன். அவன், எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். அவன் வயது சென்றவனாக பாதையின் முடிவை அடைந்தான். அப்பொழுது அவனுக்கு நூற்றிருபது வயது அவன் மலையின் மேலேறினான். அவனுக்கு முன்னால் மரணம் இருந்ததென்பதை அவன் அறிந்திருந்தான். அவன் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தை சுற்றிலும் பார்த்தான். அவனுடைய பக்கத்தில் அவனை வழி நடத்தின தலைவர், அந்த கன்மலை இருந்தார். அவன் அந்த கன்மலையின் மேலேறினான். தேவ தூதர்கள் அவனை தேவனுடைய மகிமைக்குள், தேவனுடைய மடியில் கொண்டு சென்றார்கள். ஏன்? எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அவன் தன் தலைவரால் வழி நடத்தப்பட்டான். 101அவனை நாம் மறுரூப மலையின் மேல் காண்கிறோம். அவன் எலியாவுடன் கூட நின்று கொண்டு, இயேசு சிலுவைக்குச் செல்வதற்கு முன்பாக அவருடன் பேசி கொண்டிருந்தான். அவனுடைய மரணத்துக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய ஊழியத்தினிமித்தம் வரும் நிந்தையை, இவ்வுலகின் புகழுக்கும், பணத்துக்கும் மேலாக அவன் எண்ணினான். அவனுடைய தலைவர் அப்பொழுதும் அவனை வழி நடத்தினார். ஓ, என்னே! அவன் வழி நடத்தப்பட்டான். அவனுடைய தலைவர் அவனை மரண நிழல்களின் வழியாக நடத்தினார். அவன் கல்லறைக்கு வழி நடத்தப்பட்டான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் மறுபடியும் அங்கு நின்றான். ஏனெனில், அவனுடைய வாலிபத்தில், அவன் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை தெரிந்து கொண்டான். எகிப்தும் அதன் பொக்கிஷங்களும் இல்லாமற்போகும் காலத்திலும், அவனுடைய பெயர் பெரிதாயிருக்கும். எகிப்தின் கூர்நுனிக் கோபுரங்கள் இடிந்து மண்ணாகிப் போய், எகிப்து இல்லாமற் போகும் காலத்திலும் மோசேயின் பெயர் மனிதர்களிடையே அழியாமல் என்றென்றும் நிற்கும். ஏனெனில் அவனுடைய சபை செல்லும் வழியை அவன் பின்பற்றாமல், கிறிஸ்துவின் வழிநடத்துதலை அவன் ஏற்றுக் கொண்டான். 102அதையே செய்த மற்றவர்களும் உள்ளனர். ஏனோக்கைப் பாருங்கள். அவன் ஐந்நூறு ஆண்டுகளாக தேவனுடன் நடந்தான். அவன் தேவனைப் பிரீதிபடுத்தினான் என்னும் சாட்சியை உடையவனாயிருந்தான். தேவன் அதை ருசுப்படுத்தி, ஏனோக்கிடம், ''நீ மரிக்க வேண்டிய அவசியமில்லை. இன்று பகல் வீட்டுக்கு வந்துவிடு'' என்றார். அவன் மேலேறிச் சென்றான். எலியா தன் நாட்களில் தலைமயிர் வெட்டியிருந்த பெண்களைக் கண்டு கூச்சலிட்டான். முகத்தில் வர்ணம் தீட்டியிருந்த யேசபெல்களைக் கண்டித்தான். அவனால் இயன்றவரை இவையனைத்தும் அவன் நிறைய செய்தான். அவன் காலத்து ஆசாரியர்கள் அவனைப் பரிகாசம் செய்தனர். ஒரு நாள் அவன் நடந்து நதியை அடைந்தான். அந்த நதிக்கு அக்கரையில் குதிரைகள் ஒரு புதரில் கட்டப்பட்டிருந்தன, அக்கினி ரதமும் அக்கினி மயமாக குதிரைகளும், அவன் அதிலேறி, அவனுக்கு அடுத்ததாக வரவேண்டிய தீர்க்கதரிசியிடம் தன் அங்கியை எறிந்து விட்டு மேலே பரலோகம் சென்றான். அவன் நித்திய ஜீவனின் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டான். ஏனெனில், எலியாவுக்குள் இருந்தது கிறிஸ்துவே, ஓ! ஆம் ஐயா! அது என்ன? ''என்னைப் பின்பற்றி வா.'' உங்கள் தலைவரை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். நண்பனே, அதை நீ தெரிந்து கொள்ள வேண்டியவனாயிருக்கிறாய். தேவனுடைய நிலைக்கண்ணாடியாகிய வேதாகமத்தில் உன்னைப் பார்த்து, இன்றிரவு நீ எந்நிலையில் உள்ளாய் என்பதை அறிந்துகொள். 103ஒரு சிறு கதையைச் சொல்ல விரும்புகிறேன். சிறுவன் ஒருவன் நகர்புறத்தில் வசித்து வந்தான். அவன் நிலைக்கண்ணாடியை பார்த்ததே கிடையாது. அவன் தன் தாயின் சகோதரியைக் காண நகரத்துக்கு வந்திருந்தான். அவளுக்கு ஒரு வீடு இருந்தது. பழைய காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில், கதவிலேயே நிலைக்கண்ணாடி இணைக்கப்பட்டிருக்கும். அது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதோ இல்லையோ என்று தெரியாது. இந்த சிறுவன் நிலைக்கண்ணாடியைக் கண்டதே கிடையாது. அவன், வீட்டைச் சுற்றிலும் விளையாடிக் கொண்டிருந்த போது, இந்த கண்ணாடியைக் காண நேர்ந்தது... ''ஹா!'' அவன் அந்த சிறுவனை கண்ணாடியில் உற்றுப் பார்த்தான். இவன் கையாட்டின போது, அவனும் கையாட்டினான். இவன் காதை பிடித்து திருகினபோது, அவனும் காதை பிடித்து திருகினான். அவன் அருகில் நடந்து சென்று, திரும்பிப் பார்த்து, ''அம்மா, அது நான்'' என்றான். அது நான். 104நீங்கள் எப்படி காணப்படுகிறீர்கள்? நீங்கள் எதை பின்பற்றுகிறீர்கள்? நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? உங்கள் தலைவரை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். இன்றே தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஜீவனையோ மரணத்தையோ தெரிந்து கொள்ளலாம். நித்தியத்தை நீங்கள் எங்கு கழிப்பீர்கள் என்பது நீங்கள் எதை தெரிந்து கொள்வீர்கள் என்பதைப் பொறுத்தது. இயேசு, ''என்னைப் பின்பற்றி வா'' என்று கூறினதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி செய்ய இன்றிரவு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. அவரை, நித்திய ஜீவனுக்கு நீங்கள் பின்பற்ற விரும்பினால், நீங்கள் அவருடைய நிபந்தனைக்கு வர வேண்டும். அது உண்மை. அதாவது வார்த்தைக்கு. ஒரு கோட்பாட்டின் மேல் அல்ல, பொது ஜனங்களின் அபிப்பிராயத்தின் மேல் அல்ல, ஆனால் தேவன் அதைக் குறித்து என்ன கூறியுள்ளார் என்பதன் மேல் நீங்கள் சார்ந்திருக்க வேண்டும். நீங்கள், ''நல்லது, சகோ. பிரான்ஹாமே, நான் ஒரு ஸ்திரீயை அறிவேன். அவள் தன்னால் இயன்றவரை நல்லவளாக இருக்கிறாள். அவள் இதையெல்லாம் செய்கிறாள். இந்த உபத்திவரங்களையெல்லாம் அனுபவித்த ஒரு மனிதனை அறிவேன்,'' எனலாம். அவர்கள் என்ன செய்கிறார்களோ, அதைக் குறித்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது. எல்லா மனிதருடைய வார்த்தையும் பொய், என்னுடைய வார்த்தையே சத்தியம்'' என்று அவர் உரைத்துள்ளார். நீங்கள் அவருடைய நிபந்தனையின் பேரில், வார்த்தைக்கு வரவேண்டும். நீங்கள் கோட்பாட்டின் மூலமாகவோ, ஸ்தாபனத்தின் மூலமாகவோ வரமுடியாது. இதை நீங்கள் கலக்க முடியாது. நீங்கள் ஒன்றை மாத்திரம் செய்ய வேண்டும். அவருடைய நிபந்தனையின் பேரில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் உங்களுக்கும் உங்கள் சிந்தனைகளுக்கும் மரித்து, அவரைப்பின்பற்ற சித்தமாயிருக்கிறீர்கள் என்று. “உலக காரியங்கள் அனைத்தும் உதறித் தள்ளிவிட்டு, என்னைப் பின்பற்றி வா.'' 105சகோதரனே, இது மிகவும் கண்டிப்பான, மனதை நோகச் செய்யும் செய்தி என்றறிவேன். இந்த ஜனங்களை பாடவும், சத்தமிடவும், கூச்சலிடவும் செய்வதற்காக ஒரு செய்தியைத் தெரிந்து கொண்டு நான் இங்கு வரவில்லை. நான் அஞ்ஞானிகளின் கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். அவர்கள் அங்கு அதையே செய்கின்றனர். நான் உங்கள் ஜீவனில் சிரத்தை கொண்டுள்ளேன். நான் தேவனுடைய ஊழியன். என்றாவது ஒரு நாள் நான் தேவனுக்கு பதில் கூற வேண்டும். கர்த்தர் எனக்கு அளித்த ஊழியம், ஆயிரக்கணக்கான சமயங்களில் தன்னை உங்களுக்கு முன் உறுதிப்படுத்தி காண்பித்துள்ளது. இயேசு, ''என்னைப் பின்பற்றிவா. என்னைப் பின்பற்றிவா, உனக்குள்ளதை விட்டுவிட்டு, என்னைப் பின்பற்றிவா'' என்று கூறினார் என்பதை நினைவு கூருங்கள். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற அந்த ஒரு வழி மாத்திரமேயுண்டு. அவர் இந்த வர்த்தகனுக்கும், அந்த வர்த்தகனுக்கும், எவருக்குமே அந்த ஒரு பரிகாரத்தை மாத்திரமே அளிக்கிறார். அவர் செய்யும் தீர்மானம் ஒவ்வொரு முறையும் பரிபூரணமாய் உள்ளது? அவரை நாம் பின்பற்ற வேண்டும். நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள, அது ஒன்று தான் வழி. எனவே தேவனுடைய வழிநடத்துதல் என்பது; பரிசுத்த ஆவியினால் உறுதிப்படுத்தப்பட்ட இந்த மணி நேரத்துக்கான வார்த்தையை பின்பற்றுவதாகும். நாம் தலை வணங்குவோம். 106உங்களை ஒரு கேள்வி கேட்கப்போகிறேன். நீங்கள் உண்மையில் உத்தமமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ''என் இரட்சகர் அழைப்பதை என்னால் கேட்க முடிகிறது'' என்னும் பாடலை சகோதரி எனக்காக பியானோவில் இசைக்க விரும்புகிறேன். பழைய காலத்து பீட அழைப்பை நான் செய்ய போகிறேன். சகோதரனே, சகோதரியே, இன்று நடந்து கொண்டிருப்பதை பாருங்கள். உங்கள் தலைகளை வணங்கி, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். சென்ற வாரம் செய்தித்தாளில், இங்கிலாந்திலுள்ள அந்த மனிதன் என்ன கூறினான் என்பதை படித்தீர்களா? ''இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் ஒரு ஏமாற்றுதல். அது பிலாத்துக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட இரகசிய ஒப்பந்தம்'' என்று. அமெரிக்க வேத பண்டிதன் என்ன கூறினான் என்று பார்த்தீர்களா? அவன், “இயேசு தூதாயீமினால் தூங்க வைக்கப்பட்டார்'' என்றான். வேத பண்டிதர்களாகிய உங்களில் அநேகருக்கு, ஆதியாகமம் தூதாயீம் கனியைக் குறித்து கூறுகிறதென்று தெரியும் (ஆதி;30:14,16). அது உங்களை மரித்தவர் போல் உறங்க வைக்கும்; இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை தான் உங்களுக்கு இருதயத் துடிப்பு உண்டாகும். ''அவருக்கு காடியில் கசப்பை கலந்து கொடுத்தார்கள்” என்று வேதம் கூறுகிறதல்லவா? அது தூதாயீம் செடி என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் அவரை கல்லறையில் வைத்த போது, மூன்று நாட்கள் நன்றாக உறங்கினாராம். அவர்கள் அங்கு சென்று போது, அவர் நடந்து கொண்டிருந்ததைக் கண்டதாக அவர்கள் கூறுகின்றனர். அதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? வேத பண்டிதர்கள், வேத பள்ளிகள், பாருங்கள், பாவனை விசுவாசிகள்... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). அவர்கள் கசப்பு கலந்த காடியை அவர் வாயருகில் கொண்டு போன போது. வேறொரு காரியம். அவர்கள் கூறுவது உண்மையாயிருக்குமானால், பின்னை ஏன், “சீஷர்கள் இரவில் அவருடைய சரீரத்தை களவாடிக் கொண்டு போய்விட்டார்கள்'' என்னும் வதந்தியை அவர்கள் பரப்ப வேண்டும்? எதற்காக கணக்கற்றவர் அவருக்காக இரத்த சாட்சிகளாக மரிக்க வேண்டும்? அவர் மரித்த விதமாக தாங்கள் மரிப்பதற்கு தகுதியற்றவரெனக் கருதி, சிலுவையில் தலைகீழாகவும் பக்கவாட்டிலும் அறையப்பட வேண்டிக் கொண்டார்கள். அவர் மாய்மாலக்காரன் என்று அவர்கள் அறிந்திருந்தால், அவருக்காக ஏன் தங்கள் ஜீவனைக் கொடுக்க வேண்டும்?அப்படியானால் அவர்களும் மாய்மாலக்காரராயிருப்பார்களே! 107ஓ, பாருங்கள், நாம் புத்தி கூர்மை அதிகமாயுள்ள நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வி, நாகரீகம், இந்நாளின் நவீன போக்கு அனைத்துமே பிசாசினால் உண்டானது. ''நாகரீகம் பிசாசினால் உண்டானதா?'' ஆம், ஐயா! வேதம் அவ்வாறு கூறுகின்றது. இந்த நாகரீகம் மரணத்தைக் கொண்டுள்ளது. “இத்தகைய நாகரீகத்தை நாம் மறுமையில் கொண்டிருப்போமா?'' இல்லை, ஐயா! நமக்கு வேறு விதமான நாகரீகம் அங்கிருக்கும். கல்வி போன்ற அனைத்துமே பிசாசினால் உண்டானது; விஞ்ஞானம் இயற்கை காரியங்களை தாறுமாறாக்கி, அவைகளை வேறொன்றாகச் செய்துவிடுகிறது. அவர்கள் விஞ்ஞானத்தினால் உங்களுக்கு என்ன செய்துள்ளனர் என்று பாருங்கள், வாலிப பெண்கள்... சென்ற மாதத்துக்கு முந்தின மாதம் வெளியான ''ரீடர்ஸ் டைஜஸ்ட்'' (Readers Digest) பத்திரிக்கை என்று நினைக்கிறேன். அது, ''வாலிபர்களும் வாலிபப் பெண்களும் நடுத்தர வயதைக் கடக்கும் போது, வாலிபப் பெண்கள் இருபது, இருபத்தைந்து வயது அடையும் போதே, அவர்களுக்கு மாதவிடாய் நின்றுவிடுகிறது'' என்று கூறுகிறது. அடுத்த சந்ததியில் அவர்கள் பயங்கர தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். பாருங்கள்? மானிடர்கள் மிருதுவாகவும், சேற்றைப் போன்றும் இருப்பார்கள். ஆவியையும், ஆத்துமாவையும் பாருங்கள், எப்படி சபையிலுள்ள ஆவி கலப்படமாகி, உலகத்தினோடு விவாகம் செய்துள்ளது என்பதை பாருங்கள். ஓ, என்ன ஒரு நேரம்! பிள்ளைகளே, ஓடிப் போங்கள்! ஓடிப் போங்கள், சிலுவையண்டை ஓடுங்கள். கிறிஸ்துவினிடம் வாருங்கள் அவர் உங்களை வழிநடத்தட்டும். 108நமது தலைகளை வணங்கி, நமது கண்களை மூடியுள்ள இந்நேரத்தில், உங்கள் இருதயத்தையும் தயவு கூர்ந்து வணங்குங்கள். அப்படி செய்வீர்களா? உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் உங்களை ஆராய்ந்து பார்த்து, தேவனை நோக்கிப் பார்க்கிறீர்களா? இந்த மணி நேரத்தில், நீங்கள் எந்த நிலையில் இருக்க வேண்டுமோ, அந்த நிலையில் இல்லை என்பதை உணருகிறீர்களா?ஏனெனில், எடுத்துக் கொள்ளப்படுதல் எந்த நேரத்திலும் நிகழலாம். பாருங்கள், அது நிச்சயம் நிகழும். சற்று முன்பு நான் கூறினது உண்மையாயிருக்குமானால், உயிரோடிருப்பவர் ஐந்நூறு பேர் மாத்திரமே மறுரூபமடைந்து எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்கள். கிறிஸ்தவ சமுதாயம் எல்லாவற்றிலுமே கத்தோலிக்கரையும் மற்றெல்லாரையும், நாம் கணக்கெடுத்தால், கிறிஸ்தவ மார்க்கத்தைப் பின்பற்றுவதாக உரிமை கோருபவரின் எண்ணிக்கை ஐம்பது கோடியாகும். பத்து லட்சத்துக்கு ஒருவர் என்னும் கணக்குப்படி, ஐந்நூறு பேர். ஒவ்வொரு நாளும் அத்தனை பேர் உலகம் முழுவதிலும் காணாமற் போகின்றனர். அவர்களை நாம் கணக்கெடுக்க முடிவதில்லை. பாருங்கள். எடுத்து கொள்ளப்படுதல் நிச்சயம் வரும், அதை நீங்கள் அறியவும் கூட மாட்டீர்கள். ஜனங்கள் வழக்கம் போல் பிரசங்கம் செய்து கொண்டிருப்பார்கள். பாருங்கள், அது ஏற்கனவே நிகழ்ந்திருக்கும். இயேசு கூறினது போல, சீஷர்கள் அவரிடம், ''எலியா முந்தி வர வேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே?'' என்று கேட்டார்கள். அவர், ''எலியா வந்தாயிற்று. அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்“ என்றார் (மத்;17:10,12). 109நீங்கள் தேவனுடன் சரியாக இல்லாமல், தேவனிடம் நினைவு கூரப்பட வேண்டுமென்றும், தேவன் உங்கள் இருதயத்தை சீர்படுத்த வேண்டுமென்றும் விரும்பினால், அமைதி நிலவும் இந்நேரத்தில் தாழ்மையோடு உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? நீங்கள் யாராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் அவ்வாறு செய்வீர்களா? நீங்கள், ''தேவனிடம் என் கரத்தை உயர்த்துகிறேன்'' என்று கூறுங்கள். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் நிலைக் கண்ணாடியில் உங்களை காண்கிறீர்களா? கிறிஸ்துவின் நாமத்தில் உங்களைக் கேட்கிறேன். நிலைக்கண்ணாடியில் உங்களைக் காண்கிறீர்களா? (ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார், வேறொரு சகோதரன் அதற்கு அர்த்தம் உரைக்கிறார் - ஆசி) ஓ, என் ஜனமே, உன்னுடைய உள்ளத்தில் நான் அசைவாடி கொண்டிருக்கும் இவ்வேளையில், நீ உன்னை நியாயந்தீர்த்துக்கொள். நீ உன்னை நியாயம் விசாரித்து பார்? தேவன் நியாயந்தீர்க்கவும் மாட்டார் உன்னை ஆக்கினைகுள்ளாக தீர்க்கமாட்டார். இதோ, உன்னதமும் பரிசுத்தமுமான அழைப்பிற்க்கு உன்னை தேவன் அழைத்திருக்கிறார். ஆம், தேவன் தாமே அன்போடும், இரக்கத்தோடும் உன்மேல் அடைகாக்கிறார். நீ உன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவாயானால், ஆம், தேவன் தாமே உன்னை சுத்திகரித்து உன்னை மன்னிப்பார். நீ, மேலே உயர பறக்கும்படி உனக்கு கழுகுகளின் இறக்கைகளை கொடுப்பார். நீ, அப்பொழுது அவருடைய வல்லமையினாலே நிரப்பப்பட்டிருப்பாய். அவர் உன்னை அவருடைய வார்தையின் தண்ணீரினாலே கழுவுவார். உன்னை புதிப்பிப்பார். உன்னுடைய இருதயத்தை மாற்றி உனக்கு நவமான இருதயத்தை தருவார். இதோ, கர்த்தருடைய நாள் மிக சமீபபாய் இருக்கிறது. என்னுடைய பிரசங்கியாகிய நோவாவிற்கு முழு உலகமும் கவனம் செலுத்தாமல் கொஞ்சமும் அக்கறைகாட்டாமல் மெத்தனமாக, ''தேவன் சொல்ல கூடாததை சொல்லிவிட்டார், அவரால் அதை செய்யமுடியாது'' என தினமும் தேவனுக்கு அவமரியாதை செலுத்தி பரிசுத்த ஆவியை அவமானபடுத்தினதை போல நீங்கள் செய்யபோகிறீர்களா. இதோ நான் இதை வார்த்தை எல்லாவற்றையும் முறியடித்தது. எல்லோரும் அழிந்து போனார்கள். ஆகவே, இது பொல்லாத காலமும், பொல்லாங்கின் நாளாகவும் இருக்கிறதினாலே, நீ என்னுடைய ஆவியினால் வழிநடத்தப்பட்டு என்னுடைய வார்த்தையோடு ஒத்துபோனால், வஞ்சிக்கபடமாட்டாய். ''இதோ, நானே உன்னை பாதுகாத்து காத்துக்கொள்வேன், உன்னை சத்தியமுள்ளவனாக வைப்பேன் மற்றும் என்னுடைய வருகையின் நாள் மட்டும் உன்னை புதுபிப்பேன்,“ ஆமென். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இங்குள்ளவர்களில் எத்தனை பேர் பெந்தெகொஸ்தேயினர்?பெந்தெகொஸ்தேயினரே, உங்கள் கரங்களையுயர்த்துங்கள். அநேகமாக எல்லோருமே. இங்குள்ள எத்தனை பேர் கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்கிறீர்கள்? நீங்கள் எங்கிருந்தாலும், கிறிஸ்தவர் என்று உரிமை பாராட்டுவோர் கைகளையுயர்த்துங்கள். அந்நிய பாஷை பேசுதலைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா? அது பழைய ஏற்பாட்டின் காலத்திலும் கூட நிகழ்ந்தது. வரப்போகும் முற்றுகையிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்வது என்று அவர்கள் திகைப்புற்றிருந்த நேரத்தில், ஆவியானவர்கள் ஒரு மனிதனின் மேல் இறங்கினார். அப்பொழுது அந்த மனிதன், அவர்கள் சத்துருவை எங்கு சந்திக்க வேண்டுமென்றும், சத்துருவை எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென்றும் தீர்க்கதரிசனம் உரைத்தான். அது பழைய ஏற்பாட்டின் காலத்தில், புதிய ஏற்பாட்டின் காலத்தை போலவே. 110யாராகிலும் ஒருவர், ''அந்த மனிதன், ஓ, அது அப்படியல்ல'' எனலாம். அது அப்படியிருக்குமானால்! நீங்கள், ''ஓ. அதை நான் முன்பு கேட்டிருக்கிறேன்'' என்று கூறுகின்றீர்கள். அது அப்படியிருக்குமானால்! பாருங்கள், இங்குள்ள அநேகருக்கு இருதய மாற்றம் அவசியமாயுள்ளது என்பதை அது நிரூபிக்கின்றது, பேசினது பரிசுத்த ஆவியாயிருந்தால். சில காரியங்கள் செய்ய வேண்டியது அவசியமாயுள்ளது? எனவே அது உங்களைப் பொறுத்தது. நான் பாவிதான். ஆனாலும், நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் வா என்று என்னை அழைத்தீர்... (அதை தான் இப்பொழுது அவர் செய்தார்) தேவாட்டுக்குட்டியே வந்தேன்! (நான் கல்லான இருதயத்தை எடுத்துப் போட்டு, எனக்குக் கீழ்ப்படிய சதையான இருதயத்தைக் கொடுப்பேன்'' பாருங்கள்?) நான் பாவிதான், என்னை ஏற்றுக்கொள்வீர், நீர்... (இன்றிரவு நீங்கள் தீர்மானம் செய்வீர்களா? நீங்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். கழுவி... (நீங்கள், அதை நான் முன்பு கேட்டிருக்கிறேன்'' என்கிறீர்கள். ஒருக்கால் இதுவே நீங்கள் கேட்கும் கடைசி முறையாக இருக்கலாம்.) உமது வாக்குத்தத்தத்தை நான் விசுவாசிப்பதால் (பழைய நாகரீகமான பீட அழைப்புகள், இப்பொழுது அவை கொடுக்கப்படுவதில்லை, ஆயினும் தேவன் அவைகளில் அசை வாடிக் கொண்டிருக்கிறார். சபையே, அது உன் மேல் அசைவாடுவதை உன்னால் உணர முடியவில்லையா?) .....வந்தேன். 111(சகோ. பிரான்ஹாம் நான் பாவிதான் என்னும் பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி). ஓ, சிந்தித்துப் பாருங்கள், இன்று இருதயங்கள் கல்லாகி உலகத்தினால் நிறைந்துள்ளன. சபை அங்கத்தினர்கள் சிரத்தையற்று, வெதுவெதுப்பாகி, ஐசுவரியமுள்ள வாலிப அரசனைப் போல் இருக்கின்றனர். பரிசுத்த ஆவியானவர் இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில், வாசற்படியில் நின்று கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை அறியாமலிருக்கிறார்கள். ''என் சத்தத்தை (வார்த்தையை கேட்டு, ஒருவன் தன் இருதயத்தை திறந்தால் நான் அவனிடத்தில் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன்.'' சில நிமிடங்களுக்கு முன்பு ஆவியானவர் இந்த சகோதரனின் மூலம் பேசி, ''நான் கல்லான இருதயத்தை உங்களிலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை - தேவனுக்கு முன்பாக மென்மையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்'' என்றார். தற்பொழுது எவ்வாறாகியுள்ளது என்று பாருங்கள் - புத்தி கூர்மை, உணர்ச்சி வசப்படுதல், பாருங்கள்? கிறிஸ்துவுக்காக அன்பினாலும், இனிமையினாலும் நிறைந்த மென்மையான இருதயம் அல்ல. (சகோ. பிரான்ஹாம் பல்லவியை மெளனமாக இசைக்கத் தொடங்குகிறார் - ஆசி) அப்படிப்பட்ட இருதயம் உங்களுக்கு வேண்டாமா? அவரைக் குறித்து அறிவில் கொண்ட கருத்துடன் அவரை எப்படி சந்திக்கப் போகின்றீர்கள்? நீங்கள் நித்திய ஜீவனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ...... இரத்தம் சிந்தினீர்.... (இரத்தத்தின் மூலம் ஆயத்தம் செய்யப்பட்டது) வா என்று என்னை அழைத்தீர்... ( அவர் என்ன செய்தார்? தமது இரத்தத்தை சிந்தினார். இப்பொழுது ''வா'' என்றழைக்கிறார்.) ஓ, தேவாட்டுக்குட்டி வந்தேன்! வந்தேன்! 112கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமது கரங்களை உயர்த்தி, அமைதியாக இப்பொழுது ஜெபம் செய்வோம். ஓ, தேவனே, கர்த்தாவே, நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாளை இறுகப் பிடித்துக்கொள்ளும். ஓ, பிதாவே, அது மிகவும் கடினமாயுள்ளது. சாத்தான் ஜனங்களுக்கு தீமையை விளைவித்துள்ளான். அவர்களுடைய இருதயங்கள் கல்லாகியுள்ளன. உமது ஆவி அதை வெளிப்படையாகக் கூறினது. உமது வார்த்தை முன்னால் வந்து தன்னை உறுதிப்படுத்துகின்றது. ஆனால், பழைமை நாகரீகமான மறுபடியும் பிறக்கும் அனுபவம் இப்பொழுது ஸ்தாபனங்களில் அறிவில் கொண்டுள்ள கருத்தாக மாற்றப்பட்டுள்ளது. நிறைய இசை, நிறைய சத்தமிடுதல் போன்றவை அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. உண்மையாகவே, அந்த சதையான இருதயம், அந்த ஆவி, அந்த நித்திய ஜீவன், சபைக்கு சம்பந்தமில்லாததாய் உள்ளது. தேவனே, அது என் இருதயத்தை பிளக்கிறது. நான் உமது கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவி, சபைக்காக நீர் மரித்தீர், சபையை மீட்டுக்கொள்ள நீர் முயன்று வருகிறீர், பிதாவே, சபையை இந்த நிலையில் காணும்போது, எனக்கு வருத்தம் உண்டாகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சபையைக் குறித்தும், மற்ற தேசங்களின் சபைகளைக் குறித்தும் எனக்கு நீர் அளித்த தரிசனத்தை நினைவு கூருகிறேன். அது, எவ்வளவு பயங்கரமான ''ராக் அண்டு ரோல்'' நிர்வாணிகளைக் கொண்டதாயிருந்தது. ஆனால், அங்கு ஏதோ ஓரிடத்திலிருந்து வேறொன்று ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் வருவதை நான் கண்டேன். பிதாவே, இன்றிரவு நித்திய ஜீவனுக்காக நியமிக்கப்பட்டவர்கள், இதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் யாராகிலும் இருந்தால், இப்பொழுதே அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இதை அருள்வீராக. கல்லான இருதயத்தை, உலகத்தைச் சார்ந்த அந்த பழைய இருதயத்தை, இப்பொழுதே உடைத்துப் போடும். அவர்களுக்கு சமாதானம் வேண்டுமானால், திருப்திபடுத்தும் ஒன்று அவர்களுக்கு வேண்டுமானால், உறுதி அளிக்கும் ஒன்று வேண்டுமானால் அவர்களை எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்துக்கும், சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷத்துக்கும், மரணம் கூட தீங்கு விளைவிக்க முடியாத ஒன்றுக்கும் வழி நடத்த கிறிஸ்துவை இன்றிரவு தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வாராக. பிதாவே, இதை அருள்வீராக. 113இப்பொழுது நமது கரங்களை உயர்த்தினவர்களாய்... இந்தக் கட்டிடத்திலுள்ள எத்தனை பேர், ''நான் நிற்கப்போகின்றேன்'' என்று கூறுவீர்கள்? உங்கள் பக்கத்தில் யார் உட்கார்ந்து கொண்டிருந்தாலும், எனக்குக் கவலையில்லை. உங்களுடன் பேசுவது தேவன். நீங்கள் உண்மையுள்ள கிறிஸ்தவராக உண்மையில் இருக்க விரும்புகிறீர்கள்... அதைக் காட்டிலும் குறைவுள்ளது எதுவுமே போலியாக உள்ளது. போலியாயிருப்பதை விட நான் சென்று உலகத்துடன் சம்பந்தப்பட்டிருக்க விரும்புவேன். நீங்களும் அவ்வாறே விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். வார்த்தையை, செய்தியை கொண்டு உங்களை சோதித்துப் பாருங்கள், உண்மையான கிறிஸ்தவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சோதித்தறியுங்கள்; கரடுமுரடாக, அன்புள்ளவனாக, நவீன கிறிஸ்தவ மார்க்கத்துடன் இணைந்திராதவனாக, நவீன கிறிஸ்தவ மார்க்கம் மிருதுவாயும், வளையக் கூடியதாகவும், பாதி மரித்ததாயும், அழுகினதாயும், இனக் கலவு செய்து கொண்டதாகவும் உள்ளது. பாருங்கள், அது உண்மையான கிறிஸ்தவ மார்க்கம் அல்ல. எந்த வழியிலும் வாழ்ந்து, சபையைச் சேர்ந்திருப்பது என்பது. கிறிஸ்துவுடன், பரிசுத்த ஆவியுடன் இனிமையான ஐக்கியம் உங்களுக்கு வேண்டாமா?... உங்கள் இருதயம் வார்த்தையுடன் இணங்கும் அந்த ஐக்கியம், கிறிஸ்துவுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். அதை நீங்கள் விரும்பினால், இந்த ஜனங்களின் மத்தியில் நீங்கள் கொண்டுள்ள உறுதியை தேவன் காண வேண்டுமென்று விரும்பினால், எழுந்து நில்லுங்கள். ''சகோ. பிரான்ஹாமே, இதற்கு ஏதாவது அர்த்தம் உண்டா?'' என்று நீங்கள் கேட்கலாம். ஓ, ஆமாம். நிச்சயமாக உண்டு. ''என்னைக் குறித்து நீங்கள் வெட்கப்பட்டால், நானும் உங்களைக் குறித்து பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் வெட்கப்படுவேன். ஆனால், மனுஷர் முன்பாக என்னை அறிக்கை செய்து எனக்காக இந்த தேசத்தில் எவன் உறுதியாய் நிற்கிறானோ, அவனுக்காக அந்த தேசத்தில் நான் உறுதியாய் நின்று, என் பிதாவுக்கு முன்பாக அவனை அறிக்கை பண்ணுவேன்.'' (லூக்; 9:26; 12:8) 114நீங்கள் யாராயிருந்தாலும், ஸ்திரீயோ, மனிதனோ, பையனோ, பெண்ணோ, யாராயிருந்தாலும் கிறிஸ்தவனோ, கிறிஸ்தவன் அல்லாதவனோ, போதகரோ, மூப்பனோ, நீங்கள் என்னவாயிருந்தாலும், உங்கள் முழு இருதயத்தோடும் சிறிது நேரம் விசுவாசித்து, நீங்கள் இதைக் குறித்து உத்தமமாய் இருக்கின்றீர்கள் என்று தேவனுக்குத் தெரியப்படுத்த எழுந்து நிற்பீர்களானால். ''தேவனே...'' நீங்கள், ''நான் பெந்தெகொஸ்தேயினன், நான் இது. நான் ஆவியில் நடனமாடுகிறேன். சகோ. பிரான்ஹாமே, அதை நாங்கள் செய்யும் வரைக்கும், அதை பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறலாம். இல்லை, நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை. நான் தேவனுடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் விசுவாசித்தால், என் வார்த்தைகளுக்கு செவி கொடுங்கள். பாருங்கள்? அது இந்நாளில் காணப்படும் வஞ்சகம். அது மிகவும் அருகாமையிலிருந்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று வேதம் கூறவில்லையா? தெரிந்துக்கொள்ள பட்டவர்கள், ''ஆத்துமாவின் ஆழத்தில்,'' நீங்கள் ஆவியில் நடனமாடி, அதே சமயத்தில் உலகத்தின் காரியங்களைக் கொண்டிருந்தால், ஏதோ தவறுள்ளது. நீங்கள் அந்நியபாஷையில் பேசினால்; பவுல், ''நான் அந்நிய பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், நான் இரட்சிப்படையாமல் இருக்கலாம்'' என்றான். உ,ஊ, இரண்டு விதமான பாஷைகள். பாருங்கள், ''நான் உணர்ச்சி மிகுதியினால் எல்லாவற்றையும் செய்யலாம். எனக்கு விசுவாசம் இருக்கலாம். நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கலாம். எனக்கு உண்டானயாவற்றையும் நான் அன்னதானம் பண்ணலாம், நான் தேவனுடைய வசனத்தை உலகம் பூராவும் சுவிசேஷம் போதிக்கப்பட வேண்டிய இடங்களுக்குக் கொண்டு செல்லலாம். இருந்தாலும் நான் ஒன்றுமில்லை“ என்கிறான். பாருங்கள், அது உள்ளிலும் உள்ளே, சகோதரனே... நீ மரிக்கும் போது, உன் ஆவி பிரிந்து பறந்து சென்றுவிடுகின்றது. ஆனால், உன் ஆத்துமாவோ ஜீவிக்கிறது. பாருங்கள்? 115உங்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் தேவனுடைய அன்பினால் நிறைந்த, உண்மையான வேத கிறிஸ்தவனா? கடைசி நாட்களில், இது நடக்கும் போது, அடையாளம் போடும் தூதன் ஒருவன் சபைகள் எங்கும், நகரங்கள் எங்கும் சென்று, நகரத்தில் காணப்படும் சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுகிறவர்களை மாத்திரம் முத்தரித்தான் என்று வேதம் கூறுகின்றது. அது சரியா? அது, எசேக்கியல் 9ம் அதிகாரம். அது உண்மையென்று நாமறிவோம். அடையாளம் போடும் தூதன் சென்று, அவர்களுடைய நெற்றிகளில் அடையாளம் போட்டு, அவர்களை முத்தரித்தான். “பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில்'' (எசே;9:4). அதன் பின்பு சங்காரத் தூதர்கள் பூமியின் நான்கு முனைகளிலுமிருந்து புறப்பட்டு வந்தனர். அது, இப்பொழுது வந்து கொண்டிருக்கிறது. அது வந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். யுத்தங்கள் உண்டாகி, பூமி முழுவதையும் கொன்று போடும். நெற்றியில் அடையாளம் போடப்பட்டவர்களைத் தவிர, அவர்கள் தொடக்கூடாது வேறொன்றுமில்லை. இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் இருதயம் பாவிகளுக்காகவும், சபையும் மக்களும் புரியும் செயல்களுக்காகவும் கவலைப்பட்டு, நீங்கள் இரவும், பகலும் பெருமூச்சுவிட்டு அழுது கொண்டிருக்கிறீர்களா? அப்படி இல்லாமல் இருக்க முடியாது. ஏனெனில், வேதம் அவ்வாறு உரைத்துள்ளது. 116நீங்கள் எழுந்து நின்று, ''அன்புள்ள தேவனே, சகோ. பிரான்ஹாம் நிற்கச் சொன்னதனால் நான் நிற்கவில்லை. வார்த்தை அவ்வாறு கூறினதால், இப்பொழுது நான் எழுந்து நிற்கப் போகின்றேன். கர்த்தாவே, நான் உம்மிடம் நிற்கிறேன். ஆண்டவரே, எனக்கு தேவையுள்ளது. இன்றிரவு இந்த இடத்தில் என் தேவைகளை அருள்வீரா? நான் நிற்கிறேன்,“ என்று கூறுங்கள். கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. ''எனக்குத் தேவையுண்டு. என் மேல் இரக்கமாயிருக்க வேண்டிக் கொள்கிறேன்'' கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. ''நான் நல்ல கிறிஸ்தவனாக.... கவனியுங்கள், உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர் உங்களைப் போலவே ஒருவர். நீங்கள் உங்கள் கரங்களை நீட்டி அவர்களுடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு, ''சகோதரனே, சகோதரியே, எனக்காக ஜெபியுங்கள், எனக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். கிறிஸ்தவ உத்தமத்துடன் அதை கூறுங்கள். ''எனக்காக ஜெபியுங்கள். நான் தேவனுடன் சரியாக இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். உங்களுக்கு தேவன் அந்த தருணம் அளிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்'' என்று கூறுங்கள். எனக்குத் தெரியும், நாம் இவ்வுலகில் நாம் இன்னும் நீண்ட காலம் தங்கியிருக்க முடியாது. அதை நாம் காண்கிறோம். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். அதை நம்புகிறவர்கள் அனைவரும், ''ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி. நாம்... இனி நடக்க வேண்டியது ஒன்றுமில்லை. எல்லாமே முடிந்துவிட்டது. சபைகள் உலக சபைகள் ஆலோசனை சங்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. உலகம். 117இங்கு கவனியுங்கள்! லாஸ் ஏஞ்சலிஸைக் குறித்தும், மற்ற இடங்களைக் குறித்தும் கர்த்தர் என்ன உரைக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? ''அவள் முடிந்துவிட்டாள். ''கனடாவிலும், அலாஸ்காவிலும் நிலவதிர்ச்சி ஏற்படும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் உங்களிடம் கூறினது நினைவிருக்கிறதா? நான் இதையும் உங்களிடம் கூறுகிறேன். “ஹாலிவுட்டும், லாஸ் ஏஞ்சலீசும் நகர்ந்து சமுத்திரத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது. கலிபோர்னியாவே, நீ அழிந்து போவாய்! கலிபோர்னியா மாத்திரமல்ல. உலகமே நீ அழிந்துபோவாய்! சபையே நீ தேவனிடம் உன்னை சரிபடுத்திக் கொள்ளாவிட்டால், நீயும் அழிந்துபோவாய்! இது பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது. அந்த நாமத்தை உபயோகித்து நான் கூறினதை நீங்கள் கேட்டு, அது இதுவரை நிறைவேறாமல் போனதுண்டா? உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். என்னை இருபது ஆண்டு காலமாக நீங்கள் அறிவீர்கள். கர்த்தருடைய நாமத்தில் நான் உரைத்த ஏதாகிலும் நிறைவேறாமல் இருந்ததுண்டா? நான் உங்களிடம் கூறினவை அனைத்தும் நிறைவேறியிருந்தால், ''ஆமென்'' என்று கூறுங்கள். (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) பாருங்கள்! நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இதுவே, அந்த மணி நேரம், நீங்கள் தேவனுடன் சீர்படுங்கள், நாம் எல்லோருமே. இப்பொழுது, ஒவ்வொவருவரும் மற்றவருக்காக ஜெபிப்போம்: 118அன்புள்ள தேவனே, நாங்கள் மரித்துக் கொண்டிருக்கும் ஜனங்களாக இன்றிரவு நின்று கொண்டிருக்கிறோம். எங்கள் முகங்கள் பூமியின் மண்ணை நோக்கியிருக்கின்றன. இப்பொழுது... கர்த்தாவே, எங்கள் இதயங்களை பிளக்கும் பிரசங்கத்தை எங்களுக்கு இப்பொழுது தந்தீர். நாங்கள் இரண்டு பேர்களின் உதாரணங்களைப் பார்த்தோம். அவர்களின் ஒருவன், மிகவும் பக்தியுள்ளவன். அவன் சபைக்குச் சென்றான், ஆனால், நித்திய ஜீவனின் வழி நடத்துதலை புறக்கணித்தான். மற்றவனோ உலகப் புகழை புறக்கணித்து, நித்திய ஜீவனுக்குத் திரும்பினான். அவர்கள் இருவருடைய நிலையையும் வேதத்தில் கூறியுள்ளபடி இன்றிரவு நாங்கள் காண்கிறோம். ஐசுவரியவான் வேதனைப்படுகிறான். மோசே மகிமையில் இருக்கிறான். பிதாவே, நாங்கள் மோசேயைப் போல இருக்க விரும்புகிறோம். உமது பரிசுத்தமுள்ள குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் நித்திய ஜீவனுக்கு நாங்கள் வழிநடத்தப்பட விரும்புகிறோம். கர்த்தாவே, இன்றிரவு அதை எங்கள் இருதயத்தில் தாரும். அந்த பழைய கல்லான இருதயத்தை நீர் உடைத்துப் போட்டு, புதிய இருதயத்தை, சதையான இருதயத்தை, எங்களுடன் நீர் பேசி தொடர்பு கொள்ளக் கூடிய இருதயத்தை எங்களில் வைத்து, நாங்கள் அகந்தையில்லாதவர்களாய் இருக்கும்படி செய்யும். கர்த்தாவே, எங்களை விட்டு எப்பொழுதும் விலகாமல் இருப்பீராக. அவர் இறங்கி வந்து இந்த ஜனங்களை அபிஷேகிப்பாராக. அவர்களுடன் பேசும். அவர்களுடைய கல்லான சித்தத்தை உடைத்தெறிந்து, தேவனுடைய சித்தத்தை அவர்களுக்குள் வைப்பீராக. பிதாவே, ஒவ்வொருவரையும் இரட்சியும். உமது அன்பை எங்களுக்குத் தாரும். கர்த்தாவே, உணர்ச்சிவசப்பட்ட பாகத்தை விட்டு நாங்கள் விலகி, அந்த உண்மையான, திடமான பாகத்துக்கு, இருதய உணர்வு கொண்ட பாகத்துக்கு, ஆவியின் ஆழத்துக்கு நாங்கள் வந்து, தேவனுடைய ஐசுரியத்தையும், ஆவியின் ராஜ்யத்தையும் எங்கள் இருதயங்களில் கொண்டுள்ள அப்படிப்பட்ட நிலையை நாங்கள் அடையும்படி செய்யும். ஓ, மகத்தான தலைவரே, மகத்தான பரிசுத்த ஆவியே, உம்முடைய சபையுடன் நீர் வானங்களுக்கு பறந்து செல்வதற்கு முன்பு இதை அருள்வீராக. 119ஓ தேவனே, நானும் செல்லட்டும், ஆண்டவரே. இயேசுவே, என்னை விட்டு சென்றுவிடாதேயும், பிதாவே உம்முடன் நான் செல்லட்டும். வரப்போகும் உபத்திரவங்களைக் காண நான் இவ்வுலகில் தங்கியிருக்க விரும்பவில்லை. இந்த பைத்தியக்காரத்தனத்தின் மத்தியில் தங்கியிருக்க எனக்கு விருப்பமில்லை, பயங்கரமான காட்சிகளை இங்கு நின்று கொண்டு காண நான் விரும்பவில்லை..... ஜனங்களுக்கு மூளைக் கோளாறு ஏற்படுவதை. மனிதன் மிருகங்களைப் போல் நடந்து கொள்ளவும் மிருகங்களைப் போல் காணவும் முயல்வதை நாங்கள் காண்கிறோம். ஸ்திரீகள் முகங்களில் வர்ணம் தீட்டிக் கொண்டு, மிருகங்களைப் போல் காணப்பட முயல்கின்றனர். இவையாவும் சம்பவிக்குமென்று முனன்னுரைக்கப்பட்டுள்ளதென்று நானறிவேன். அவர்களுக்கு பைத்தியம் பிடித்து, வெட்டுக்கிளிகள் ஸ்திரீகளைப் போன்ற தலைமயிர் கொண்டு எழும்பி வந்து ஸ்திரீகளை துன்புறுத்தும். அவைகளுக்கு சிங்கங்களைப்போன்ற பற்கள் இருக்கும். இவைகளை நீர் கூறியுள்ளீர். ஜனங்களுடய பக்தி நிலைமுற்றிலுமாக மாறி, அவர்களுக்கு புத்தி மாறாட்டம் ஏற்படும். கர்த்தாவே, அது ஏற்கனவே உருவானதை நாங்கள் காண்கிறோம். ஆண்டவரே, எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் தெளிந்த புத்தியை எங்களுக்கு திரும்ப அளியும். ஓ, நித்திய ஜீவனின் மகத்தான தலைவரே, உமது வாக்குத்தத்தத்தை இன்றிரவு நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பிதாவே, இந்த ஜனங்களுக்காக நான் மன்றாடுகிறேன். கர்த்தாவே, இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மன்றாடுகிறேன். தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து எங்கள் ஒவ்வொருவருடைய இருதயங்களில் வந்து, எங்களை இயேசு கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக மாற்ற வேண்டுமென்று ஜெபிக்கிறேன் தேவனாகிய கர்த்தாவே, இதை அருள்வீராக. நாங்கள் உம்மை நேசிக்கிறோம். எங்களுடைய நடத்தையில் மாறுதல் ஏற்பட்டு, நாங்கள் உமது பிள்ளைகளாயிருக்கவும், எங்கள் இருதயங்களில் உமது ஆவி அசைவாடுவதை நாங்கள் உணரவும், நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பைத்தியம் பிடித்த காலத்தை அறிந்து கொள்ளவும் எங்களுக்கு உதவி புரியும். வாலிபப் பெண்கள் பிசாசின் வலையில் சிக்கியிருப்பதையும், வாலிபர்களுக்கும், பிள்ளைகளுக்கும் தாறுமாறான நிலை ஏற்பட்டு அவர்கள் போதை மாத்திரைகளுக்கு அடிமையாயுள்ளதையும், சிகரெட்டு புகைப்பதையும், மது அருந்துவதையும், நடத்தை கெட்டு நடப்பதையும் நாங்கள் காணும் போது, இது சாத்தானின் ஏதேன் என்பது விளங்குகின்றது. தேவனே, ஏதேனை உருவாக்குவதற்கு உமக்கு ஆறாயிரம் ஆண்டுகள் பிடித்ததென்று வேதம் கூறுகின்றது. அதை ஆள உமது குமாரனையும் அவனுடைய மனைவியையும் (அவனுடைய மணவாட்டியை) அங்கு வைத்தீர். சாத்தான் அங்கு வந்து அதை தாறுமாறாக்கிப் போட்டான். இப்பொழுது, சாத்தானுக்கு விஞ்ஞானம், கல்வி, ஞானம் என்று அழைக்கப்படுதல் போன்றவைகளின் மூலம் அவனுடைய சொந்த, புத்தி கூர்மையுள்ள ஏதேனை உருவாக்க அவனுக்கு ஆறாயிரம் ஆண்டுகள் இருந்து வந்துள்ளன. அவன் சீர்குலைந்த, மரணத்துக்கேதுவான ஏதேனை உருவாக்கியுள்ளான். ஓ தேவனே, மறுபடியுமாக எங்களை ஏதேனுக்கு அழைத்து செல்லும். அங்கு மரணம் இருக்காது. துயரம் இருக்காது. ஆண்ட வரே, இதை அருளும். நாங்கள் தாழ்மையுடன், இரண்டாவது ஆதாம் தமது மணவாட்டிக்கு வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் பிதாவே, எங்களை அவருடைய ஒரு பாகமாகச் செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். 120நீங்கள் தேவனை நேசிக்கிறீர்களா?... நான் உங்களிடம் என்ன கூற முயல்கிறேன் என்பதை உணருகிறீர்களா? அதை புரிந்து கொண்டால், கைகளையுயர்த்தி, ''நீங்கள் கூற முயல்வதை நாங்கள் புரிந்து கொண்டோம்'' என்று கூறுங்கள். இக்காலத்தின் பைத்தியத்தன்மையை உங்களால் காண முடிகிறதா? அது எங்கு சென்றுவிட்டதென்று பாருங்கள். ஜனங்களிடையே ஆலோசிக்கும் தன்மையும் கூட காணப்படவில்லை. அது போய்விட்டது. நமது... எங்கே? நமது தலைவர்களும் கூட. நமது ஜனாதிபதியைப் பாருங்கள். “ஜனங்களுக்கு கம்யூனிஸம் வேண்டுமானால், அதை ஏற்றுக் கொள்ளட்டும். ஜனங்களுக்கு விருப்பமானது எதுவானாலும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளட்டும்'' என்கிறார் அவர். நம்முடைய பாட்ரிக் ஹென்றிகளும் ஜார்ஜ் வாஷிங்டன்களும் எங்கே? ஒரு கொள்கைக்காக உறுதியாய் நின்ற நமது தலைவர்கள் எங்கே? நமக்கு அப்படிப்பட்டவர்கள் இப்பொழுது இல்லை. நமது சபைகள். நமது போதகர்கள் எங்கே தவறான செயல்களைப் புரியாதபடிக்கு தடை செய்யும்... ஒரு சபையை சேர்ந்து கொள்ளுங்கள். இதை செய்யுங்கள், சிறிது உணர்ச்சி பெறுங்கள் என்று கூறுகின்றனர். உலகத்தின் காரியங்களுக்கு தைரியமாய் எதிர்த்து நிற்கக் கூடிய தேவனுடைய மனிதர், அந்த தீர்க்கதரிசிகள் எங்கே? நேர்மையுள்ள மனிதர்கள் எங்கே? இப்பொழுது அவர்கள் எங்குள்ளனர்? இப்பொழுதுள்ளவர்கள் மிருதுவாகவும், அறிவினால் விளைந்த கருத்துக்களை உடையவர்களாகவும் உள்ளனர். மற்றவர்கள் இப்பொழுது இல்லவே இல்லை. ஓ, தேவனே, எங்கள் மேல் கிருபையாயிரும். 121உலகத்தில் வந்து கொண்டிருக்கும் பயங்கரமான காட்சிகள். ஜனங்கள் அதற்குள் எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை நீங்கள் காணலாம். அது ஒருவிதமான மூளை கோளாறு. ஆனால் அது நிகழும்போது, சபை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். தேவனே, நாங்கள் அங்கிருக்கட்டும். அதுவே இன்றிரவு இக்கட்டிடத்திலுள்ள இயற்கைக்கு மேம்பட்டவரான, நித்திய ஜீவனை இன்னமும் கொண்டுள்ள கிறிஸ்துவினிடம் நான் ஏறெடுக்கும் ஜெபமாகும். கிறிஸ்துவே, திறக்கப்பட்ட என் கண்களுடன் இங்கு இருந்து கொண்டு, உமது இரத்தத்தினால் நீர் மீட்டுக் கொண்ட உமது சபைக்காக வேண்டுதல் செய்கிறேன். தேவனே, நாங்கள் ஒருவராவது இழந்து போக வேண்டாம். நாங்கள் உம்முடனே கூட இருக்க விரும்புகிறோம். எனவே, ஓ தேவனே, எங்கள் அக்கிரமம் எல்லாவற்றினின்றும் எங்களை சுத்திகரியும். எங்கள் பாவங்களை போக்கும். நீர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினதையும், மரித்தோரையும் கூட உயிரொடெழுப்பினதையும் (ஜெபத்தின் மூலம் அவர்கள் உயிரடைந்தார்கள். நாங்கள் கண்டிருக்கிறோம். இவையனைத்தும் நாங்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இப்பொழுது, ஆவிக்குரிய பிரகாசமாக எங்களை உயிரோடெழுப்பும். கிறிஸ்துவின் மூலம் கிடைக்கப்பெறும் நித்திய ஜீவனின் உணர்வுக்கு எங்களை மீண்டும் கொண்டு வாரும். பிதாவே, இதை அருளும். இவையனைத்தையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை இயேசுவின் பாதங்களில் நாம் சந்திக்கும் வரை .....நாம் சந்திக்கும் வரை (அவரை நோக்கிப் பாருங்கள்) அவர் உங்களை மிருதுவாக்கட்டும்)... சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை, தேவன் உங்களுடன் இருப்பாராக. இப்பொழுது கரங்களை உயர்த்துவோம் நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை. .................